சமூக அபிவிருத்தியும் அதிகாரமும்
வேலை செய்ய விருப்பமில்லாத சனத்தின் மத்தியில்
முதலிட எந்த முதலீட்டாளன் முன்வருவான்?
- ஜூட் பிரகாஷ் – மெல்பேர்ண்
“ஐயர் வரும்வரை அமாவாசை காத்திராது” என்பார்கள்; அபிவிருத்தியும் அதிகாரமும் அப்படித் தான். போர் முடிவடைந்து நாங்கள் கடந்திருக்கும் பதினாறு ஆண்டுகள் எங்களிற்கு உரத்துப் பறைந்து கொண்டிருக்கும் செய்தியும் இது தான்.
சமூக அபிவிருத்திக்கு அதிகாரம் கட்டாயம் தேவையா? இருக்கும் அற்ப சொற்ப அதிகாரங்களையே உருப்படியாக பிரயோக்கத் தெரியாமல் இருக்கும் நாங்கள், அதிக அதிகாரம் கிடைத்தால் தான் அபிவிருத்தியை கையில் எடுப்போம் என்ற திடசங்கற்பத்தில் லயித்திருப்பது ஆரோக்கியமானதா?
சமூக அபிவிருத்தி என்றால் என்னடாப்பா? ளுiஅpடந ஆக சொல்ல வேண்டும் என்றால், எண்பதுகளின் நடுப்பகுதியில் போர் தீவிரமடைய தொடங்க முதல், யாழ்ப்பாணம் எப்படி இருந்ததோ, அதே நிலைமைக்கு நாங்கள் திரும்புவது தான் சமூக அபிவிருத்தி. அந்தக்காலத்தில் கல்வியிலும் கலைகளிலும் விளையாட்டிலும் ஒழுக்கத்திலும் கட்டுபாட்டிலும் சுகாதாரத்திலும் தொழில்துறையிலும் பொருளாதாரத்திலும் பணத்திலும் வளத்திலும் கொழும்பிற்கு அடுத்த நிலையில் யாழ்ப்பாணம் இருந்தது.
குப்பை போடாமல் இருக்கவும், குப்பை அள்ளவும் சமஷ்டி தேவையா?
அண்மையில் டுழநெடல Pடயநெவ யாழ்ப்பாணத்தை 2026 ஆம் ஆண்டில் உலகில் சுற்றுலா செல்ல வேண்டிய 25 இடங்களில் ஒன்றாக பரிந்துரைத்திருக்கிறது. டுழநெடல Pடயவெ இன் அறிவிப்பை நம்பி யாழ்ப்பாணம் வரப்போகும் வெளிநாட்டவரை வரவேற்க ஆவலோடு காத்திருப்பது, யாழ்ப்பாணத்தில் வீதிக்கு வீதி, முடக்கிற்கு முடக்கு குவிந்திருக்கும் குப்பை கூளங்கள் தான். குப்பை போடுவதும் நாங்களே அந்தக் குப்பை அள்ளும் மேலாண்மை அதிகாரத்தை வைத்திருப்பதும் நாங்களே. அப்ப ஏன் எங்கள் நகரத்தை எங்களால் தூய்மையாக வைத்திருக்க முடியாது? குப்பை போடாமல் இருக்கவும் குப்பை அள்ளவும் சமஷ்டி தேவையா?
ஒரு காலத்தில் சென்னை நகரை பார்த்து “குப்பை நாறும்” என்று பழித்த யாழ்ப்பாணத்தவர்கள், இன்று சென்னை அடைந்திருக்கும் முன்னேற்றத்தையும் தாங்கள் அடைந்திருக்கும் பின்னடைவையும் நினைத்து வெட்கிக்க வேண்டும். அதிகாரத்தில் இருந்தும் நகரை சுத்தமாக்க முடியாமல் திணறும் உள்ளூராட்சி சபைகளை உதாசீனப்படுத்தி விட்டு, தன்னார்வமாக நகரை சுத்தமாக்கும் முன்னெடுப்புக்களை வெற்றிகரமாக செயற்படுத்த எங்களிடம் என்ன வளம் இல்லை? யாழ்ப்பாணத்தார் அடக்கியே வாசிக்கும் எங்கள் பிள்ளைகளை பீடித்திருக்கும் போதை பாவனைக்கு ஆமியை குற்றம் சாட்டுவதை விட்டு விட்டு, போதை பாவனையில் இருந்து எங்கள் பிள்ளைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் போதைக்கு அடிமையான பிள்ளைகளிற்கு மறுவாழ்வு அளிக்கவும் செயற்திட்டங்களை உருவாக்கி செயற்படுத்த மாகாண சபைகள் வரும் வரை காத்திருக்க வேண்டுமா?
புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலிட முன்வர வேண்டும் என்று தோழர் அநுரவின் அரசு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறது, வடக்கில் முதலிடப்படும் முதலீடுகளிற்கு விசேட வரிச்சலுகையும் அமுலில் இருக்கிறது. நல்ல விஷயம், ஆனால் கடந்த பதினாறு ஆண்டுகளில் முதலிடப்பட்டிருக்கும் முதலீடுகளின் நிலைமை என்ன என்று தெரியுமா? யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல தொழில் முயற்சிகளில் வேலை செய்ய யாழ்ப்பாணத்தில் ஆட்கள் இல்லை. அப்படியே வேலைக்கு வந்தாலும் அவர்கள் வேலையில் நிலைத்து நிற்பதில்லை. வேலையில் நாட்டமில்லாத ஒழுங்கு முறையாக வேலை வந்து வேலை செய்ய விருப்பமில்லாத சனத்தின் மத்தியில் முதலிட எந்த முதலீட்டாளன் முன்வருவான்?
இந்த பிரச்சினையை தீர்க்க, பள்ளிக் கல்வியை முடிக்கும் எங்கள் பிள்ளைகளிற்கு முறையான உயசநநச பரனையnஉந அளித்து, ஆங்கில மொழிப் பயிற்சியும் வேலைத்தளங்களில் வேலை செய்ய தேவையான அடிப்படை றழசமiபெ ளமடைடள பயிற்சியும் ஒழுங்குபடுத்தி செய்வதற்கு அரசியலமைப்பின் பதின்மூன்றாம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டுமா? இதில் பகிடி என்னென்றால், இந்த சமூக அபிவிருத்தி திட்டங்களை சமூக நலனில் அக்கறை கொண்ட தனிநபர்கள் சிறிய அளவில் எப்பவோ செய்ய தொடங்கி விட்டார்கள். லுயசட ஐவு ர்ரடிஇ துயககயெ ளுவயடடழைளெஇ குடயப குழசரஅஇ ஐயமிட்டூண், ந-மயடஎi போன்ற பல அமைப்புக்களின் செயற்பாடுகளை உற்று நோக்கினால் இந்தக் குட்டி குட்டி செயற்பாடுகள் சாதிக்க விளையும் பாரிய தாக்கங்களின் பெறுமதியை உணர்வீர்கள்.
கிரிக்கெட்டில் வியாஸ்காந்தும் அபினா{ம் இலங்கை அணியில் இடம்பிடிக்க முட்டி மோதுமளவிற்கு வளர்த்து விட்டதும், ஊக்குவித்துக் கொண்டிருப்பதும் எம்மவர்களின் கட்டுபாட்டில் இருக்கும் யாழ்ப்பாண கிரிக்கெட் வாரியம் அல்ல துயககயெ ளுவயடடழைளெ அமைப்பு. இலங்கை ரு19 கிரிக்கெட் அணிக்கு ஆடும் மாதுளனின் திறமையை வெளிக்கொணர்ந்ததும் தமிழ் இளைஞர்களிற்காகவே, கொழும்பில் ஆநசஉயவெடைந வழரசயெஅநவெ இல் தனியான அணியை களமிறக்கி இருப்பதும் துயககயெ ளவயடடழைளெ தான்; யாழ்ப்பாண கிரிக்கெட் வாரியம் அல்ல.
யாழ்ப்பாண சமூகத்தில் நிலவும் இம்மாதிரியான சமூக பிரச்சினைகளை தீர்க்கவல்ல ஒரு பொறிமுறையை அமைத்து அமுலாக்கவல்ல வல்லுமையும் ஆற்றலும் வளங்களும் எங்களிடம் இருக்கிறது. எங்கள் நகரங்களிலும் கிராமங்களிலும் சிறு சிறு குழுக்களாக மக்களுடன் கதைத்து மக்களின் சிறு சிறு தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு வந்தாலே எங்கள் சமூகம் முன்னேறத் தொடங்கி விடும், தொடங்கும். இவ்வாறான சமூக அபிவிருத்தி செயற்பாடுகளை அரசியலிற்கு வரவிரும்பும் அடுத்த தலைமுறை செய்யத் தொடங்கினால் அடுத்த தேர்தலில் பெரும் பிரச்சார பிரயத்தனம் இல்லாமலே தேர்தலில் வென்று விடலாம்.
![]()
