ஜெர்மனியில் உங்கள் வாழ்க்கை.
செய்தி 01படம்
ஜெர்மனியின் நீண்டகால பராமரிப்பு தேவையுடையோரின் எண்ணிக்கை
சில ஆண்டுகளில் கிட்டத்தட்ட இருமடங்காக உயர்வு!
ஜெர்மனியில் நீண்டகால பராமரிப்பு தேவைப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்து உள்ளது. டீயசஅநச ஊயசந சுநிழசவ வெளியிட்ட தகவல்படி, 2015ஆம் ஆண்டில் மூன்று மில்லியனாக இருந்த பராமரிப்பு சார்ந்த நபர்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 5.7 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், வெறும் எட்டு ஆண்டுகளுக்குள் பராமரிப்பு தேவையுடையோரின் எண்ணிக்கை இருமடங்குக்கு அண்மித்த அளவுக்கு உயர்ந்திருப்பது தெரிய வருகிறது.
இந்த உயர்வு முழுவதும் சமூகத்தின் முதிர்ச்சியால் ஏற்பட்டதல்ல. மக்கள் தொகையில் வயதானோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒரு காரணமாக இருந்தாலும், இந்த வெகுஜன உயர்வுக்கு முக்கிய காரணம் 2017 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த பராமரிப்பு சீர்திருத்தமாகும். இந்த சீர்திருத்தத்தின் மூலம் பல்வேறு நோய்களுக்கு உள்ளான நோயாளிகள் பராமரிப்பு சார்ந்தவர்களாக வகைப்படுத்தப்படுகின்றனர். இதனால், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் தற்போது பராமரிப்பு காப்பீடு மற்றும் சேவைகளுக்கு தகுதியானவர்களாக கருதப்படுகின்றனர்.
இந்த வளர்ச்சி, ஜெர்மனியின் பராமரிப்பு காப்பீட்டு அமைப்பில் ஆழமான நிதி சுமையை ஏற்படுத்தி வருகிறது. நாட்டின் பராமரிப்பு அமைப்பை சீரமைப்பதற்கான வேண்டுகோள்கள் மீண்டும் எழுந்துள்ளன. அதிகரித்து வரும் தேவையையும், நிதி தட்டுப்பாட்டையும் சமாளிக்க, அமைப்பில் முக்கியமான மாற்றங்கள் அவசியமென நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மொத்தத்தில், ஜெர்மனியில் பராமரிப்பு தேவையுடையோரின் எண்ணிக்கையில் ஏற்பட்ட இத்தகைய வேகமான உயர்வு, நாட்டின் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்புகளின் மீது எதிர்கொள்ள வேண்டிய கடினமான சவால்களை வெளிப்படுத்துகிறது.
![]()
