பெண்களைப் பிடித்து பாலியல் அடிமைகளாக பன்னிரெண்டு டாலர்களுக்கு விற்றனர்!
போகோ ஹாரம், ஐஎஸ்ஐஎஸ் உருவாக்கத்தில்
மொசாட், சிஐஏ பின்னணி என குற்றச்சாட்டு ?
——————————————————-
- ஐங்கரன் விக்கினேஸ்வரா
போகோ ஹாரம், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளின் உருவாக்க பின்னணியில் மொசாட், சிஐஏ (ஊஐயு ரூ ஆழளளயன) என சூடான் முன்னாள் ஜனாதிபதி அதிர்ச்சிகர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அமெரிக்க உளவு அமைப்பு ஊஐயு,மற்றும் இஸ்ரேலின் ஆழளளயன உளவு அமைப்புகள் போகோ ஹாரம் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் போன்ற குழுக்களுக்கு பின்னால் செயல்பட்டன என்று அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டையே அவர் முன்வைத்துள்ளார்.
இந்த கூற்றுக்கள் உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் எழுப்பியுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் குறித்து அமெரிக்கா, இஸ்ரேல் எடுத்துவரும் நிலைப்பாடு குறித்து பல நாடுகள் கேள்வி எழுப்பி வரும் சூழ்நிலையில்,இந்த குற்றச்சாட்டு மேலும் சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் இதுகுறித்து அமெரிக்கா அல்லது இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் வெளியிடவில்லை.
போகோ ஹராம் உருவாக்கம் :
2014இல் நைஜீரியாவின் தொலைதூர கிராமமான சிபோக்கில் உள்ள பள்ளியிலிருந்து 276 மாணவிகளைக் கடத்திச் சென்றதன் மூலம் பரபரப்பாகப் பேசப்பட்ட அமைப்பு இதுவாகும். மதத்தின் பெயரால் வன்முறையை தூண்டிய போகோ ஹராம் எனும் தீவிரவாத அமைப்பின் பெயரை யாரும் இலகுவாக மறந்திருக்க முடியாது.
2002இல் நைஜீரியாவின் போர்னோ மாநிலத் தலைநகரான மைதுகுரியில் முகம்மது யூசுஃப் எனும் மதகுருவால் போகோ ஹராம் இயக்கம் முதலில் தொடங்கப்பட்டது. பெண்கள் கல்வி பயிலக் கூடாது, ஆண்கள் மதக் கல்வியைத் தான் மட்டுமே பெற வேண்டும், இஸ்லாமியச் சட்டப்படி தான் ஆட்சி நடக்க வேண்டும், அனைவரும் இஸ்லாமிய மதத்தைத் தழுவ வேண்டும் எனும் குறிக்கோள்களுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்புக்கு அல்-கொய்தா அமைப்பு துணை நின்றதும் உண்மையே.
ஆபிரிக்க நாடுகளில் பரவிய இந்தக் குழுவின் வன்முறைகளால் இதுவரை 30,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல இலட்சக்கணக்கானோர் அகதிகளாகியிருக்கின்றனர். இந்த அமைப்பு உருவானதன் பின்னணியில் பல்வேறு காரணிகள் உண்டு.
நீண்டகாலம் ராணுவ ஆட்சியின் கீழ் இருந்த நைஜீரியாவில், 1979இல் அதிபர் சேஷ_ சகாரியின் தலைமையில் ஜனநாயக அரசு அமைந்தது. எனினும் அது நீண்டகாலம் நிலைக்கவில்லை. 1983இல் நடந்த இராணுவப் புரட்சிக்குப் பின்னர் மீண்டும் சர்வாதிகார ஆட்சியின் கீழ் அந்நாடு வந்தது.
ஆயினும் பின்னர் 1999இல் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்குப் பின்னர் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியது. நைஜீரியாவின் மக்கள் தொகையில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஏறத்தாழ சமமான எண்ணிக்கையில் உள்ளனர். இரு தரப்புக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்வதுண்டு.
1999இல் நைஜீரியாவில் மதசார்பற்ற ஜனநாயக அரசு ஆட்சி அமைந்தது. இஸ்லாமிய மதக் கொள்கைக்கு ஆபத்து நேரலாம் எனும் அச்சத்தை இஸ்லாமிய அமைப்புகளுக்கு ஏற்படுத்தியது. அதன் அடிப்படையில் நைஜீரியாவின் பெரும்பாலான மாநிலங்கள் ஷரியா சட்டத்தை அமல்படுத்தின. இதைத் தொடர்ந்து இரு தரப்பு மத மோதல்கள் மேலும் அதிகரித்தன.
அந்தக் காலகட்டத்தில் தான் ‘ஜமாஅத் அல் அஸ் சுன்னா லிட்-டவா வல்-ஜிஹாத்’ எனும் அமைப்பை யூசுஃப் தொடங்கினார். இந்த அமைப்புதான் நாளடைவில் ‘போகோ ஹராம்’ என்று அழைக்கப்பட்டது. ‘போகோ’ என்றால் மதச்சார்பற்ற கல்வி என்றும், ‘ஹராம்’ என்றால் (பாவச்செயல்) என்றும் அர்த்தப்படும்.
அதிக குழந்தை பெற கோரிக்கை:
அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாத் புனிதப் போரைத் தொடர்ந்து நடத்துதல், போன்றன பொகோ ஹரமின் கவர்ச்சியான திட்டம் ஆகும்.
மேலும் பெண்கள் ஜிஹாதிகளாக மாறும் முறையும், மேற்கத்தைய படிப்பு முறை தேவையில்லை, அதை சொல்லிக் கொடுக்கும் பள்ளிகளை குண்டு வைத்து தகர்ப்போம், சிறுமிகள் மற்றும் பெண்கள் படிக்க வேண்டிய அவசியல் இல்லை என்றும் அவர்கள் கூறினர். அவர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்றால் தடுக்கப்படுவர், மீறீனால் சுட்டுத்தள்ளப்படுவர் என்றுதான் இன்றளவும் இத்தகைய ஜிஹாதிக் குழுக்கள் நடந்து கொண்டு வருகின்றனர்.
ஆபிரிக்காவில் பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் படிப்பறிவு பெற்று கொள்ளாமல் தான் இருக்கின்றனர். அத்துடன் ஜிஹாதிக் குழுக்கள் மற்ற ஜிஹாதிகளுக்கு எல்லா விதங்களிலும் உதவச் சொல்கின்றனர். அத்தகைய முறையில் தான் போதனை அளிக்கப்படுகிறது. அவர்களையும் ஊக்குவித்து ஜிஹாதில் பங்கு கொள்ளச் செய்கின்றனர்.
அந்நிலையில் தான், பெண்கள் பல ஜிஹாதிகளுடன் உடலுறவு கொள்வது, குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது, குழந்தைகளை ஜிஹாதிகளாக வளர்த்துப் பெரியவர்களாக்க ஒப்புக் கொள்ளுதல் போன்ற நிகழ்வுகளும் ஏற்படுகின்றன.
இஸ்லாமிய அரசு – ஐஎஸ்ஐஎஸ்:
இஷ்லாமிய அரசு அல்லது ஐஎஸ்ஐஎஸ் (ஐளுஐளு) என்று அழைக்கப்படும் ஆயுதம் தாங்கிய தீவிர மதவாத சக்தி வாய்ந்த அமைப்பாகும். சிரியா, ஈராக், வட ஆபிரிக்கா, மத்திய கிழக்காசியா, தெற்காசியா போன்ற பிரதேசங்களிலும் 2011- 2018 வரை தீவிரமாக இயங்கியது.
இந்த இயக்கத்தின் நோக்கம் ஈரான் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஓர் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதாகும். இக்குழுவானது ஈராக் போரின் போது அமெரிக்க படைகளுக்கு எதிராக போரிட்டவர்களால் உருவாக்கப்பட்டது.
பின்னர் 2004 ஆம் ஆண்டில் அவர்கள் அல் காயிதாவுடன் இணைந்து செயல்பட்டனர். இது சுனி இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள ஈராக் பகுதிகளில் கலீபா ஆட்சியை நிறுவி பின்னர் அவ்வாட்சியை சிரியாவுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயற்பட்டு வந்தனர்.
ஆனாலும் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அல் காயிதா உடனான தனது தொடர்பை அவர்கள் முறித்துக் கொண்டனர். இக்குழுவானது அல் காயிதாவை விடவும் அபாயகரமான குழு என அரசியல்- இராணுவ நிபுணர்கள் கருதுகின்றனர். இவ்வமைப்பிற்கு ஆதரவாக இருப்போம் என போகோ அராம் தீவிரவாத அமைப்பு அக்காலகட்டத்தில் அறிவித்து இருந்தது.
ஈராக்கியப் போரின் உச்சத்தின் போது இக்குழுவானது ஈராக்கின் அல் அன்பார் (யுட யுnடியச) நைனவா (Niயெறய), கிர்குக் (முசைமரம) மற்றும் சலா{ஹத்தீன் (ளுயடயா யன னுin) பகுதியில் பெரும்பான்மையையும் மேலும் பாபில் (டீயடிடை), தியாலா (னுலையடய) பக்தாதின் பெரும்பான்மையான பகுதிகள் என்பவற்றில், அமெரிக்க படைகளுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டது.
பாலியல் அடிமைகள்:
இக்குழுவானது யாசிடி மதப்பிரிவுப் பெண்களை பிடித்து பாலியல் அடிமைகளாக விற்றனர். பன்னிரெண்டு அமெரிக்க டாலர்களுக்குப் பெண்களை பாலியல் அடிமைகளாக விற்றனர் என்றும் ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன.
மேலும் இந்த அமைப்பானது கிறுஸ்தவ மற்றும் யாசிடி பெண்கள் மீது தங்களுக்கு உரிமை உள்ளது எனும் வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர். பூப்பெய்தாதப் பெண்களுடன் கூட அவர்கள் பாலியல் உறவு கொள்ளலாம் என அந்தத் துண்டுப் பிரசுரங்களில் கூறப்பட்டது. இவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக சிக்கிக் கொண்டவர்களில் பலர்
தற்கொலைக்கும் முயன்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்தன.
உலகளாவிய ரீதியில் பீதியை ஏற்படுத்திய இந்த இரு அமைப்புக்களின் உருவாக்க பின்னணியில் அமெரிக்க உளவு அமைப்பு ஊஐயு,மற்றும் இஸ்ரேலின் ஆழளளயன உளவு அமைப்புகள் இணைந்து செயல்பட்டன என்ற தகவல் வெளியாகி இருந்தாலும், முழுமையாக ஊர்ஜிதப்படவில்லை.
ஆனால் தற்போது போகோ ஹாரம் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் போன்ற குழுக்களுக்கு பின்னணியில் மொசாட், சிஐஏ (ஊஐயு ரூ ஆழளளயன) என சூடான் முன்னாள் ஜனாதிபதி அதிர்ச்சி குற்றச்சாட்டானது, உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் எழுப்பியுள்ளது.
![]()
