வயது போவதை நாம் சற்று தள்ளிப் போடலாமே!

0
vm366

  • சிவஜெனனி அரவிந்தன் இங்கிலாந்து.

யாருக்கு தான் வயது போகாமல் இளமையான தோற்றத்துடன் நீண்ட காலம் இருக்க விருப்பம் இல்லை! ஆனால், வயது போவதும் முகத்தில் வயது போவது தெரிவதும் இயற்கையே! இந்த இயற்கையையும் நாம் சற்று தள்ளிப் போடலாம்!

சில விடயங்களை நீங்கள் அறிந்து கொண்டு அதன்படி நீங்கள் நடந்தீர்கள் என்றால் நீங்களும் இளந்தோற்றத்துடன் நீண்டகாலம் இருக்கலாம். சிலரைப் பார்தால் அவர்களின் உண்மையான வயதை நம்பவே முடியாது, பார்க்க அவ்வளவு இளமையாக இருப்பார்கள். அதே சமயம் சிலரைப் பார்த்தால் இவருக்கு இத்தனை வயதா? என்று வியக்கும் வண்ணம் அதிக வயதானவர் போல் காட்சி அளிப்பர். இதற்கு காரணம் என்ன? காரணங்கள் பல இருக்கும் அதில் முக்கிய காரணம், அவர் அவர் பழக்க வழக்கங்களே ஆகும்! ஆகையால் எப்படியான பழக்க வழக்கங்கள் எமக்கு நன்மை தரும், எந்தப் பழக்கங்களை தவிர்ப்பது நன்மை தரும் என்பதனை பார்ப்போம்.

இளம் ரீன்ஏஞ் வயதில் எல்லோருக்கும் இரவிரவாக முழிப்பிருப்பது என்பது நல்லாக பிடித்த விடயம் தான். ஆனால் அதை நாம் வயது கொஞசம் போன பிறகும் பழக்கத்தில் கொண்டிருந்தால் அது சரிப்பட்டு வருமா? இல்லை! பியூட்டி சிலீப் (டிநயரவல ளடநநி) என்று என்;ன சும்மாவா எல்லோரும் சொல்கிறார்கள் என்று நினைக்கின்றீர்கள்? அதில் உண்மை உள்ளது! தூக்கமின்மை கண்களுக்கு கீழ் இருக்கும் பைகள் வீக்கமுடன் காட்சி அளிக்கப் பண்ணுவது மட்டுமல்லாமல் கண்கள் சோர்வுடன் காட்சியளிக்கவும் செய்கிறது என்று டாக்டர் அலன் ரோவிக் (யுடடநn வுழறகiபா) கூறுகிறார். சீக்கிரம் தூங்குவது மட்டும் அவசியமில்லை, எவ்வளவு நேரம் துங்குகிறீர்கள் என்பதும் முக்கியமான விடையமாகும். ஓவ்வொருவருக்கும் 7மணித்தியால தூக்கம் அவசியம்! 7 மணித்தியாலத்திற்கு குறைவாக தூங்குபவர்களுக்கு கண்களுக்கு கீழ் கரு வளையங்கள் தென்படும் அத்தோடு உங்கள் வாழ்நாளும் குறையும்!.

உங்கள் கண்கள் சோர்;வாக இருந்தால் அதை தயவு செய்து போட்டு கசக்காதீர்கள்! எமது முகத்திலேயே மிகவும் மென்மையானது என்ன என்றால் அவை கண்களும் அதைச்சுற்றி இருக்கும் தோல்களும தான். கண்களை கசக்குவதால் அதைச்சுற்றி இருக்கும் தோலின் நெகிழ்ச்சியும் கொலாஜனும் குறைந்துவிடும் இதனால் சுருக்கங்கள் வர நிறையவே வாய்ப்பிருக்கின்றது. அதுமட்டும் இன்றி நுண்குழாய்களும் (உயிடைடயசநைள) வெடிக்கும் ஏன் என்றால் கண்களைச் சுற்றி இருக்கும் தோல்கள் மிகவும் மென்மையானவை. கண்கள் சோர்வடைந்தவை போல் காட்சி அளித்தால் கிறின் ரீ (பசநநn வநய) யை அவிய வைத்தபின் அதன் பைகளை (பசநநn வநய டியபள) கண்களை மூடிக் கொண்டு கண்களின் மேல் 10 நிமிடங்களுக்கு வையுங்கள்! நுண்குழாய்கள் வெடித்திருக்கும் என்று நீங்கள் சந்தேகப் பட்டீர்கள் என்றால் வைத்தியரின் ஆலோசனையைப் பெறுங்கள்.

கண்களில் மட்டும் சுருக்கங்கள் தோன்றுவதில்லை அவை உதடுகளுக்கு அருகாமை இருக்கும் தோல் களிலும் தோன்றும். இதைத் தவிர்க்க ளவசயற வைத்துக் குடிபானங்களை அருந்துவதைத் தவிருங்கள். இதே போல் புகைப்பிடித்தலும் உங்கள் வாயிற்கு அருகே இருக்கும் தோலுக்கு சுருக்கங்களைக் கொடுக்கும்.
உங்கள் வயதை இன்னும் கூட்டுவதற்கு இன்னுமொரு காரணம் என்ன தெரியுமா? அதைச் சொன்னால் நீங்கள் இளமையாக மட்டும் தோற்றமளிக்க மாட்டீர்கள் இளமையோடு சேர்ந்து மகிழ்ச்சியும் ஆரோக்;கியமும் சேர்ந்து வரும்! அது என்னவென்றால், ஒருவர் மீது நீங்கள் காழ்புணச்சியோடு இருப்பது அறவே கூடாத தொன்றாகும். அதாவது மற்றவர்களை மன்னிக்காமல் அவர்களில் இருக்கும் கோபத்தை மனதில் வைத்துக் கொள்வது. மன்னித்தலுக்கும் எமது உடல் ஆரோக்கியத்திற்கும் பல தொடர்புகள் உண்டு என்பதனை பல ஆராய்ச்சிகள் மூலம் அறிந்த உண்மை! மன்னிப்பு ஒருவருக்கு நாம் வழங்காவிட்டால் அதனால் நமக்குத் தான் தொல்லை அதாவது தூக்கமில்லாமை அத்துடன் அதிகரித்த நரம்பு செயற்பாடுகளும் வந்து சேரும்! இந்தக் காழ்ப்புணர்ச்சியால் எமக்கு மனஉளைச்சல் வருவதனால் கொற்றிசொல் (உழசவளைழட) என்னும் கோமோர்ன் அதிகரிக்கும் என்று டாக்டர் ஜெனிபர் லன்டா (துநnnகைநச டுயனெய) கூறுகிறார், இதனால் எடை அதிகரித்தல், இரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை நம்மிடம் சீக்கிரம் வந்து சேர்ந்துவிடும். ஆகையால் கோபத்தை விட்டு மற்றவர்களை மன்னித்து நீங்களும் சுகமாக வாழ வழியைப் பாருங்கள்!

உங்களுக்கு முகத்தைப் புதைத்துக் கொண்டு படுக்கும் பழக்கம் இருக்கிறதா? அப்படியென்றால் அதை உடனடியாக நிறுத்துங்கள்! நீங்கள் உங்கள் முகத்தை தலையணைக்குள் அழுத்தும் பொழுது அந்தில் இருந்து வரும் அழுத்தம் உங்களுடைய முகத்தில் இருக்கும் தோலுக்குக் கூடாது ஏனெனில் முகப் பகுதியில் இரத்த ஓட்டம் போதாமையால்! இதை தவிர்க்க நிமிர்ந்து படுங்கள். உங்களால் இந்தப் பழக்கத்தை விடமுடியாவிட்டால் தலையணை உறையை சில்க் துணியில் வாங்கிப் பாவிக்கவும்.

துரித (கயளவ கழழன) உணவுகளைத் தவிருங்கள். இவற்றில் அதிகளவு சோடியம், கொழுப்பு மற்றும் கொலஸ்ரோல் இருக்கிறது. இவைகள் நாமக்கு வயதான தோற்றத்தை கொடுக்க இன்னுமொரு காரணம். அது மட்டுமல்லாமல் எமது உடல் பெருப்பதற்கும் இதுவே காரணமாகவுள்ளது. சம்மன் மீன், ரின்மீன் (வரயெ) மற்றும் வோல்நட் (றயடரெவ) ஆகியவை தோல்களிற்கு நன்மை கொடுத்து முகச்சுருக்கங்கள் வருவதையும் குறைக்கும்.

இனிப்பு வகைகளை தாங்கோ தாங்கோ என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறீர்களா? அப்படி என்றால் தோல்சுருக்கங்களை வாங்கோ வாங்கோ என்று வெத்திலை வைத்து அழைப்பதற்குச் சமம். இனிப்பு வகைகள் எமது உடம்பில் இருக்கும் எல்லாப் பாகங்களுக்கும் வயதைக் கூட்டும். அதிக இனிப்பு வகைகள் உண்ணுபவர்களின் இடை மட்டும் காணாமல் போவதுமட்டுமல்லாது சர்கரைவியாதியையும் கைகோத்து கூட்டி வரும். அத்துடன் சில தோல் நோய்கள் (முகப் பரு தோல் சுருக்கம்) கொண்டு வரும் வல்லமை இதற்கு உண்டு. கட்டாயம் ஏதாவது இனிப்பாகச் சாப்பிட்டுத் தான் ஆக வேண்டும் என்று தோன்றினால், டார்க் சொக்கிலேட்டை அல்லது சர்க்கரை குறைந்ததாகப் பார்த்து வாங்கிச் சாப்பிடுங்கள்.
எடையை அளவாக வைத்திருப்பது அவசியமானதொன்றே! ஓழுங்காக உடற்பயிற்சி செய்வதென்பது அவசியமே! எடை குறைவது நல்லது தான் ஆனால் அதற்காக நமது நடிகர் விக்ரம் போல எடை குறைவதும் கூடுவதாகவும் இருந்து வந்தால் அது நன்மை தராது! இப்படிக் கூடிக் குறைபவர்கள் அதிகம் இதயநோய்களுக்கு உள்ளாவதுடன் சர்க்கரை வியாதியும் வரலாம் என்பதே! ஒரேயடியாக ரீவிக்கு முன் உட்கார்ந்து விடாதீர்கள். 30 நிமிடங்களுக்கு மேல் ஒரே இடத்தி;ல் உட்கார்ந்து இருந்தால் கணங்களில் சுகர் ளரபயச னநிழளவை பண்ணும் ஆதலால் உடல் எடை அதிகரிக்கும். தண்ணீர் அருந்துவது பலர் அரிது. ஆனால் உடல் நலத்திற்;கு மிகவும் முக்கியமானதொன்று இது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *