மேரி றொஷானி தனபாலசிங்கம் கும்மர்ஸ்பாக் நகரின் ‘வாய்ப்பு சமநிலை மற்றும் ஒருங்கிணைப்புக் குழு’ தலைவராகத் தேர்வு
யேர்மனியில் வாழும் ஈழத்து தமிழ் இளம் சந்ததியினர் இன்று அரசியல், சமூக சேவை மற்றும் பல்வேறு பொது துறைகளில் தங்கள் திறமையையும் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் இன்று சமூகப்பணிகளில் அதிக உறுதிப்பாட்டுடன் ஈடுபட்டு, அரசியல் மற்றும் அமைப்புகளின் வழியாக தமது சேவை உணர்வை வெளிப்படுத்தி வருவது சமூக முன்னேற்றத்தின் நம்பிக்கையூட்டும் அடையாளமாகும். அந்த வரிசையில் மேரி றொஷானி தனபாலசிங்கம் தனது துறையில் உயர்ந்த இடம் நோக்கிச் செல்லும் முயற்சி பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கின்றது. மேரி றொஷானி தனபாலசிங்கம் கும்மர்ஸ்பாக் நகரின் ‘வாய்ப்பு சமநிலை மற்றும் ஒருங்கிணைப்புக் குழு’ தலைவராகத் தேர்வு
ஜெர்மனியின் கும்மர்ஸ்பாக் (புரஅஅநசளடியஉh) நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘வாய்ப்பு சமநிலை மற்றும் ஒருங்கிணைப்புக் குழு’ (யுரளளஉhரளள கüச ஊhயnஉநபெநசநஉhவபைமநவை ரனெ ஐவெநபசயவழைn) தனது முதல் கூட்டத்தை நடத்தியது. அந்த கூட்டத்தில் எஸ்.பி.டி (ளுPனு) கட்சியைச் சேர்ந்த மேரி றொஷானி தனபாலசிங்கம் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவிக்கான தேர்தலில் றொஷானி தனபாலசிங்கத்துடன் சேர்ந்து ஏ.எஃப்.டி (யுகனு) கட்சியைச் சேர்ந்த பத்ரிசியோ மிலியா (Pயவசணைழை ஆடையை) மற்றும் சுயேச்சை வேட்பாளர் லிலியா கோஹ்லர் (டுடையை முöhடநச) ஆகியோரும் போட்டியிட்டனர். வேட்பாளர் அறிமுகத்தின் போது பேசிய றொஷானி தனபாலசிங்கம், கடந்த காலத்தில் இந்தக் குழுவின் முன்னோடி அமைப்பான ‘ஒருங்கிணைப்பு கவுன்சிலின்’ (ஐவெநபசயவழைளெசயவ) தலைவராக பணியாற்றியதைக் குறிப்பிட்டார். சுமார் பத்து ஆண்டுகளாக கும்மர்ஸ்பாக் நகரில் வசித்து வரும் அவர், தன்னுடைய முந்தைய அனுபவங்கள் எதிர்காலப் பணிகளில் உறுதியான அடித்தளமாக இருக்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார். வாக்கெடுப்புக்கு முன்பாக பத்ரிசியோ மிலியா தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, லிலியா கோஹ்லருக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். இறுதியில் நடைபெற்ற வாக்கெடுப்பில் றொஷானி தனபாலசிங்கம் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் துணைத் தலைவராக எஸ்.பி.டி (ளுPனு) கட்சியைச் சேர்ந்த எலிசபெத் ராவ்பாக் (நுடளையடிநவா சுயரியஉh) தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது துணைத் தலைவராக சி.டி.யு (ஊனுரு) கட்சியைச் சேர்ந்த டிர்க் வெடர் (னுசைம ஏநனனநச) தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘வாய்ப்பு சமநிலை மற்றும் ஒருங்கிணைப்புக் குழு’ நகரில் வாழும் மக்களுக்கிடையேயான சம உரிமை,சமூகப் பங்கேற்பு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுகிறது.
![]()
