லண்டன் மாநகரில் இடம் பெற்ற ளுசுளு தமிழ் வானொலிஏழாவது ஆண்டு விழா “பாட்டினில் அன்புசெய்”

0
vm420

கடந்த 14.03.2026 சனிக்கிழமை இடம் பெற இவ்விழா வில் பாடுவோர் பாடலாம் “பாட்டினில் அன்புசெய்” நிகழ்வு அரங்கம் நிறைந்த மக்களுடன் மிக சிறப்பாக நடந்தேறியது. நிகழ்வினூடாக சேகரிக்கப்பட்ட நிதி திருகோணமலை – கல்லம்பத்தை புதிய பாதை மகளிர் குழு அமைப்பிற்கு வழங்கப்படும்.

பாட்டினில் அன்புசெய் நிகழ்ச்சி, “இசையால் வசமாகா இதயம் எது” பார்வையாளர்களைக் கொள்ளை கொண்டது. ளுசுளு தமிழ் வானொலி அதிபர் ளுசுளு ரவிஷான் அவர்களது சேவையுள்ளம் பல இளைய பாடகர்களும், மூத்தகலைஞர்களும் இசையரங்கில் ஒன்றாக இசை முழக்கம் செய்யவைத்தன. இசை மட்டுமன்றி கண்களுக்கு விருந்தாக நடனங்கள், சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் வகையில் நாடகம் என பல கலை நிகழ்ச்சிகள் கொண்டு இந்த நிகழ்வு மிக சிறப்பா நடைபெற்றது. “இசைக் கலாமணி” “கலாபூஷணம்””சங்கீத வித்துவான்” திரு.ஐ.சங்கரநாராயணன் ஞாபகார்த்த விருது 2025” கலைஞர்கள் கௌரவிப்பு இடம் பெற்றது. பிரதம விருந்தினர் “கலாபூசணம்” “சங்கீதவித்துவான்” திருமதி வத்சலாதேவி சங்கரநாராயணன், சிறப்பு விருந்தினர் கலைஞர் திரு.மயிலையூர் இந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ளுசுளு ரவிஷான் கட்டமைக்க, திரு. ரமேஷ் கந்தசாமி, திருமதி நிரா சுரேஷ் ஆகியோர் இனிதாக தொகுத்தளித்தனர். கௌரவிப்பு நிகழ்வின் தொகுப்பாளராக திருமதி ஆனந்தராணி பாலேந்திரா சிறப்பாக தன் பணியையாற்றினார்.

  • “இசைக் கலாமணி” “கலாபூஷணம்” “சங்கீதவித்துவான்”
  • திரு. ஐ. சங்கரநாராயணன் ஞாபகார்த்த விருது 2025
  • “கான பூஷணம்” ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம்
  • திரு. விஸ்வநாதன் யோகநாதன்
  • திரு. இளையதம்பி குமாரசாமி ராஜகோபால்
  • திரு. பாலசுப்பிரமணியம் ரவீந்திரன்
  • “சங்கீத வித்துவான்” ஸ்ரீமதி சசிகலா கோதண்டபாணி

ஆகிய மூத்த கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ளுசுளு தமிழ் வானொலிக் கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வில்

  • திருமதி ஸ்ரீதேவி அருளானந்தன்
  • திருமதி வத்சலாதேவி சங்கரநாராயணன்
  • திருமதி தாரணி புவீகரன்
    ஆகியோருக்கு ளுசுளு தமிழ் வானொலிக்கு ஆற்றி வரும் சேவையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

திருமதி அமுதா ரவிஷானின் ஒருங்கிணைப்பில் மண்டபத்தில் வந்திருந்த அனைத்து ரசிகர்களையும் அன்பில் நெகிழ வைத்து டீயயெயெ டுநயக இரவு போசனத்துடன் உணவும் வழங்கி வயிறும் நிறைய வைத்து வரவேற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *