பாலுறவில் பெண் தேர்வு:

0
vm487

பிரம்மச்சரியத்தைப்; பெண்கள் சுகமாகத் தழுவுகின்றனர்.
அமைதியைக் கெடுக்கும் உறவுகளுக்காச் சமரசம் செய்வதில்லை.

உடலுறவும் வாழ்வாதாரமும் பிரிக்கப்பட்டதன் மூலம் உலகம் அடையும் மாற்றம் –
-தீபா ஸ்ரீதரன் தைவான்

Female Choice in Sex: How Decoupling Sex from Survival is Reshaping the World:

உலகளவில் மக்களின் பாலியல் வாழ்க்கை மற்றும் உடலுறவு கொள்ளும் விகிதம் முன்னெப்போதும் இல்லாதவாறு தொடர்ந்து சரிந்து வருகிறது. தாம்சன் ராய்ட்டர்ஸ் (வுhழஅளழn சுநரவநசள) மற்றும் சர்வதேச சமூகவியல் ஆய்வுகளின் புள்ளிவிவரங்களின்படி, வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் பாலியலில் தீவிரமாகச் செயல்படும் நபர்களின் சதவீதம் கடந்த பத்தாண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது. ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இளைஞர்களுக்கு (குறிப்பாகப் பெண்கள்) உடலுறவில் ஈடுபடும் ஆர்வம் குறைந்து வருவதைத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. இந்தச் சரிவுக்குப் பின்னால் பல சமூக-பொருளாதாரக் காரணங்கள் இருந்தாலும், பெண் பாலியல் சுயாட்சியின் (கநஅயடந ளநஒரயட யரவழழெஅல) மறுமலர்ச்சியை நான் முக்கியமான காரணமாகப் பார்க்கிறேன்.

இனப்பெருக்கத்தின் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கையில் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய ஆர்க்டிக் கனடாவின் பண்டைய பெருங்கடல்களில்,பாங்கியோமார்பா பூபெசென்ஸ் (டீயபெழைஅழசிhய pரடிநளஉநளெ) என்ற சிவப்புப் பாசியில்தான் முதல் பாலின இனப்பெருக்கம் தொடங்கியிருக்கிறது என்று தரவுகள் சொல்கின்றன. அதைத் தொடர்ந்து,நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளாக, நீர் வாழ் உயிரினங்கள் பெரும்பாலும் வெளிக்கருவுறுதலையே (நஒவநசயெட கநசவடைணையவழைn) சார்ந்திருந்தனஅவை தங்களது முட்டைகளையும் விந்தணுக்களையும் திறந்த வெளியில் வெளியிட்டன் அங்குத் தற்செயல் நிகழ்வுகளும் நீரின் இயக்கமுமே உயிர்பிழைப்பைத் தீர்மானித்தன. காலப்போக்கில், உடலளவிலான நெருக்கம் அதிக இனப்பெருக்க வெற்றிக்கு வழிவகுத்தது.

சுமார் 385 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மைக்ரோபிராக்கியஸ் டிக்கி (ஆiஉசழடிசயஉhரைள னiஉமi) போன்ற மீன்கள் எலும்பு போன்ற இணைகரங்களை(உடயளிநசள)உருவாக்கி, முதன்முதலில் உடலுக்குள் கருவுறுதலை (iவெநசயெட கநசவடைணையவழைn) சாத்தியமாக்கின. இந்த மாற்றத்திற்கு இனப்பெருக்க உயிரியல் பற்றிய எந்த விழிப்புணர்வும் தேவைப்படவில்லை. இது தானாக இயங்கும் நரம்பு மண்டல தூண்டுதல்கள், ஃபெரோமோன்கள்போன்ற வேதியியல் சமிக்ஞைகள் மற்றும் உடலமைப்பு இணக்கத்தால் மட்டுமே வழிநடத்தப்பட்டது. விழிப்புணர்வை விட உள்ளுணர்வும் உடலமைப்பும் மட்டுமே உயிர்களின் தொடர்ச்சிக்கு வழிகாட்டின.

நிலத்தை நோக்கிய உயிரினங்களின் நகர்வு, இனப்பெருக்க வடிவமைப்பில் மேலும் ஒரு தீவிர மாற்றத்தை ஏற்படுத்தியது. நீர் வாழ் உயிரினங்கள் தங்களது முட்டைகள் காய்ந்துபோகாமல் இருக்க நீருடனேயே பிணைக்கப்பட்டிருந்தன. ஆனால் சுமார் 312 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான அம்னியோடிக் முட்டையின் (யஅnழைவiஉ நபப)பரிணாம வளர்ச்சி இந்தத் தடையை உடைத்தது. நீர் புகாத ஓடு மற்றும் உள் திரவச் சவ்வுகளால் பாதுகாக்கப்பட்ட இந்த அம்னியோடிக் முட்டை, ஊர்வன, பறவைகள் மற்றும் பாலூட்டிகள் வறண்ட நிலத்தைக் கைப்பற்ற உதவியது. இதனால், சிக்கலான கலவி உறுப்புகள், பிரத்தியேக இனப்பெருக்க உடலமைப்பு மற்றும் கூர்மையான உணர்ச்சி விழிப்புணர்வு ஆகியவை நிலவாழ் விலங்குகளிடையே வேகமாகப்பரிணாமமடைந்தன.
இந்த உடலமைப்பு மாற்றங்களுடன் சேர்ந்து, பெண்ணை மையமாகக் கொண்டே இனச்சேர்க்கைக்கான ஈர்ப்புச் சடங்குகளும் (உழரசவளாip) பரிணாமமடைந்தன. பெண் விலங்குகள் முட்டைகளை உருவாக்குவதிலும் குட்டிகளைச் சுமப்பதிலும் அதிக ஆற்றலை முதலீடு செய்ததால், அவற்றின் இனப்பெருக்கத் திறனே பரிணாமத்தில் முக்கியத்துவம் பெற்றது. முதன்மை முடிவெடுப்பவர்களாகப் பெண் இனம் முழு அதிகாரத்தையும் கொண்டிருந்தன. இதனால் ஆண்கள் தங்களது ஆதரவைப் பெறப் போட்டியிட வேண்டியிருந்தது. மரபணு ஆரோக்கியம் மற்றும் உயிர்வாழும் திறனை வெளிப்படுத்தும் நம்பகமான சமிக்ஞைகளாக விலங்கு உலகில் ஈர்ப்புச் சடங்குகள் உருவெடுத்தன.

ஆரம்பக்கால மனித சமூகங்களிலும் இனப்பெருக்கம் என்பது உயிர்வாழ்வதோடு நேரடியாகப் பிணைக் கப்பட்டிருந்ததால், துணையைத் தேர்ந்தெடுப்பதில் பெண்களின் இயல்பான அதிகாரம் உயர்வாகவே இருந்தது. பெண்கள் பரம்பரை, கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் மையமாகவே விளங்கினர்.

ஆனால் விவசாயம் மற்றும் தனிநபர் சொத்துரிமை உருவான இடைக்காலத்தில், சொத்துக்களைத் தங்களது வாரிசுகளுக்கு மாற்றுவதற்காக ஆண்கள் பெண்களின் பாலியல் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தினர். பெண்களின் உடல்கள் ஆண்களின் விருப்பத்திற்காகவும் இனப்பெருக்க உழைப்பிற்காகவும் பயன்படுத்தப்படும் ஒரு ‘சொத்தாக’ (யளளநவ) மாற்றப்பட்டன. கலாச்சாரமும் புவிசார் அரசியலும் (பநழிழடவைiஉள) பெண்களின் இனச்சேர்க்கை நடத்தையைக் கட்டுப்படுத்துவதன் மூலமே அமைக்கப்பட்டன. திருமணக் கூட்டணிகள் மூலம் எல்லைகள் விரிவாக்கப்பட்டன, வம்சாவளிகள் தக்கவைக்கப்பட்டன, மற்றும் மக்கள்தொகை வளர்ச்சி நாட்டின் ராணுவ வலிமையாகப் பார்க்கப்பட்டது.
இன்று, அந்த நிலைமை தலைகீழாக மாறி வருகிறது. மீன்கள் அல்லது பிற பாலூட்டிகளைப் போல உள்ளுணர்வு மட்டுமே மனித பாலியல் நடத்தையை நிர்ணயிப்பதில்லை. விழிப்புணர்வு, அறிவு, தனிநபர் மதிப்பீடுகள், எதிர்காலத் திட்டமிடல் மற்றும் சமூக அனுபவங்கள் ஆகியவை பாலியல் முடிவுகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதை மனிதர்கள் உணர்வுப்பூர்வமாக உணரத் தொடங்கிவிட்டனர். இன்றைய இளம் தலைமுறையினரிடம்,குறிப்பாக பெண்களிடையே, உடலுறவு என்பது வெறும் உயிரியல் உந்துதலைப் பூர்த்தி செய்வதற்கான செயலாக அல்லாமல், அதற்காக நேரம், உணர்ச்சி மற்றும் ஆற்றலை முதலீடு செய்வது உண்மையில் தங்களுக்கு அர்த்தமுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
நவீன பெண்ணியம், பொருளாதாரச் சுதந்திரம் மற்றும் கருத்தடை நுட்பங்கள் மூலம் பெண்கள் தங்களது உடல் சுயாட்சியை முழுமையாக மீட்டெடுத்துள்ளனர். இப்போது பெண்கள் தங்களது உடலைப் பாதுகாப்புக்காக மாற்றிக்கொள்ளும் ஒரு வர்த்தகப் பொருளாகவோ ஆண்களைக் கவரும் ஓர் ஆயுதமாதவோ பார்ப்பதில்லை. அதேபோல உடலுறவை ஒரு கூட்டுக்காகச் செலுத்தும் விலையாகவோ கடமையாகவோ கருதுவதுமில்லை. ‘ளுநடக-pயசவநெசiபெ’ மற்றும் பிரம்மச்சரியம் ஆகியவற்றைப் பெண்கள் சுகமாகத் தழுவுகின்றனர். தங்களது அமைதியைக் கெடுக்கும் உறவுகளுக்காக அவர்கள் சமரசம் செய்வதில்லை.

ஆனால், பல ஆண்கள் இன்னும் பழமையான மனநிலையிலேயே இருக்கிறார்கள். ஆண்கள் பொதுவாக மிகவும் மெதுவாகவே பரிணாமமடைகிறார்கள். அவர்கள் மாற்றத்தை அவ்வளவு எளிதாக ஏற்பதில்லை. இன்னும் இடைக்காலத்தின் காலாவதியான யோசனைகளால் பிணைக்கப்பட்டுள்ளனர். இதை இங்கே குறிப்பிடும்போது ஓர் இனத்தின் பெருமையையோ சிறுமையையோ நான் சுட்டிக் காட்ட விழையவில்லை. உடலியல், உயிரியல் மற்றும் உளவியல் ரீதியாக இது இப்படி அமைந்திருக்கிறது. அவ்வளவுதான். அடிப்படைத் தேவைகளை வழங்குவதன் மூலமோ அந்தஸ்தின் மூலமோ பெண்களின் உடலை அடையும் உரிமை தங்களுக்கு உண்டு என்று இன்னும் பல ஆண்கள் நம்புகிறார்கள். ஆனால் பெண்கள் (சிலர்) அந்தக் கருத்தியலிலிருந்து முற்றிலும் வெளியே வந்துவிட்டனர். இன்னும் பலர் அந்தப் பயணத்தைத் தொடங்கியிருக்கின்றனர்.

தங்களை ஒரு பொருளாகக் கருத மறுக்கும் பெண்களை எதிர்கொள்ளும்போது, சில ஆண்கள் ‘ஆயழெளிhநசந’இ ‘சுநன-pடைட’, மற்றும் ‘ஐnஉநட’ போன்ற இணையவழிக் குழுக்களுக்குள் ஒளிந்துகொண்டு பெண்ணிய மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த இயக்கங்கள் ஆண்களை உணர்ச்சிப்பூர்வமாகப் பரிணாமமடைவதற்குப் பதிலாக, பெண்களை மீண்டும் பாரம்பரிய, கீழ்ப்படிந்த பாத்திரங்களுக்குத் தள்ள முயல்கின்றன.ஆனால், எதிர்காலத்தில் மனித இனத்தின் பெருக்கத்திற்குப் பாலியல் இனப்பெருக்கம் ஒரு அத்தியாவசிய தேவையாக கூட இருக்காது என்றே நினைக்கிறேன். செயற்கை கருவூட்டல் (ஐஏகு) செயற்கைக் கருப்பைகள் (யசவகைiஉயைட றழஅடிள), மரபணுத் தொழில்நுட்பங்கள் மற்றும் (ஊசுஐளுPசு) யுஐ- hலடிசனை வளர்ந்து வரும் சூழலில், சமூகத்தின் மக்கள்தொகைத் தேவையை உடலுறவிலிருந்து முற்றிலும் பிரித்துவிட முடியும். இன்றைய பெண்களின் நடத்தையானது, உடலுறவை மட்டுமல்லாமல் உடலையும் கூட வெறும் இனப்பெருக்கக் கருவியாகப் பார்க்காமல், முழுமையான தனிநபர் விருப்பமாக மாற்றும் இந்த எதிர்காலத்தை நோக்கியே நகர்கிறது. பல சமூகங்களில் கணிசமான எண்ணிக்கையிலான பெண்கள் இந்தத் தன்னாட்சி நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உடைத் தேர்வு முதல் உறவு தேவைகள் வரை இதை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. இதை அறிவுப்பூர்வமாக முந்தைய தலைமுறையினரும் ஆண்களும் உணர்ந்து கொள்ளவேண்டிய அவசியத்தில் இருக்கிறார்கள்.

இயற்கையில் உருவான இனப்பெருக்கத் தேர்வு உரிமை, பெண்களின் தன்னாட்சி மூலம் மீண்டும் அவர்களின் கைக்கே வந்து சேர்ந்துள்ளது என்றே நான் சொல்வேன். தொழில்நுட்பமும் அறிவியலும் பாலியல் இனப்பெருக்கத்தின் தேவையை இல்லாதொழிக்கக் கூடிய இந்த எதிர்காலத்தில், மனித உறவுகளும், காதலும், சமூகத்தின் அமைப்பும் எவ்விதமான புதுப் பரிமாணத்தை எட்டும் என்பதே என்னுடைய அடுத்த ஆர்வமாகஃ கேள்வியாக இருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *