யேர்மனியில் சிறப்பாக இடம் பெற்ற ‘இதழியல் கலை வேள்’த. இரவீந்திரன் அவர்களின் மணிவிழா
படங்கள்: நந்தபாலன்.
ETR வானொலி, அதிபர், அகரம் சஞ்சிகை, அகரதீபம் சஞ்சிகை ஆசிரியர் இதழியல் கலை வேள் த. இரவீந்திரன் அவர்களின் மணிவிழா யேர்மனியில் கம் காமாட்சி அம்மன் ஆலயம் கலாச்சார மண்டபத்தில் 29.03.2025 வெற்றி மணி பத்திரிகை ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்களின் தலைமையில் மிகச்சிறப்பாக இடம் பெற்றது.
மங்கலவிளக்கேற்றல், தேவாரம், அகவணக்கம் இடம் பெற்றன. கம் காமாட்சி அம்மன் ஆலய குரு பிரதிஷ்ட கலாநிதி பாஸ்கரக்குருக்கள், துர்கா துரந்தரர் சுவற்றா கனகதுர்க்கா அம்பாள் ஆலய குரு ஜெயந்திநாதகுருக்கள் ஆகியோரின் நல்லாசியுடன் உரைகள் ஆரம்பமாகின. கனடாவிலிருந்து கௌரி மனோகரன் சுவிஸ்சிலிருந்து சன் தவராசா சிவச்செல்வம் கிருஸ்ணா அம்பலவாணர் பொலிகை ஜெயா கரோலின்(பாடகி),நெதர்லாந்திலிருந்து ஜெயன் (பாடகர்) சுபா சசி, இங்கிலாந்து நடா மோகன் பிரான்சிலிருந்து மகேஸ்வரி இவ்வாறு பல நாடுகளில் இருந்தும் பல ஊடக நண்பர்களும், கலந்து சிறப்பித்தனர்.
யேர்மனியில் உள்ள ஊடகங்கள் பலவும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை ஒரு ஆரோக்கியமான நிகழ்வுக்கு வித்திட்டன. ஒவ்வொரு பேச்சாளரும் ஒன்றையே திருப்பி திருப்பி ஒப்புவிக்காமல். இதழியல் காலை வேள் த. இரவீந்திரன் அவர்களின் தாம் அறிந்த ஒவ்வொரு பக்கங்களை அங்கு எடுத்துவந்து இயம்பியது சிறப்பான அனுபவத்தை தந்தது. நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள் இடை, இடையே வந்து நிகழ்ச்சிப்போக்கின் இறுக்கத்தை தவிர்த்தன.இதனை கச்சிதமாக நெறிப்படுத்திய ஈழமயூரன் அவர்களுக்கு எமது பாட்டுக்கள்.
வெற்றிமணி தயாரித்து வழங்கிய சிறு ஆவணப்படம் நனவிடை தோய்தல் சிறப்பாக காண்பிக்கப்பட்டதுடன், வெற்றிமணி 2025 விருதும், இதழில் கலை வேள் என்ற பட்டத்தினையும் வழங்கி கௌரவித்தனர். மேலும் யேர்மனியில் உள்ள பல கலை, இலக்கிய அமைப்புகளும் இதழில் கலை வேள் த. இரவீந்திரன் அவர்களை மேடையில் கௌரவித்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சிகளை சி.சக்திவேல், தேவன் ஆகியோர் சிறப்பாக தொகுத்து வழங்கினர். திரு. இரவீந்திரன் 2004 ஆண்டு யேர்மனியில் ஏன் நாம் வாழும் இடத்தில் ஒரு வானொலி உதித்தால் என்ன என்ற எண்ணத்தில், ஐரோப்பிய தமிழ் வானொலி ஐ ஆரம்பித்தார். நாளடைவில் முதலாவது 24 மணிநேர வானொலி யாக மிளிர ஆரம்பித்தது.ஐரோப்பா தேசம் எங்கும் மக்கள் விரும்பிக்கேட்கும் வானொலிகளில் முக்கிய இடத்தில் (நுவுசு) ஐரோப்பிய தமிழ் வானொலியும் இருந்தது. குறிப்பாக இங்கிலாந்தில் முதியவர்களின் செல்லப்பிள்ளையாக ரவிந்திரன் இருந்ததை அன்று பல முதியோர் இல்லங்களுக்கு செல்லும்போது அறிய முடிந்தது.
2011ம் ஆண்டு அகரம் சஞ்சிகை தாய்மண்ணின் அரசியல் நகர்வுகளை சிறப்பாக எடுத்து வந்தது. பல துறைகளில் கால் பதித்து வளர்ந்து வரும் இதழியல் கலை வேள் த. இரவீந்திரன் அவர்களை நாமும் வாழ்த்துவோம்
![]()
