வெற்றிடம்
_மாதவி. யேர்மனி
“இன்று போல நெஞ்சில் ஆழமாக பதிந்துள்ளது”
இப்படி ஒவ்வொருவரின் மனதிலும் ஆழமாக பதியும் நினைவுகள் நிச்சயமாக பல இருக்கும். அந்த ஆழத்திற்கு அவரவர்க்கு தனித்தனியாக பல காரணங்கள் இருக்கும்.
காதலுக்கு அப்பாலும், ஒரு ஆழமான வாழ்க்கை உலகில் உண்டு என்பதை அது உரக்கச் சொல்லும்.
பிறந்தவர்கள் எவருக்கும் அப்பா, அம்மா இருப்பார்கள். ஆனால் புலம்பெயர்ந்து வந்த தமிழர்களுக்கு, அன்று அம்மா அப்பா வந்த நாடுகளில் இல்லை. அந்தக் குறையை ஓரளவு தீர்த்துவைக்க, இன்னொரு வடிவில் வந்தவர்களை நாம் இங்கு “பப்பா”, “மம்மா” என்று மனதார எண்ணி அழைத்து, மகிழ்ந்தோம், வாழ்ந்தோம்.
(ஜெர்மனி)க்கு வந்த புதிதில் பனிக்காலம். எமக்கு தந்த சிறு வீட்டில் குளிர் தாங்க முடியாது. (ஹீட்டர்) ஒழுங்காக வேலை செய்யவில்லை. இரு பிள்ளைகளும் டியவாசழழஅ க்கு செல்லவே நடுங்குவார்கள். கெயர்ரையரை பிடித்து (ர்யசைனசலநச) நாங்கள் கொமேட்டைக் (ஊழஅழயசன) சூடாகவைத்திருக்க பயன் படுத்தினோம்.
அந்த கஸ்டமான நேரம் எம்மோடு நட்புடன் பேசிய தம்பதிகள் தான் கெல்மூட், மரியா. ஆகிய இருவரும்.
ஒரு நாள் மாலை, கேக்மும், ஆப்பிள் பழங்களும் சிலவற்றுடன் வந்து, எமது கதவில் மணியடித்தவர்கள், பின் எம் வாழ்வின் நாதம் அங்கமாகிவிட்டார்கள். பஸ் இல் வந்து இறங்கி நடுங்கியபடி வந்த பிள்ளைகளைப் பார்த்து,அவர்கள் பற்றி விசாரித்து அறிந்த தாகச் சொன்னார்கள். வீட்டிற்குள் நுழைந்தவுடன், (ஹீட்டர்) வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்து, அதனைத் திறந்து பார்த்தார்கள். முழுமையாக வேலை செய்யவில்லை. உடனே வெளியே சென்ற தோமஸ் (வநடநிhழநெ டிழழவா) இல் இருந்து தமது நண்பருக்கு (phழநெ) செய்தார்.
அரைமணி நேரத்தில் வந்த ஒருவர் (ஹீட்டர்) ஐ திருத்தினார். அதற்கான காசை அவரே கொடுத்தார். அதன் பின் நாம் கெயர்ரையரை ஐ தலை முடி காயவைக்க மட்டுமே பயன்படுத்தினோம்.
வேற்று மொழிச் சூழல் உங்களுக்கு எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்து, “உங்கள் பிள்ளைகள் மொழி கற்க (ளுரனெயல ளுஉhழழட) க்கு கூட்டிச் செல்கிறோம்” என்று அழைத்துச் சென்று, காலை உணவும் கொடுத்து, மொழி அறிவையும் வளர்த்தார்கள்.
அன்று ஒருவரை (ஊhரசஉh) க்கு அழைத்துச் சென்றால், மதம் மாறச் செய்வார்கள் என்று பலர் எண்ணிய காலம் அது. ஆனால் மரியாவும் தோமஸ{ம் எம்மை ஒருபோதும் மதம் மாறும்படி கேட்டதில்லை.
எமது இளமைக்காலத்தில் எமக்கு “பப்பா”, “மம்மா”வாகவும், பிள்ளைகளுக்கு “தாத்தா”, “பாட்டி”யாகவும், பல நேரங்களில் எமக்கு (வுயஒi னுசiஎநச) ஆகவும் இருந்தவர்கள் அவர்கள்.
வயது முதிர்ச்சி காரணமாக அவர்கள் வயோதிபர் இல்லத்தில் சென்று அமர்ந்தார்கள். செல்லும் போது தாம் வாழ்ந்த வீட்டை அந்த (ஊhரசஉh) க்கு எழுதிக் கொடுத்தார்கள்.
அவர்கள் முதியோர் இல்லம் சென்ற பின், நாம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை செல்வோம். அவர்கள் தந்த அன்பை மீண்டும் கொடுக்க எம்மால் முடியாது. ஆனால் அதனை மறக்கவில்லை என்பதை மட்டும் எம் சந்திப்புகள் உணர்த்தின.
தான் காலை ஒரு நடை நடந்துவிட்டு வரும்போது, மம்மா கோப்பி ரெடி பண்ணி வைப்பா. தன் வாயால் விசில் அடிக்கும் சத்தம் தன் வரவை உணர்த்தும், என்று கெல்மூட்; பப்பா தன்கதையை எமக்கு சொல்லியுள்ளார்.
மம்மா ஆறு வருடங்களுக்கு முன் இறந்தார். தோமஸ், “மேரியின் கரங்களைப் பற்றியவாறே அவர் உயிர் பிரியும் வேளையில் இருந்தார்” எனச் சொன்னார்.
பிரிவை ஏற்றுக்கொண்டு வாழ இனிய நினைவுகள் கைகொடுக்கும். மம்மாவின் மரணச் செய்தியை அவர்தான் அறிவித்தார். தனது மரணச் செய்தியை யார் யாருக்கு அறிவிக்க வேண்டும் என்ற ஒரு (டளைவ) தயாரித்துள்ளதாகவும் கூறினார். எமது பெயரும் நிச்சயம் அதில் இருந்திருக்கும்.
தன் மனைவியின் கல்லறைக்கு அருகே,தனது பெயரையும் பொறித்து,தனது மரணத் திகதி மட்டும் எழுதாது விட்டிருந்தார்.
எங்கள் வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்தவர் மனைவி இறந்ததும், கெல்மூட் பப்பாவை பல தடவைகள் சென்று பார்த்தோம்.பின்னரும் இடையிடையே கேக் (உயமந) செய்து, அவரிடம் கொடுத்து வந்தோம். பின், கோவிட் (ஊழுஏஐனு) வந்தது. மூன்று ஆண்டுகள் அவர் வீட்டுக்குச் செல்ல முடியவில்லை.
அப்போது அவருக்கு 96 வயது. மேலும் குடல் புற்றுநோயும் இருந்தது. பின்னர் அவரைத் தொடர்புகொண்டோம், ஆனால் பதில் இல்லை. அவரைச் சந்தித்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது அவர் 99 வயதாகி இருப்பார் என நினைத்தோம்.
“அவரும் இப்போது மறைந்திருப்பார்” என்ற எண்ணத்துடன் மலர்க்கொத்து ஒன்றை வாங்கி, அவரது மனைவியின் கல்லறை உள்ள இடத்துக்குச் சென்றோம். அங்கு சென்றபோது, ஒரு முதியவர் சமாதியில் வைக்கப்பட்டிருந்த பூச்செடிகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தார்.
அருகில் சென்று பார்த்தோம், பப்பாவே! மூன்று வருடங்களுக்கு முன்பு கண்டது போலவே இருந்தார்.
ஆனால் அவர் எங்களை அடையாளம் காணவில்லை. நாம் எம்மை அறிமுகப்படுத்தியபோது, புன்னகையுடன் எங்கள் பிள்ளைகள் பற்றி ஆவலுடன் கேட்டார். அதன் பின், தனது மனைவியின் சமாதியில் உள்ள பூச்செடிகளுக்கு நீர் ஊற்றினார்.
நாம் கொண்டுவந்த பூவையும் அம்மாவுக்கே வைத்தோம். பின், வீடு திரும்பும் முன் அவருடன் சேர்ந்து ஒரு
படம் எடுத்தோம்.
எப்பவும் ‘படம்! படம் !! படம் என்று கடுப்பாகும்; “ என் மனைவி புன்முறுவலுடன் பப்பா அருகில் நின்றா.
மனைவி படம் எடுக்க மகிழ்ச்சியுடன் வந்து நின்றதே பெரிது என எண்ணிய படி, எடுத்தபடத்தை வழமையாக ணழழஅ பண்ணி பார்க்கும் நான் பார்க்காமலே, கையசைத்து விடைபெற்று, காரில் ஏறினேன்.
மனைவி காருக்கு வருமுன், நான் ஏறியவுடன் படத்தைப் பார்த்தேன்.
ஆச்சரியம்! படத்தில் பப்பா இல்லை.
பப்பாவின் சமாதி மட்டும் தெளிவாகத் தெரிந்தது.
அதில் பொறிக்கப்பட்டிருந்தது:
“மறைவு: 2022.” என்று.
அப்படியென்றால், நாம் கண்டு பேசினவர் யார்?
ஏன் கல்லறையில் நம் கண்களுக்கு தெரிந்தவர்,
கேமராவிற்கு மட்டும் மறைந்தார்?
மனப்பிராந்தியா இது?
மீண்டும் இறங்கி சமாதியருகே சென்றோம்.
படத்தில் தெரிந்தது — நிஜமாகவும் அங்கே மறைவு: 1934 -2022. என்று தெளிவாக எழுதி இருந்தது.
இப்போது அம்மாவுக்காக வைத்திருந்த இரண்டு மலர்வளையங்களில் ஒன்றை எடுத்து
பப்பாவுக்காக வைத்தேன்.
அவர் தன் இறப்புக்கான நாள் எது? என விட்டிருந்த
வெற்றிடம் இப்போ நிரப்பப்பட்டுவிட்டது.
ஆனால் அவரது இடம் எம்மனதில் இன்றும் வெற்றிடமாகவே உள்ளது.
அதனை எளிதில் நிரப்ப முடியாது.
![]()
