பேராசிரியர் எஸ். பத்மநாதன் அவர்களின்கி.மு 300 முதல் கி.பி 500 வரை யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த“நாகர்” மக்களின் வரலாற்றைப் பதிவு

0
vm448

– கலாசூரி திவ்யா.சுஜேன்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

எம்மொழி கொண்டும் தமிழ் மொழியின் சிறப்பை சொல்லில் அடக்க முடியாதளவு பெருமை கொண்ட மொழியை நம் தாய்மொழியாக அடைய எத்தனை புண்ணியம் செய்தோம். தாய் மொழியின் இனிமையை தமிழர்களாய் கொண்டாடுவது போலவே நம் தாய் மண்ணின் வரலாற்றையும் அறிந்திருக்க வேண்டியதும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டியதும் நம் கடன். அதனைச் சாத்தியமாக்க இக்காலகட்டத்தில், தொழில்நுட்ப யுகத்தில் பல வழிகள் இருப்பினும், நூல் வடிவாகப் பதிவாக்கம் செய்வது எக்காலத்திற்கும் உரியது. தமிழர் தம் வரலாற்றை தமிழ் மொழியில் மட்டும் இன்றி, புலம் பெயர் தேசத்தில் பிறந்தோர்க்கும் சென்றடையும் வகையிலும், வெளிநாட்டவருக்கும் உதவிடும் வகையிலும் பதிவாக்க வேண்டும் எனில் ஆங்கிலத்திலும் நம் தமிழர் வரலாற்றை பதிவிட வேண்டும்.

இதனை நன்குணர்ந்து. இலங்கை வரலாற்றுத் துறையில் புகழ்பெற்ற பேராசிரியர் எஸ். பத்மநாதன் அவர்களின் ஆய்வு நூல் வெளியீட்டு விழா அண்மையில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது ஏலவே தமிழிலும் வெளிவந்துள்ளது.

“புடiஅpளநள ழக யn யுnஉநைவெ ஊiஎடைணையவழைnஇ ளுழஉநைவல யனெ ஊரடவரசந in துயககயெ 300 டீஊ–யுனு 500″ (கி.மு 300 – கி.பி 500 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பண்டைய நாகரிகம், சமுதாயம் மற்றும் கலாசாரம் குறித்த பார்வை) எனும் தலைப்பில் இந்த ஆய்வு நூல் வெளியிடப்பட்டது. யாழ்ப்பாணத்தின் 800 ஆண்டு கால பூர்வீக வரலாற்றினை உள்ளடக்கியதாக இந்த நூல் அமைந்துள்ளது.

கி.மு 300 முதல் கி.பி 500 வரை யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த “நாகர்” மக்களின் வரலாற்றைப் பதிவு செய்தல்,யாழ் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட அரிய கல்வெட்டுக்கள், உலோகங்கள் மற்றும் கற்களில் பொறிக்கப்பட்ட ‘தமிழ் பிராமி’ எழுத்துருக்கள் மூலம் அக்கால மக்களின் வாழ்வியலை மீட்டல், பண்டைய தென்னிந்தியாவுடன் யாழ்ப்பாணம் கொண்டிருந்த நெருங்கிய கலாசார,வர்த்தகத் தொடர்புகளைக் ஆதாரபூர்வமாக நிறுவல், யாழ்ப்பாணத்திற்கும் அனுராதபுரத்திற்கும் இடையே இருந்த கலாசார மற்றும் சமய ரீதியான ஒற்றுமைகள் நாக வழிபாடு, சைவம் மற்றும் நாகதீபத்தில் இருந்த பௌத்தம் ஆகியவை ஒன்றோடொன்று இணைந்திருந்த விதம் குறித்து விளக்கல், தென்னிந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நிலவிய ‘ஆரம்பகால இரும்பு யுக’ கலாசார ஒற்றுமைகள் மற்றும் யாழ்ப்பாணத்தின் தனித்துவமான குடியேற்ற முறைகள் குறித்து ஆழமான தரவுகள் வழங்கல் என்ற ஐந்து பிராதான ஆய்வுகள் இந்த நூலில் அடங்கியுள்ளன.

தெய்வம் மறவார், செயுங்கடன் பிழையார்
எதுதான் செயினும் ஏதுதான் வருந்தினும்
இறுதியில் பெருமையும் இன்பமும் பெறுவார்

என்று தமிழர்கள் எங்கிருந்தாலும் தம் சமய, பண்பாட்டு நம்பிக்கைகளையும் கடமை உணர்வையும் மறக்க மாட்டார் எனப் புலம் பெயர்ந்த தமிழர்க ளைப் புகழ்ந்தார் பாரதி. கடல் கடந்து சென்றாலும் தம் கடனை மறவாதோர் தமிழர் என்ற பாரதியின் நம்பிக்கையை காக்கும் வண்ணம் ஈழத்து தமிழர்களாய் தம் வரலாற்றினை வெளிநாட்டவருக்கு கொண்டு சேர்க்க வேண்டுமென இந்த நூலினை வெளியிடுவதற்கு ஆதாரமாக பேராசிரியர் பத்மநாதனின் நீண்டகால நண்பர் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் திரு. ஜிட்டோ அருளம்பலம் அவர்கள் கடமையாற்றினார். அவர் இந்த ஆய்வு நூல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட வேண்டும்,உலக மக்களுக்கு யாழ்ப்பாண வரலாறு சென்றடைய வேண்டும் என்பதில் கருத்தாக இருந்தார்.

அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ?
வானுறு மீனோ? மாளிகை விளக்கோ?
கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ?
விதியே தமிழச் சாதியை எவ்வகை
விதித்தாய் என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்.

ஏனெனில்

சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்
திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகும் கருதியும்

எல்லை யொன் றின்மைஎ எனும் பொருள் அதனைக்
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும் முன்புநான் தமிழச்
சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று
உறுதிகொண்டிருந்தேன்.

எனினும் விதியே! விதியே! தமிழச் சாதியை என்செயக் கருதி யிருக்கின் றாயடா? என்று தோற்றமும் தருமமும் உண்மையும் மாறிச் சிதைவுற்று அழியும் தமிழரை எண்ணி மனம் குமுறி விதியை நொந்த பாரதியாய் பலர் இன்றும் வாழ்ந்திருப்பதால் தான் தமிழர் இன்னும் தமிழராய் வாழ்கின்றனர்.

யாழ்ப்பாணத்தின் புராதன வரலாறு எதிர்கால சந்ததிக்கு சென்றடையும் வகையில் இக்காலத்தின் தேவை கருதி வெளியிடப்பட்ட இந்நூல் புலம்பெயர் தேசத்தில் பரவும் வழி செய்வோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *