மீள முடியாத ஈராக் பொருளாதாரம்:அமெரிக்க ஆக்கிரமிப்பின் விளைவா ?

0
vm449


——————————————————

  • ஐங்கரன் விக்கினேஸ்வரா
    (ஈராக் பொருளாதாரம் அமெரிக்க ஆக்கிரமிப்பின் விளைவால் முழுமையாக மீளாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. நீண்ட காலமாக எண்ணெய் செல்வம் ஈராக்கில் இருந்தும் பொதுமக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. காரணம் ஊழல் மற்றும் அரசியல் குழப்பம் என்று கூறப்படுகிறது)

எண்ணெய் வளமிருந்தும் ஏழை நாடா?

ஈராக் இன்று தினசரி மில்லியன் கணக்கான பீப்பா எண்ணெயை உற்பத்தி செய்கிறது. இருந்த போதிலும் அந்த எண்ணெயை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஈரான் போரால் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ளது. ஆனாலும் நீண்ட காலமாக எண்ணெய் செல்வம் ஈராக்கில் இருந்தும் பொதுமக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. காரணம் ஊழல் மற்றும் அரசியல் குழப்பம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க ஆக்கிரமிப்புக்குப் பின்னர் உருவான அரசியல் அமைப்பு, தேசிய அடையாளத்தை விட இன மற்றும் மத அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை ஊக்குவித்தது. இதனால் அரசாங்கங்கள் பலவீனமடைந்தன. வெளிநாட்டு நிறுவனங்களும் உள்ளூர் அரசியல் வட்டாரங்களும் எண்ணெய் வருவாயின் பெரும்பகுதியை கட்டுப்படுத்தின. மின்சார தட்டுப்பாடு, சுத்தமான குடிநீர் பற்றாக்குறை, வேலைவாய்ப்பு இல்லாமை போன்ற அடிப்படை பிரச்சினைகள் இன்னும் ஈராக்கில் தொடர்கின்றன. எண்ணெய் வளம் கொண்ட நாட்டில் கூட இளைஞர்கள் எதிர்கால நம்பிக்கையின்றி வாழும் நிலை உருவாகியுள்ளது. ஆயினும் ஈராக் பொருளாதாரம் முழுமையாக மீளாமல் இருப்பதற்குக் காரணம் பலவாகும். அது அரசியல், பாதுகாப்பு, ஊழல், மற்றும் கட்டமைப்பு பிரச்சனைகள் ஒன்றோடொன்று இணைந்த ஒரு சிக்கலான நிலை.
ஈராக் பொருளாதாரம் ஏன் இன்னும் மீளவில்லை என்பதற்கு அரசியல் நிலையற்ற தன்மை முக்கிய காரணமாகும். சதாம் ஆட்சி முடிந்த பிறகு நாடு முற்றிலும் மாற்றம் கண்டது. ஒரே மைய ஆட்சி இல்லை. பல அரசியல் கட்சிகள் மற்றும் பிரிவுகள்.அரசு அமைப்புகள் அடிக்கடி மாற்றம். முடிவெடுப்பில் தாமதம். நிலையான நீண்டகால பொருளாதார திட்டங்கள் செயல்படவில்லை.

மீள முடியாத ஈராக் பொருளாதாரம்:

மத்திய கிழக்கின் எண்ணெய் செல்வம் மிகுந்த நாடுகளில் ஒன்றாக விளங்கிய ஈராக் இன்று வரை முழுமையான பொருளாதார மீட்சியை அடைய முடியாமல் தவித்து வருகிறது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் களஞ்சியங்களை கொண்டிருந்தும், வேலைவாய்ப்பு பற்றாக்குறை, ஊழல், அரசியல் நிலையற்ற தன்மை, அடிப்படை வசதிகளின் சீரழிவு போன்ற பல்வேறு நெருக்கடிகளால் ஈராக் மக்கள் இன்னும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்ன என்ற கேள்வி எழும்போது, பல அரசியல் ஆய்வாளர்களும் பொருளாதார நிபுணர்களும் ஒரே விடையை சுட்டிக்காட்டுகின்றனர். 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஆக்கிரமிப்பு.

சதாமின் வலுவான அரசியல் பொருளாதாரம்:

சதாம் ஆட்சிக் காலத்தில் ஈராக் ஒரு சர்ச்சைக்குரிய அரசியல் அமைப்பாக இருந்தாலும், அதன் பொருளாதார அடித்தளம் உறுதியானதாகவே இருந்தது. கல்வி, மருத்துவம், குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் மத்திய கிழக்கில் முன்னேற்றமான நிலையில் காணப்பட்டன. எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைத்த வருவாய் அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததால், மக்கள் நலத்திட்டங்கள் பலவும் செயல்படுத்தப்பட்டன.
ஆனால் 1991 வளைகுடா போருக்குப் பின்னர் விதிக்கப்பட்ட ஐ.நா. பொருளாதார தடைகள் ஈராக் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தத் தொடங்கின. இருந்தபோதிலும், அந்த அமைப்பு முற்றிலும் சிதைவடையவில்லை. 2003 அமெரிக்க படையெடுப்பே அந்த நாட்டின் நிர்வாக அமைப்பை முழுமையாக உடைத்தெறிந்த முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ஆக்கிரமிப்பு

ஜனநாயகத்தை கொண்டு வருதல் என்ற பெயரில் அமெரிக்க படைகள் நடத்திய அழிவுகளின் விளைவாக இன்னும் ஈராக் மீள் எழவில்லை. 2003 இல் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் அணு ஆயுதங்கள் மற்றும் பயங்கரவாதத் தொடர்புகள் என்ற காரணங்களை முன்வைத்து ஈராக் மீது படையெடுத்தன. பின்னர் அவ்வாறு கூறப்பட்ட அணு ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அந்த போரின் விளைவாக ஒரு முழு நாடும் சிதைந்தது. ஈராக் இராணுவம் கலைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அரசின் நிர்வாக அனுபவம் கொண்டவர்களை அதிகார அமைப்பிலிருந்து நீக்கியது, நாட்டை நிர்வாக வெற்றிடத்திற்குள் தள்ளியது. இந்த வெற்றிடமே பின்னர் மத அடிப்படைவாத குழுக்கள், ஆயுதப்படைகள் மற்றும் தீவிரவாத இயக்கங்களுக்கு வளர்ச்சியளித்தது.

தேசிய பாதுகாப்பு பிரச்சனை

தொடரும் போர்களின் காரணமாகவும், 2003 க்கு பிந்தைய உள்நாட்டு கலவரங்கள் ஐளுஐளு எழுச்சி (2014–2017)தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்களால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள். இதனால் தொழில் மற்றும் சுற்றுலா வளர்ச்சி குறைந்து வருகிறது. ஊழல் (ஊழசசரிவழைn) இது இன்றைய ஈராக்கின் மிகப்பெரிய பிரச்சனை. அரச நிதி தவறாக பயன்படுத்தப் படுகிறது. வேலைவாய்ப்பு அரசியல் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் அபிவிருத்தி திட்டங்கள் நிறைவேறாமல் நிறுத்தப்பட்டன. எண்ணெய் வருமானம் இருந்தும் அது மக்களுக்குச் சரியாக செல்லவில்லை

எண்ணெய் சார்பு வர்த்தகம் அதிகம் என்பதால் ஈராக் பொருளாதாரம் இன்னும் பெரும்பாலும் எண்ணெய் மீது சார்ந்ததாக இருக்கிறது. விவசாயம், தொழில்துறை வளர்ச்சி குறைவாகும். எண்ணெய் விலை குறைந்தால் பொருளாதாரம் உடனே பாதிக்கப்படுகிறது. மேலும் உள்கட்டமைப்பு (ஐகெசயளவசரஉவரசந) சேதம் அடைந்து வருகிறது. போர்களால் சாலைகள், மின்சாரம், தண்ணீர் அமைப்புகள் சேதமடைந்தன. பல பகுதிகளில் இன்னும் மின்சாரம் முறையாக இல்லை. தொழிற்சாலைகள் குறைவாக உள்ளதால் உற்பத்தி திறன் குறைவாக உள்ளது.

இதனால் வேலைவாய்ப்பு பிரச்சனை இளைஞர்களை அதிகம் பாதித்துள்ளது. வேலை வாய்ப்பு குறைவால் அரசு வேலைகளுக்கு மட்டுமே அதிக போட்டி நிலவுகிறது. சமூக அதிருப்தி மற்றும் பொருளாதார அழுத்தம் அதிகரிக்கிறது. வெளிநாட்டு முதலீடு குறைவால் பாதுகாப்பு அபாயமும், சட்ட மற்றும் நிர்வாக குழப்பமும் ஊழல் அபாயம் உள்ளது. இதனால் மேற்குலக பெரிய நிறுவனங்கள் முழுமையாக ஈராக் சந்தையில் நுழைய தயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

போரும் பொருளாதார வீழ்ச்சியும்:

அமெரிக்க ஆக்கிரமிப்புக்குப் பின்னர் உருவான அரசியல் குழப்பம், பின்னாளில் ஐளுஐளு போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு வழிவகுத்தது. 2014 ஆம் ஆண்டு மோசுல் உள்ளிட்ட பல பகுதிகளை ஐளுஐளு கைப்பற்றியபோது, ஈராக் மீண்டும் ஒரு பேரழிவை சந்தித்தது. போர் காரணமாக சாலைகள், பாலங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் என பல்வேறு கட்டமைப்புகள் அழிந்தன. மீள்கட்டமைப்பிற்காக பில்லியன் கணக்கில் டாலர்கள் செலவிடப்பட்டாலும், ஊழல் மற்றும் அரசியல் சண்டைகள் காரணமாக பல திட்டங்கள் முழுமை பெறவில்லை. ஈராக் பொருளாதார நெருக்கடிக்கான முழுப் பொறுப்பையும் அமெரிக்காவுக்கு மட்டும் சுமத்த முடியாது என சிலர் வாதிடுகின்றனர். ஈராக் அரசியல் தலைவர்களின் ஊழல், பிராந்திய சக்திகளின் தலையீடு, மத அரசியல், நிர்வாக திறனின்மை ஆகியவையும் பெரும் காரணிகளாக உள்ளன.

அமெரிக்கா மட்டும் காரணமா?

ஆனால் இக்கட்டான சூழ்நிலைக்கு அடித்தளத்தை உருவாக்கியது அமெரிக்க ஆக்கிரமிப்பே என்பதில் பெரும்பாலான ஆய்வாளர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளனர். ஒரு நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக அமைப்பை ஒரே நேரத்தில் முற்றிலும் அகற்றியதன் விளைவாக ஏற்பட்ட குழப்பம், இன்னும் ஈராக்கை துரத்திக் கொண்டிருக்கிறது. ஈராக்கில் இன்னும் அமைதி முழுமையாக மீளாத காரணங்களால் அரசியல் குழப்பம் நிலவுகிறது. பாதுகாப்பு பிரச்சனைகளுடன் ஊழல், எண்ணெய் சார்பு, கட்டமைப்பு சேதம், வேலைவாய்ப்பு குறைவும் தொடர்கிறது. ஈராக் இன்று ஒரு முக்கியமான வரலாற்றுப் பாடமாக நிற்கிறது. வெளிநாட்டு தலையீடு மற்றும் போர், ஒரு நாட்டின் அரசியல் அமைப்பை மட்டும் அல்ல் அதன் பொருளாதாரம், சமூக ஒற்றுமை, மக்களின் எதிர்கால நம்பிக்கை ஆகிய அனைத்தையும் சிதைக்கக்கூடும் என்பதை ஈராக் நிரூபித்துள்ளது. அமெரிக்க ஆக்கிரமிப்பு “ஜனநாயகத்தை” கொண்டு வந்ததா என்பது இன்னும் விவாதமாக இருக்கலாம். ஆனால் அது ஈராக் பொருளாதாரத்தை பல தசாப்தங்களுக்கு பின்னுக்கு தள்ளியதோ மறுக்க முடியாத உண்மையாகவே உள்ளது. ஈராக்கின் இன்றைய முக்கிய பிரச்சனை பொருளாதாரம் மட்டும் அல்ல. அது அரசியல், பாதுகாப்பு, நிர்வாக அமைப்பு மூன்றும் இணைந்த ஒரு சிக்கலாகவே இன்னமும் தொடர்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *