ஜேர்மனி வூப்பெற்றாள் ஸ்ரீPநவதுர்க்கா அம்பாள் ஆலயத்தின் தேர்த்திருவிழா.

0
vm467

ஜேர்மனி வூப்பெற்றாள் ஸ்ரீPநவதுர்க்கா அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மஹோற்க்ஷவ பெருவிழா 22.05.2026ல் கொடி ஏற்றத்துடன் ஆரம்பித்து 02.06.2026ல் பைரவர் மடையுடன் அருள் பொங்கி இனிதே நிறைவானது. உற்க்ஷவகாலங்களில் தினம் தோறும் 108 சங்குளால் அம்பாளுக்கு அபிஷேகமும், சிறப்பு ஆராதனை வழிபாடும் நடைபெற்றன. மஹோற்க்ஷவ பெருவிழாவின் ஒன்பதாவது திருவிழாவாக தேர்த்விழா மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றது.ஸ்ரீ நவதுர்க்கை தேரினை நோக்கி வரும் போது சிம்ம பீடத்தில் அமர்ந்திருந்தாள்.வரும்போது சிவப்பு நிறத்திலான நிலப்பாவாடை விரித்து கௌரவித்திருந்தனர். அம்பாளின் அழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது .அவ்வளவு பேரழகாக இருந்தாள்.எம் பெருமாட்டியின் திருமேனியை தழுவுவதற்கு அழகிய மலர் மாலைகள்,பொன் ஆபரணங்கள் என்று பாதாதி கேசம்வரை போட்டி போட்டு அவளை சரன் அடைந்திருந்தது.கண்காள் காண்பிங்களோ என்று அப்பர் சுவாமிகள் கூறியது போன்று அடியவர்களின் கண்கள் அவளின் பேரழகில் கரைந்திருந்தது. தேரோடும் திருவீதியில் காவடிகள் ,பாற்செம்புகள், கற்பூரச்சட்டிகள்,கலாச்சார விழுமிய நடனங்கள்,தமிழ்வேதங்கள் என்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ உலகாளும் நாயகி தேரினில் பவணி வந்து அருட்காட்சி கொடுத்ததும், அவளின் கருனை மழையில் அடியார்கள் நனைந்து இன்பம் பெற்றதையும் கானும் போது களிப்பாள் உள்ளம் கரைபுரண்டோடியது. தகவல்:சி.சக்திவேல்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *