இலங்கை சுகாதாரச் செய்திகள்…
- இலங்கையில் மூன்று பேரில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த நோய் காணப்படுவதாகவும் இவர்களில் 69 வீதம்பேர் சிகிச்சை பெறுவதில்லை எனவும் அரச புள்ளிவிபரம் ஒன்று அறிவித்துள்ளது.
- இலங்கையில் புகையிலைப் பாவனையால் 200 க்கும் அதிகமான நோய்கள் ஏற்படுவதாகவும் வருடாந்தம் 2000 பேர்வரை உயிரிழப்பு. இதனால் அரசுக்கு வருடம் 214 மில்லியன் ரூபா மேலதிகச் செலவு ஏற்படுகின்றது என்று புகையிலை அதிகார சபை அறிவித்துள்ளது.
- 01.01.2026- 31.05.2026வரை 35.000 டெங்கு நோயாளர்கள் அடையாளம். 20 பேர் இறப்பு என டெங்கு நோய் கட்டுப்பாட்டுச்சபை அறிவித்தது.
- தற்போது இலங்கையில் 237 பேருக்கு மூளைக்காய்ச்சல் நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது தொற்றும் அபாயம் காணப்படுவதால் பொதுமக்கள் மிக அவதானமாக இருக்கும்படி சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
- இலங்கையில் புற்றுநோய் அதிகரிப்பு 20 ஆண்டுகளில் மும்மடங்காக அதிகரித்துள்ளது. 2024ம் ஆண்டில் 35.855 பேராக உயர்ந்துள்ளது. 16.398 ஆண்கள் 19.457 பெண்கள் தற்போது நோயாளிகளாக இருக்கிறார்கள் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
- நாட்டிலுள்ள பெண்களின் சனத்தொகையில் 15 வீதமானோர் உடற்பருமன் பிரச்சனைகளால் பாதிப்பு. இதனால் பலர் இறப்பதாகவும் அரசுக்குப் பெருந்தொகைப் பணம் செலவாகின்றது எனவும் அரச புள்ளிவிபரம் தெரிவித்தது.
இலங்கைச் செய்திகள்… - யாழ் பல்கலைக் கழகத்தில் தற்போது 14.600 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள் இதில் 9.000 மாணவர்கள் தமிழ் மாணவர்கள் என சிரேஷ்ட விரிவுரையாளர் தெரிவித்தார்.
- கடந்த மே மாதத்தில் மட்டும் 311 ஒன்லைன் மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன.
- அத்தியாவசிய பொருட்கள் மீண்டும் விலை ஏற்றம் பொதுமக்கள் பெரும் அவதி.
- -பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு 1.1.2026 – 31.05.2026வரை 128 யானைகளும் 35 மனிதர்களும் இறந்துள்ளனர் என வனஜீவராசிகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
- மூத்த பத்திரிகையாளர் டி.பி.எஸ்.ஜெயராசா கனடாவில் காலமானார் வீரகேசரியில் 1977 தொடக்கம் இற்றைவரை எழுத்தோடு பயணித்தவராவர்.
- இந்திய அரசாங்கம் இலங்கைப் பொலிசுக்கு 134 கெப் ரக வாகனங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
- 40 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலவச விசா வழங்குவதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.
- இலங்கையில் தெங்குப்பொருட்கள் ஏற்றுமதியால் 406 மில்லியன் டொலர் வருவாயாகக் கிடைத்திருப்பதாக ஏற்றுமதிச் சபை அறிவித்தது.
- மத்தியகிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர் நடவடிக்கைகளால் இலங்கையில் சுமார் 47 லட்சம்பேர்வரை கடுமையான உணவுத்தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளார்கள் என உலக உணவுத்திட்ட அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
- கடந்த 5 மாதங்களில் பதுளை, ஊவா மாகாணத்தில் 80 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியிருப்பதாகச் சிறுவர் பாதுகாப்புச் சபையினர் அறிவித்துள்ளனர்.அநுராதபுரத்தில் சிறுமி ஒருவர் பௌத்த துறவியால் பாலியல் வன்கொடுமை வடக்கு, கிழக்கு, தென்னிலங்கை எங்கும் ஆர்பாட்டப் பேரணிகள் இடம்பெற்றன.
- 2018 – 2022 காலத்தில் 488 சிறுவர்கள் புத்த துறவிகளால் பாதிக்கபட்டனர் என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.
- இலங்கையிலுள்ள 60 வீதமான கட்டடங்கள் முறையான அனுமதிகள் இல்லாமல் கட்டப்பட்டிருக்கின்றன. இதனால் பல ஆபத்துகள் நேரிட வாய்ப்புகள் உள்ளன என தேசிய கட்டட நிறுவனம் அறிவித்துள்ளது.
- கடந்த வெசாக் தினத்தில் நாடுமுழுவதும் சிறைகளிலுள்ள சிறு குற்றவாளிகள் 61 பேரை ஜனாதிபதி பொது மன்னிப்பின்கீழ் விடுதலை செய்துள்ளார்.
- யாழ்-செம்மணியில் புதைகுழிகள் தோண்டும் பணிகள் தொடர்கின்றன. கடந்த 12.06.2026 வரை 341 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக பத்திரிகைச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
- இந்த ஆண்டில் 31.05.2026வரை 460 இணையவழி நிதி மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் கண்காணிப்புப்பரிவு அறிவித்துள்ளது.
- யாழ்ப்பாண அரசை ஆண்ட தமிழ் மன்னன் 2வது சங்கிலி மன்னனின் 407வது ஆண்டு நினைவு தின விழா யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது.
- 2018 – 2024 ஆண்டு காலப்பகுதியில் பல்வேறு காரணங்களால் 2.67.138 மாணவர்கள் பாடசாலைக் கல்வியைத் தொடராமல் பாதியிலேயே விலகியிருக்கிறார்கள் என பிரத மந்திரி பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
![]()
