சிறுகதை: கொஞ்சம் பேசுவோம்.

0
vm457

— பவித்திரா ராகவன்.

வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அறைக்கு வெளியே யாருமே இல்லாமல் தனிமையில் உயிரைக் கையில் பிடித்தவாறு பிரம்பை பிடித்தவளாகக் காத்துக் கொண்டிருக்கிறேன். உள்ளே எமது பதினைந்து வயது மகன் லாவண்யன் வாழ்விற்கும் சாவிற்குமிடையில் போராடிக் கொண்டிருக்கிறான். அங்கிருப்போரின் கண்ணிற்கு நான் கொடியவளாகக் காட்சியளிக்கிறேன். என் உறவினர்களின் பார்வையில் நான் அடங்காப்பிடாரி, திமிர் பிடித்தவள்,சொற்கேளாதவள் இன்னும் பல பட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். என்னை குறை கூற ஆயிரம் உறவுகள் இருந்தாலும் கையைப் பிடித்து ஆறுதல்படுத்த ஒரு ஜீவன் கூட அருகிலில்லை. சமூகம் என்ன வேண்டுமென்றாலும் கதைக்கட்டும். என் மகன் உயிருக்கும் போராடும் போது இந்த ஏச்சுக்கள் ஒன்றும் பெரிதல்ல. எந்தவொரு தாயும் தனது மகன் பிழையான வழியில் போக அனுமதிக்க மாட்டாள் நானும் விதிக்குட்பட்டவளே. ஆயிரமாயிரம் கனவுகளுடன் ஒருவனைக் கைபிடிக்தேன். அதுவும் உற்றாரும் உறவினரும் அமைத்துக்கொடுத்த வாழ்க்கை.ஆனால் வெறும் ஒரு மாத வாழ்க்கையிலே அவனுக்கு ஏற்கனவே திருமணத்திற்கு புறம்பான வாழ்க்கை இருக்கிறது என்பதை அறிந்த பின்னர் அந்தத் திருமணபந்தக்கை தொடர எனது தன்மானம் இடம் தரவில்லை. குடும்பத்தாரினதும் உறவினர்களினதும் அறிவுரைகளை மீறி வீட்டை விட்டு வெளியேறினேன். இப்போது புரிகிறதா எனக்கு ஏன் இவ்வளவு அளவுகடந்த பட்டங்கள் அளிக்கப்பட்டனவென்று எனக்குக் கிடைத்த ஒரே ஆறுதல் எனது திருமண வாழ்த்தைக்குக் கிடைத்த எனது மகன் லாவணியன் இன்று அந்த மகன்தான் உள்ளே உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்

வெறும் பாடசாலைக் கல்வியை மட்டுமே வைத்திருந்த நான் ஆரம்ப காலங்களில் அவனை வளர்ப்பதற்காக கிடைத்த வேலை எல்லா வற்றையும் செய்தேன். பணம் தேடுவதற்காக நாள் முழுவதும் உழைத்தேன் இதனிடையில் என்னுடைய கல்வித்தகமையையும் திறந்த பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் கற்று பட்டம் பெற்றேன். நல்ல வேலையும் கிடைத்தது இதற்கு நடுவில் லாவண்யணும் நாளொடு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்கான். நல்ல பொறுப்பானவனாகவும் திறமைசாலியாகவும் மிளிர்ந்தான் அவனைப் பற்றி நான் கவலைப்படத் தேவையில்லையென எனக்குள் பட்டுக் கொண்டேன். என் கஷ்டத்தை நன்கு அறிந்தது அவன் அனைத்து விடயங்களையும் சிறப்பாக கையாளவான். ஆனால் ஒரு வருடமாக என்னால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. தெரியவில்லை, யார் கண் பட்டதோ தெரிய வில்லை.

ஆம், வழமைக்கு மாறாக லாவண்யன் போக்கில் கடும் மாறுதல். ஏதே பிரம்மை பிடித்தவன் போல காணப்படுவான் அதிகம் பேசுவதை தவிர்த்துக் கொள்வான், நானும் எவ்வளவோ முயன்றும் ஏதும் மறாவில்லை. அன்பாக அருகில் இருந்து,

“அப்பு …….. என்னாச்சு?……. “என்று கேட்டால் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்று கதவை படார் என்று மூடிக்கொள்வான் சில வேளைகளில் முரட்டுத்தனமான உரக்க கத்துவான். ஒருவேளை பருவமாற்றமாக இருக்கலாம் என்று என்னை நானே சமாதானம் என்று செல்வேன். அவன் நண்பர்களிடம் கூட கேட்டுப்பார்த்தேன் ஏதும் காதல் பிரச்சினை என்றாலும் சொல்லுங்கள் என்று கேட்டுப்பார்த்தேன். போதைக்கு அடிமையாகி விட்டானோ என்றும்எண்ணிப் பார்த்தேன்.

முன்பெல்லாம் கணித பாடத்தை மிகவும் விரும்பிப் படிப்பான் அவன் பாடசாலை ஆசிரியர் சண்முகத்தை அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவரும் இவனுக்கு விருப்பத்துடன் பாடம் புகட்டுவார் பாடசாலை நேரத்திற்கு அப்பாலும் வீட்டிற்கு அழைத்து கற்றுக் கொடுப்பார். இப்போதெல்லாம் அவருடன் கூட லாவணயன் அதிகம் பேசுவதில்லையாம் என்று நண்பர்கள் கூறி கேள்விப்பட்டேன். நானும் இது நாளை மாறிவிடும் என்று நம்பிக்கை கொண்டேனே தவிர, ஆயிரம் நாளைகள் கடந்தும் எதுவும் மாறவில்லை. என்னாலும் இதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவனுடன் சண்டை போடத் தொடங்கினேன். பலமுறை ஏன் இப்படி இருக்கிறாய் என நச்சரிக்கவும் தொடங்கினேன். அன்று காலை அப்படி தான்

“லாவண்….. இந்தா இதில் இட்லி இருக்கு சாப்பிடு…….”
“இல்ல வேணாம்….”
” லாவண் முதலில் சாப்பிடு. இரண்டு பேரும் சேர்ந்து வைத்தியசாலைக்கு போவோம். ஒரு மனநிலை வைத்தியரிடம் கதைத்தால் உனக்கு கொஞ்சம்….. முடிக்கும் முன்பே…

அம்மா பேசாம போங்கோ… நான் பைத்தியமல்ல……..

“லாவண் உன்னை பார்க்க எனக்கு பயமாக இருக்கு நண்பர்களோட கூட கதைக்கிறதில்லை…… வா சண்முகம் சேரையாவது பார்த்திட்டு வருவம் பிரசசினையைக் கதை…… “

ஒன்றும் தேவையில்லை. நீங்கள் உங்கட வேலையை மட்டும் பாருங்கோ”

கதை நீண்டு கொண்டோ போக எனது பொறுமையும் கோபமும் எல்லை மீறியது. நானும் கடந்த ஒரு வருமாக அவனில் ஏற்பட்ட இந்த கடும் மாற்றத்தை பொறுத்திருந்தேன். என்னுடைய பிள்ளையைப் பற்றி வெளியில் பேசும் அளவிறக்கு எந்தவொரு உறவினரும் எனக்கில்லை. தனித்து ஒரு தாயாக ஆண்பிள்ளையை வளாப்பதென்பது அவ்வளவு. எளிதல்ல. பொருளரகாரத்தையும் தேடிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இருந்த இடத்திலிருத்து ஏவல் செய்ய எனக்கு பணமோ, சொத்தோ இல்லை. மாதந்த வருமானமே இன்னும் எம்மை வாழவைக்கிறது இதற்கு நடுவில் லாவண்யனை எப்படி கையாள்வது என்பது பெரும் குழப்பமாக இருந்தது. இவ்வாறான சூழ்நிலையில் அவன் உங்கட வேலையைப் பாருங்கள் என சொன்னதும்…… என்னை அறியாமல் “அதுசரி. உனக்காக என்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்ததற்கு எனக்கு இது தேவைதான், இப்படியொரு பிள்ளை இருந்தாலென்ன? இல்லாவிட்டால் என்ன…. என்று சொல்லி விட்டு வேலைக்குச் சென்று விட்டேன்.

வீடு திரும்பில போது தூக்க மருந்துகளை எடுத்து விட்டு குற்றுயிராக இருந்த என் மகனைக் கண்டு என் உயிரே போய்விட்டது.கத்திக்குழறி அயலவரின் உதவியுடன். வைத்திய சாலையில் அனுமதிக்தேன்.

நான்கு நாட்கள் கடந்தன.வைத்தியசாலையிலேயே நானும் காத்திருக்கிறேன். சத்திரசிகிச்சை அறையிலிருந்து சாதரண வாட்டிற்கு இன்றுதான் மாற்றினார்கள். இதுவரையில் அவனது தந்தையோ ஏனைய உறவுகளோ ஒரு தடவையேனும் எட்டிப் பார்க்கவில்லை. நானும் எதிர்பார்க்கவில்லை. இன்று வீட்டிற்கு செல்லலாமென பொறுப்பான தாதி சொன்னதால் நானும் அதற்குரிய ஒழுங்குமுறைகளைச் செய்ய வீட்டிற்கு புறப்பட்டேன்.

நான்கு நாட்களுக்கு முன்னர் சமைத்த உணவு அப்படியே இருந்தது. போட்ட பொருட்கள் எல்லாம் அப்படியே இருந்தன. அனைத்தையும் துப்பரவு செய்து விட்டு, லாவணியனின் அறைக்குச்சென்றேன். அவனது அறையை ஓழுங்குபடுததினேன். ஒருவேளை நண்பர்கள் அவனை சுற்றிஇருந்ததால் அவனது மனதிற்கு ஆறுதலாக இருக்குமென எண்ணி அவர்களை தெலைபேசியில் அழைத்து மாலை வீட்டிற்கு வருமாறு கூறினேன். ஒருவேளை சண்முகம் சாரும் இருந்தால் நன்றாக இருக்குமென மனதிற்குப்பட்டது. ஆனால் அவரது தொடர்பிலக்கம் லாவண்யனின் கையடக்கத் தொலைபேசியில் தான் இருக்குமென்பதால்தான் அதனை எடுத்து உhயசபந போட்டேன்.

மறுபடியும் வைத்தியசாலைக்கு செல்லவேண்டும் – அதற்குள் சண்முகம் ளுசை ருக்கு அழைப்பெடுக்கலாம் என்னெண்ணி அவரது பெயரை தேடிய போது என் தலையே சுற்றியது. அவரிடமிருந்து லாவண்யனுக்கு குறுச்செய்திகளும் படங்களும் ஒரு ஆசிரியனிடமிருந்து மாணவனுக்கு அனுப்பக்கூடியவை அல்ல, அவ்வளவு மோசமாகவும் ஆபாசமாகவும் இருந்தன. இவை இன்று நேற்றல்ல.நீண்ட காலமாக அனுப்பப்பட்டிருக்கின்றன இப்போது எனக்கு எல்லாம் புரிந்தன. என் மகன் எவ்வளவு வேதனையை அனுபவித்துள்ளான் எனப்புறிந்தது. அவனது தந்தை அவனுடன் இருந்ததிருந்தால் அவரிடம் தன் பிரச்சினையை எடுத்துரைத்திருப்பானோ என்னவோ.. அவரது இச்சைக்கு லாவண்யனைப் பலரையும் உட்படுத்தி இருப்பார் போலும் தாரை தாரையாக வடிந்த கண்ணிரைத்துடைத்துவிட்டு புறப்பட்டேன். வைத்தியசாலைக்குள் நுழைந்த போது லாவண்யன் கட்டிலில் உட்கார்ந்துருந்தான். அருகில் சென்று கதிரையில் அமர்ந்தேன் அவனுடன் என்ன கதைப்பது? எப்படிக் கதைப்பது? ஒன்றுமே புரியவில்லை அவனாகவே….

“அம்மா….. என்னை மன்னித்து விடுங்கள்.
நான் உங்களைக் கஷ்டப்படுத்தி விட்டேன். நீங்கள் பட்ட வேதனையை இங்கிருந்த எல்லாரும் சொன்னார்கள்…. நான் உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்…..

“ சொல்லமுடியாமல் தடுமாறினான்.

“லாவண் ….. இனிமேல் நீ சண்முகம் சாரிடம் படிக்கத் தேவையில்லை…. எல்லாவற்றையும் தூக்கிப் போடு….. நான் எப்போதும் உனக்காக இருக்கிறேன்……” என்று சொல்லி அவனது கையடக்கத் தொலைபேசியை அவனிடம் நீட்டினேன்.

அம்மா என்று என்னைக் கட்டியணைத்தான்.

ஒரு தாயாக என் மகனின் இந்த நிலைக்கு ஏதேதோ காரணமிருக்குமென யோசித்த எனக்கு ஒரு பெண் பிள்ளைகளுக்கு நடக்கும் துஷ்பிரயோகம், ஆன் பிள்ளைகளுக்கும் நடக்கலாமென்பது ஏன் புரியவில்லை? என்னைப்போன்று இன்னும் எத்தனை பெற்றோர்?

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *