அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையை விட30 மீட்டர் உயரம்மான கருட விஷ்ணு சிலை!

0
02.page.

  • மாதவி யேர்மனி
    தென்னை,நெல்வயல்,கடல்,மலை,என இயற்கை அழகு சுற்றுலாப் பணிகளை ஒருபுறம் பாலி கவர்ந்து இழுக்க,மறுபுறம் மனிதன் வடித்த சிலைகள் சுற்றுலா பயணிகளைக் கட் டிப்போடுகிறது. பாலி விமான நிலையத்தில் (Denpasar International Airport) இறங்கியதும் மலை உச்சியில், மலையின் கால்வாசி உயரத்தில் தெரியும் ( Denpasar International Airport) கருடன் விஸ்ணு சிலையே முதலில் வரவேற்கும்.

கடவுள், கதைகள், உண்மை பொய் என்பதற்கு அப்பால் கற்களுக்கு உயிர் உண்டு என கலைஞர்கள் சொல்வது உண்மை என்பதனை சிற்பிகளின் கைவண்ணம் சொல்கிறது. நான் சொன்ன அந்த பிரம்மாண்டமான கருட விஷ்ணு சிலை இந்தோனேசியாவில் உள்ள பாலியில் கலாச்சார பூங்கா ஒன்றில் கருட விஷ்ணு கென்கானா என்ற பிரம்மாண்டமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. 20 கி.மீ அப்பால் இருந்து பார்த்தாலும் இச்சிலை தெரியும்.

புராணக்கதை ஒன்று இப்படிக் கூறுகிறது.
‘அடிமையாக இருந்த தனது தாயை விடுவிப்பதற்காக கருடன் தேவலோகத்தில் இருந்து அமிர்தத்தை கைப்பற்றினார்.

அப்போது அவர் தேவர்களுடனும் இந்திரனுடம் போரிடும் சூழல் ஏற்பட்டது. ஆனாலும் அவரை எவராலும் வெற்றி கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவர் பறவைகளின் ராஜாவாக இருக்க பல்வேறு ரிஷிகளின் யாகத்தில் உருவாக்கப்பட்டவர். அப்படிப்பட்ட சக்தி படைத்த கருடனை மகாவிஷ்ணு தன்னுடைய வாகனமாக ஏற்றுக் கொண்டு அவரின் மீது பயணம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டார். ‘ இந்த கதையை நினைவு கூறும் வகையில் பாலியில் பிரம்மாண்டமான கருடன் மீது மகாவிஷ்ணு வீற்றிருப்பது போன்ற பிரம்மாண்டமான சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதையின் உண்மைத்தன்மையை இங்கு ஆராய வரவில்லை. பிரமாண்டமான சிலை பற்றியே பார்ப்போம்.

46 மீட்டர் உயரம் கொண்ட பீடத்துடன் அமைந்த அந்த சிலையின் மொத்த உயரம் 122 மீட்டர் ஆகும். இந்தோனேஷியாவின் மிக உயரமான சிலையாக இது திகழ்கிறது. இதுவே நான் சொன்ன னயசளழn யுiசிழசவ (Bali) இல் இறங்கியதும் தெரியும் உயரமான சிலை ஆகும். இந்தோனேசியச் சிற்பியான நியோமன் நுவார்டா (Nyoman Nuarta) என்பவரால் 1990-ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. சிலையின் கட்டுமான வேலைகள் 1997-ஆம் ஆண்டில் தொடங்கின. இருந்தாலும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக இந்தத் திட்டம் திடீரென நிறுத்தப் பட்டது.

பதினாறு வருட இடைவெளிக்குப் பிறகு 2013 ஆம் ஆண்டில் கட்டுமானம் மீண்டும் தொடங்கியது. இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படும் போது சர்ச்சைகள் இல்லாமல் இல்லை. பாலித் தீவின் ஆன்மீக சமநிலையைச் சீர்குலைக்கலாம் என்று பாலித் தீவின் மத அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் பாலித் தீவின் இந்துப் பொதுமக்களின் ஆதரவு இருந்ததால் திட்டம் தொடர்ந்தது. 2018- ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டு அதே வருடம் செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி அப்போதைய இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோவிட்டோட்டோ என்பவரால் இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது.

சிலையை அமைப்பதற்கான கற்கள் கிரேன்களின் அதிகபட்ச சுமையை தாங்கும் வகையில் 1500 சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டு பின்னர் ஒன்றின் மீது ஒன்றாக அடக்கப்பட்டு இந்த பிரம்மாண்ட கருட விஷ்ணு சிற்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சிலையானது 21 அடுக்குமாடி கட்டிடத்தின் உயரத்திற்கு ஒப்பானது. இந்த சிலையில் கான்கிரீட் கலவை செம்பு,பித்தளை, துருப்பிடிக்காதV/F சட்டகம் போன்றவை பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. கருடனின் மீது அமர்ந்திருக்கும் விஷ்ணுவின் தலையில் உள்ள கிரீடத்திற்கு தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. சிலையை அலங்கரிக்கும் வகையில் பிரத்தியேக விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிலை அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையை விட சுமார் 30 மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்த சிலையை அமைக்க சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகி இருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *