கண் துடித்தல் தீமையின் அறிகுறியா?

0
vm279

  • -பொலிகையூர் ரேகா. இங்கிலாந்து.

என் வலது கண்ணும் துடித்தது உன்னைக் கண்டேன் அன்னாள் பொன்னாள்.

இடது கண்,வலது கண் துடித்தலென்பது சகுனம் பார்ப்பவர்களின் பார்வையில் மிகவும் கெடுதலான ஒன்றாகும். பெரும்பாலும் தீமை நடக்கப்போவதற்கான அறிகுறியாகவும்; சில நேரங்களில் நற்பேறிற்கான (அதிஸ்டம்) அறிகுறியாகவும் பார்க்கப்படுகின்றது.

மனித உடலில் ஒரு தசை துடிப்பு (muscle twitch) என்பது சுமார் ஒவ்வொரு நபருக்கும் ஏதேனும் ஒரு நேரத்தில் நடக்கும் இயற்கையான நிகழ்வாகும். ஆனால் பண்டைய காலத்தில் இருந்து கண் துடிப்பது பற்றி பல நம்பிக்கைகள் நிலவுகின்றன. இது நாடுகள், மக்களின் பண்பாடுகள், மற்றும் ஆண்–பெண் ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் வேறுபடுகிறது.

பொதுவான நம்பிக்கைகள்:
      • ஆண்கள்:
            ○ வலது கண் துடித்தால் நல்லது நடக்கும்.
            ○ இடது கண் துடித்தால் தீமை வரலாம்.
      • பெண்கள்:
            ○ இடது கண் துடித்தால் நன்மை.
            ○ வலது கண் துடித்தால் தீமை.
பிற நம்பிக்கைகள்:
      • மேல் கண் துடித்தால் நன்மை,கீழ் கண் துடித்தால் தீமை
      • ஒருவர் நம்மை நினைத்துக்கொள்கிறார்.
      • ஏதோவொரு புதிய செய்தி வரப்போகிறது.
      • திடீர் பயணம் இடம்பெறலாம்
      • நெருங்கியவரிடம் சிக்கல் ஏற்படலாம்.
      • சீன மக்கள் கண் துடிப்பை “ஊhi” எனும் உயிர்த் சக்தியின் மாற்றமாகப் பார்க்கிறார்கள் – காலை நேரத்தில் கண் துடித்தால் நல்லது, இரவில் துடித்தால் எதிர்மறை.

இவையெல்லாம் அறிவியலால் நிரூபிக்க முடியாத நம்பிக்கைகள். ஆனாலும், இவை மக்கள் மனதில் வேரூன்றிய பழக்க வழக்கங்களாகவே தொன்றுதொட்டு இருந்து வருகின்றன.

விஞ்ஞான ரீதியாக, கண் துடிப்பது ஒரு தசை அதிர்வு (muscle spasm) ஆகும். இது ஆலழமலஅயை என்று அழைக்கப்படுகிறது. இது குறிப்பாக மேல் கண்ணிமை (upper eyelid) அல்லதுகீழ் கண்ணிமை (lower eyelid ) பகுதிகளில் ஏற்படும்.

ஆலழமலஅயை என்பது கண் அல்லது முக தசைகள் தன்னிச்சையாக துடிப்பது.இது ஒரு வகையான “benign fasciculation” (தீங்கு இன்றிய தசை அதிர்வுகள்) ஆகும். பெரும்பாலும் சில நிமிடங்கள் முதல் சில நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கிறது.

கண்ணிமை துடிப்பதற்கான காரணங்கள்

      1. மன அழுத்தம் :மன அழுத்தம் உள்ளவர்கள் தங்கள் நரம்புகளின் செயல்பாட்டில் மாற்றத்தை காணலாம். இது தசைகள் துடிப்பதற்கு வழிவகுக்கும்.
      2. தூக்கக் குறைபாடு :கண் தசைகள் தொடர்ந்து வேலை செய்யும் போது ஓய்வு இல்லாததால் சோர்வடைகின்றன. இதனால் துடிப்பு ஏற்படுகிறது.
      3. அதிகளவிலான கஃபைன் அதிக அளவில் குளம்பி (Coffee) தேநீர் (Tea), இன்வட்டு (Chacolate) போன்றவை உட்கொள்வது நரம்புத் தூண்டலை அதிகரித்து தசைகள் துடிப்பை ஏற்படுத்தும்.
      4. திரை நேரம்: கண்களை அதிகம் உபயோகப்படுத்தல் நீண்ட நேரம் கணிப்பொறி, தொலைக்காட்சி, அல்லது கைபேசித் திரையைப் பார்ப்பதால் கண்களில் அழுத்தம் ஏற்படுகிறது.
      5. ஊட்டச் சத்துக் குறைபாடுகள்:மெக்னீசியம் (Magnesium), பாஸ்பரஸ், மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகள் கண் தசைகளில் சீரற்ற செயல்பாடுகளை உருவாக்கும்.
      6. வெளிப்புறத் தூண்டல்கள்:தூசி, ஒளிக்கதிர்கள், அல்லது காற்று ஆகியவை கண்களைத் தூண்டி, தசை அதிர்வுகளை உண்டாக்கும்.
      
அபாயகரமான காரணங்கள் (மிக அரிதானவை):
கண் துடிப்பு ஒரு நரம்பியல் பிரச்சனைக்கு அறிகுறியாக இருக்கலாம்:
      • முக நரம்பு வாதம் (Bell’s palsy)- திடீரென முகத்தின் ஒருபக்கம் வலுவிழந்து இயங்காமல் போவது.
      • அரைமுக முறுக்கு நோய் (Hemifacial Spam) -முகத்தின் ஒருபக்கம் தானாகத் தசைகள் முறுக்கி அசைதல் (அசைவு கட்டுப்பாடில்லாமல் ஏற்படுவது).
      • பன்மை நரம்புக் கோளாறு (Multiple Sclerosis)– நரம்புகள் பாதிக்கப்படுவதால் உடல் முழுவதும் பல்வேறு வகையான நீடித்த பாதிப்புகள் ஏற்படுவது (மனிதனின் மைய நரம்பு மண்டலமே தாக்கப்படுகிறது)
      
இவை மிகக் குறைவாகவே ஏற்படும். பொதுவாக கண் துடிப்பது ஒரு சீரான வாழ்க்கை முறையால் குணமாகக்கூடிய சாதாரணமான நிகழ்வாகவே இருக்கிறது.

கண் துடிப்பதைப் கையாளும் வழிகள்

      • தினசரி தூக்க நேரம் 6–8 மணி நேரம் உறுதி செய்ய வேண்டும்.
      • மன அழுத்தத்தை குறைக்கும் யோகா, தியானம், சுவாச பயிற்சி போன்றவை செய்யலாம்.
      • குளம்பி மற்றும் கார்பனேட்டட் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.
      • கண்களுக்கு ஓய்வளிக்க, ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் 20 வினாடிகள் தொலைதூரத்தில் பார்வை செலுத்த வேண்டும்.
      • கண்களை குளிர்ந்த நீரில் கழுவுவலாம்.
      • பரிந்துரைக்கப்பட்ட சத்துக்கள் கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

பின்வருமாறு இருந்தால் மருத்துவரை உடன் அணுக வேண்டும்.
      • கண் துடித்தல் தொடர்ந்து 1 வாரத்துக்கும் மேலாக நீடித்தால்.
      • முகம் முழுவதும் தசை அதிர்வுகள் ஏற்பட்டால்.
      • கண் அல்லது முகத்தில் வலி, வீக்கம், பார்வை மாற்றம் போன்றவை இருந்தால்.
      • ஒரு பக்க முகம் இயங்காமலிருந்தால்

மூடநம்பிக்கைகள், நம் செயல்பாடுகளில் தடையாக மாறுகின்றன. கண் துடித்தது என்ற காரணத்திற்காக பயணங்களைத் தவிர்ப்பது, முக்கிய முடிவுகளை மாற்றுவது போன்ற செயல்கள் நம் முன்னேற்றத்திற்கு இடையூறாக இருக்கலாம். அறிவியல் விழிப்புணர்வு மற்றும் சுயநம்பிக்கையுடன் வாழ்க்கையை முன்னேற்றம் செய்யும் சிந்தனையை வளர்க்க வேண்டும்.

கண் துடிப்பது என்பது இயல்பான உடல் நிகழ்வாக இருக்கலாம். ஆனால் அதனை சுற்றியுள்ள மூட நம்பிக்கைகள் நம்மை தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் அபாயம் உள்ளது. அறிவியலையும் உணர்வையும் சமநிலையுடன் பயன்படுத்தி, எந்த ஒரு உடலியல் நிகழ்வையும் சிந்தனையுடன் அணுக வேண்டும். கண் துடிக்கிறது என்றால் பயப்பட வேண்டியதில்லை, ஆனால் அதை தவறாக புரிந்து கொள்ளும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

      ”நம்பிக்கையை அறிவால் சோதிக்கும்போது தான் உண்மையைக் கண்டறிய முடியும்.”

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *