வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகள்: இனசங்காரத்தின் உச்சம்

0
vm287

நம் தேசத்தில் நடந்த இந்தக் கோரமான படுகொலைகளுக்கு
நான் ஒரு சரித்திரத்தின் சாட்சியாக நிற்க நேர்ந்தது துயரமானது.

பேராசிரியர் மு.நித்தியானந்தன் இங்கிலாந்து.

1983 ஜூலை இனவன்முறை, இலங்கை வரலாற்றில் நடந்து முடிந்த கொடூர இனசங்காரத்தின் வெளிப்பாடாகும். வீதிகளில் ,வீடுகளில், அரசாங்க அலுவலகங்களில், கடைகளில், சந்தையில், வாகனங்களில் என்று தமிழர்கள் ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்டனர்; தீயூட்டி எரிக்கப்பட்டனர்.தமிழர் வீடுகள் தாக்கப்பட்டன் கடைகள் எரிக்கப்பட்டன்சொத்துகள் சூறையாடப்பட்டன. தமிழர்கள் தாம் ஆண்டாண்டுகாலமாக வாழ்ந்த இடங்களிலே அகதி யானார்கள்.
இவற்றிகெல்லாம் சிகரம் வைத்தாற்போல வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ் அரசியற் கைதிகள் சிறைக்குள்ளே யே கொலைசெய்யப்பட்டனர். இலங்கையின் தலைநகரில், அதி உயர் பாதுகாப்புடன் கூடிய வெலிக்கடைச் சிறைச்சாலயில் (லுழரவாகரட ழுககநனெநசள டீரடைனiபெ) இளம் பராயத்தினருக்கான சிறைக்கூடத்தில் நாங்கள் ஒன்பதுபேர் சிறைவைக்கப்பட்டிருந்தோம். வண.பிதா சிங்கராயர், வண பிதா பிலிப் சின்னராசா, அருட் திரு ஜெயதிலகராஜா, டாக்டர் ஜெயகுலராஜா, டேவிட் ஐயா, டாக்டர் தர்மலிங்கம், டாக்டர் ராஜசுந்தரம், கோவை மகேசன், நான் ஆகியோர் அங்கு சிறைவைக்கப்பட்டிருந்தோம்.

ஜூலை 25 ஆம் திகதி காலையில் உடற்பயிற்சிக்காக நாங்கள் சிறைவாசலுக்கு வெளியில் கொண்டுவரப்பட்டபோது, சிறைச்சாலையின் பெருஞ் சுவருக்குமேலால், பொரளைப் பக்கமிருந்து வானளாவக் கரும் புகை எழும்பிப் பரவுவதைப் பார்த்து, ‘அது என்ன? ‘என்று சிறைக்காவலரிடம் கேட்டபோது, ‘உங்களுக்குத் தெரியாதா? கொழும்பில் இனக்கலவரம் நடந்துகொண்டிருக்கிறது ‘ என்று அவர் பதிலளித்தார்.

‘நாங்கள் உயர் பாதுகாப்புகள் நிறைந்த சிறைக்குள் (ஆயஒiஅரஅ ளுநஉரசவைல Pசளைழn) இருக்கின்றோம். வெளியில் தமிழர்கள் தாக்கப்படுகின்றார்கள். இன்று எங்களைப் பார்க்கவரும் குடும்பத்தினர் அல்லது பார்வையாளர்கள் இன்று வெளியில் வராமல் வீட்டிலேயே இருந்துவிடவேண்டும்’ என்று நாங்கள் ஏங்கினோம்.

நீதி அமைச்சின் கீழ் இயங்கும் சிறைச்சாலையில் நாங்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கின்றோம் என்று நாங்கள்
நம்பியிருந்தோம். ‘பேயரசு செய்தால் சாத்திரங்கள் பிணம் தின்னும் தேசத்தில்’ நாமிருந்தோம்.அன்று மாலை ,சிலுவை வடிவில் அமைக்கப்பட்டிருந்த செப்பல் கட்டிடத்தில் சிறைவைக்கப்பட்டிருந்த 35 தமிழ் அரசியல் கைதிகள் கொலைசெய்யப்பட்டனர். குட்டிமணி, தங்கத்துரை உட்படக் கொல்லப்பட்ட அவர்களின் கதையைக் கூறுவதற்கு, அந்தச் சிறைக்கூடத்தில் யாருமே மிஞ்சி இருக்கவில்லை.

அதற்கடுத்த மறுநாள் நாங்கள் சிறைவைக்கப்பட்டிருந்த கூடத்தின் மேல்மாடிக்கு நாங்கள் ஒன்பது பேரும்
மாற்றப்பட்டோம். நாங்கள் இருந்த தனி அறை களுக்குள், வெளிச் சிறைகளில் வைக்கப்பட்டி ருந்த ஏனைய தமிழ்க் கைதிகள் கொண்டுவரப்பட்டு, ஓர் அறைக்கு மூவர் வீதம் விடப்பட்டனர்.

ஜூலை 27 ஆம் திகதி, அச்சம் நிறைந்த சூழலில்,சிறைச்சாலையின் பிரதி ஆணையாளர் கிறிஸ் தோபர் ஜேன்ஸ் அவர்களைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தோம். அவர் நல்ல மனிதர். அச்சிறைச்சாலை ஆணையாளராகவிருந்த ஜே.பி. தெல்கொட பொல்லாத இனவாதி. அச்சமயத்தில் அவன் வெளிநாட்டுப் பயணத்தில் இருந்தான். ஒருமுறையல்ல, இரண்டாம் தடவையும் அங்கு மீண்டும் ஒரு படுகொலை நடத்தப்படும் என்று யார்தான் நம்பியிருக்கமுடியும்?அராஜகம் கோலோச்சும் அந்தத் தேசத்தில் என்னதான் நடக்கமாட்டாது?எல்லாமே நடந்தேறியது!

அன்று பகல் எங்கள் சிறைக்கக்கூடத்தைச் சூழ பெரும் விசில் சத்தங்களும் ஆட்கள் திரளும் கூச்சலும் கேட்டபோது நாங்கள் திகைத்துப் போனோம். நான் நீண்டகாலம் விண்ணப்பித்து, எனக்கு வழங்கப்பட்டிருந்த சிறுமேசையின் மேலேறி, ஜன்னல் வழியே கீழே பார்த்தபோது,தொகைதொகையாகச் சிங்களக் கைதிகள் எங்கள் சிறைக்கூடத்தின் முன்னால் திரண்டு நிற்பதையும், வெளியில் காவலுக்கு நின்றிருந்தசிறைக் காவலாளியின் கையிலிருந்த சிறைக் கதவுகளின் சாவிக்கொத்தினை எடுத்துக்கொண்டனர். ஆனால், எந்தச் சாவி முன் இரும்புக் கதவைத் திறக்கும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இப்போது தாங்கள் கையில் வைத்திருந்த இரும்புத் துண்டங்களால் பூட்டை உடைக்க ஆரம்பித்தனர். கதவு திறந்து விட்டது. கீழ் தளத்தில் இருந்த செல்களை வெறியர்கள் உடைக்க ஆரம்பித்தனர். சிறைக்கதவின் இரும்புக் கம்பிகளுக்குள் போர்வையைப் பிணைத்து, கதவைத் திறக்கவிடாமல் போராடினார்கள். உள்ளே நுழைந்துவிட்ட பாதகர்கள், வெறுங்கைகளுடன் நின்றிருந்த தமிழ்க் கைதிகளைக் கொன்றனர். போர்வை கிழிந்து, அறுந்துபோகும் நிலையில் , கதவு திறந்துவிடாமல் மயிரிழையில் சிலர் தப்பியிருந்தனர். கீழ் தளத்தில் தங்கள் வெறியாட்டத்தை முடித்துவிட்ட கொலைகாரர்கள் இப்போது மேல்மாடியில் நாங்கள் இருந்த கூடத்தை நோக்கித் திரும்பினார்கள்.

எங்களின் சிறைக்கதவை இப்போது உடைக்க ஆரம்பித்தனர். கீழே வெற்றிகரமாக கொலைவெறியை நிகழ்த்தி முடித்த வெறியோடும் வேகத்தோடும் கதவின் மீது வெறிகொண்டு தாக்கினர். இப்போது கதவு உடைபட்டுவிட்டது.

‘எய் மல்லி அப்பிட்ட கானவா?’ என்று டாக்டர் ராஜசுந்தரம் அவர்களிடம் கேட்டார். திறந்திருந்த கதவிற்கூடாக ஒரு கொலைகாரன் அவரைப் பிடித்து வெளியில் இழுக்க, இன்னொருவன் அவரது தலையில் இரும்புக் கம்பியால் ஓங்கி அடிக்க, குழாயிலிருந்து தண்ணீர் பீறி டுவதுபோல, மண்டையிலிருந்து ரத்தம் பெருக, அக்கணத்திலேயே அவர் தரையில் சரிந்தார். நான் மேசையை உடைத்து, நான்கு கனமான கால்களைக் கையில் எடுத்து, சாம் ஜெயக்குல ராஜாவின் கையில் ஒரு தடியையும், பாதர் சின்னராஜா கையில் ஒரு தடியையும் கொடுத்து , திறந்துவிட்ட கதவுக்குள் வரவிடாமல், அந்த இரும்புக் கதவின்மீது தொடர்ந்து தாக்கினோம். ஒருவன் என்னை நோக்கி எறிந்த இரும்புக் கம்பி, என் மீது சிராய்த்துக் கொண்டு வந்தாலும், அந்தக் கம்பியைப் பற்றிக்கொண்டேன். ஜெயக்குலராஜாவிடம் அந்த இரும்புக் கம்பியைக் கொடுத்ததும், அவர் ஓங்கி இரும்புக் கதவினை அடித்தபோது, மறுபக்கமாக நின்ற கொலைக்காரர்கள் உள்ளே நுழையமுடியாமல் அஞ்சி நின்றனர். தொடர்ந்து நானும் பாதர் சின்னராஜாவும் கதவிற்குள் அவர்கள் நுழைய விடாமல் தொடர்ந்து தாக்கிக் கொண்டிருந்தோம். அரைமணி நேரம் ஒரு ஜீவமரணப் போராட்டத்தை நடத்தினோம்.

இறுதியில், இராணுவத்தினர் கண்ணீர்ப் புகை அடித்தவண்ணம் சிறைக்குள் உள்ளிட்டபோது, கொலைவெறியர்கள் வெளியில் ஓடிவிட்டனர். நாங்கள் கைகளை மேலே உயர்த்தியபடி, கீழே இறங்கி வந்தபோது, கீழ் தளத்தின் செல்களுக்கிடையிலான நடைபாதை முழுதும் இரத்தத்தால் வழிந்து நிறைந்திருந்தது. கொல்லப்பட்டவர்களின் உடல்களைக் கொ லைகாரர்கள் சிறைக்கூடத்தின் வெளியில் இழுத்துவந்து கிடத்தியிருந்தனர். உயிர்தப்பிய நாங்கள் அங்கிருந்து இராணுவட்ரக்குகளில் ஏற்றப்பட்டு, இரத்மலானை விமான நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, மட்டக்களப்புச் சிறைச் சாலைக்கு மாற்றப்பட்டோம்.

கண்டி -போகம்பர சிறைச்சாலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மறுசிரா என்ற சிறிபால கொல்லப்பட்டு, பின்னர் தூக்கிலிடப்பட்டாரா? அல்லது தூக்கிலி டப்பட்டுக் கொல்லப்பட்டாரா என்று ஆணைக்குழு அமைத்து விசாரணை மேற்கொண்ட அரசு, 53 தமிழ் அரசியற் கைதிகள் கொல்லப்பட்டபோது, சட்டையில் ஒட்டிக்கொண்ட தூசியைத் துடைத்து விட்டுச் செல்வதைப்போல கடந்து சென்றுவிட்டது. கொல்லப்பட்ட கைதிகளின் சடலங்களைக் கூட பெற்றோர், உறவினர்களிடம் கையளிக்காமல், அவர்களே எரித்துவிட்டனர்.

அரசாங்கம் முன்னின்று நடத்திய கொலைச் சம்பவம் இது. ரோஜர் ஜயசேகர என்ற ஜெய் லரின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சி இது.கொனாவெல சுனில் என்ற ரவுடியை சிறைக்குள் அனுப்பி, இந்தப் பாதகச் செயலை அரசு,இராணுவம்,பொலிஸ், நீதிமன்றம் அனைத்தும் ஒருங்கிணைந்து நடத்தி முடித்திருக்கின்றதென்றால், யாரிடம் நீதி கேட்பது? இந்தச் சிறைப் படுகொலைகளைப் பற்றி விசாரணை மேற்கொண்டு , உயிர் உயிர்தப்பியுள்ளோரைச் சந்திக்கும் முயற்சியில் , மனித உரிமை இயக்கத்தைச் சார்ந்த சூர்யா விக்ரமசிங்க சென்னை வந்து என்னைச் சந்தித்தார். ஓர் அறிக்கையையும் தயாரித்து அரசிடம் வழங்கியிருந்தார். பேராசிரியர் ராஜன் ஹ_ல் வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகளைப் பற்றிய நம்பகமான அறி க்கையினை வெளியிட்டிருக்கிறார்.

நம் தேசத்தில் நடந்த இந்தக் கோரமான படுகொலைகளுக்கு நான் ஒரு சரித்திரத்தின் சாட்சியாக நிற்க நேர்ந்தது துயரமானது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *