.இளைய ஆற்றலாளர் விருது
ஆன்மீகப் பணிகளோடு அறப்பணிகளையும் ஆற்றுகின்ற செஞ்சொற்செல்வர். கலாநிதி. ஆறு. திருமுருகன் அவர்களின் 64 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, வழமை போன்று இந்த ஆண்டும் 20.07.2025 சனிக்கிழமை இளம் ஆற்றலாளர்களுக்கு விருது வழங்கும் வைபவம் அன்னபூரணி மண்டபம் தெல்லிப்பழை துர்காதேவி தேவஸ்தானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
சாதனை படைக்கும் இளைய தலைமுறையை கௌரவித்து அவர்களை மேலும் உற்சாகப்படுத்தி,நமது சமூகத்திற்கு அவர்கள் செய்யும் ஒப்பற்ற சேவையினை மதிப்பளித்து மேலும் அவர்களை நமது சமூகத்தின்பால் இயங்க வைக்கும் நல்லதொரு முயற்சியின் ஓர் அங்கமாக,செஞ்சொற்செல்வரின் பிறந்தநாள் அறநிதிச் சபையினர் வருடந்தோறும் இரண்டு இளம் சாதனையாளர்களை விருது வழங்கி கௌரவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்த ஆண்டு சிறுநீரக சத்திரசிகிச்சை நிபுணர் பாலசிங்கம் பாலகோபி அவர்களுக்கும், கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா அவர்களுக்கும் இன்றைய தினம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சிறுநீரக சத்திரசிகிச்சை நிபுணர் பாலசிங்கம் பாலகோபி அவர்கள் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின்,சத்திரசிகிச்சை துறையின் தலைவராகவும் சிரேஸ்ர விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகிறார்.
கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா அவர்கள் புவியியல் துறையின் தலைவராக மட்டுமன்றி,சான்றுப்படுத்தப்பட்ட வானிலை ஆய்வாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இவ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் சிவன்சுதன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன்,ஏராளமான விருந்தினர்கள், பொதுமக்கள், மகளிர் இல்ல மாணவிகள், சமயப் பெரியவர்கள், சிவாச்சாரியார்கள்,கலந்து சிறப்பித்து தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவர் செஞ்சொற்செல்வர் அவர்களையும் விருது பெற்ற இரண்டு இளம் ஆற்றலாளர்களையும் மனதார வாழ்த்தினார்கள்.சிறுநீரக சத்திரசிகிச்சை நிபுணர் பாலசிங்கம் பாலகோபி அவர்களுக்கும்,யாழ் பல்கலைக்கழக புவியியல் துறையின் தலைவர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா அவர்களுக்கும்,எமது நல் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
![]()
