பரத நாட்டியத்தில் இருந்து மோகினி ஆட்டம் எவ்வேறுபாடுகளைக் கொண்டுள்ளதுயாழ்ப்பாணத்தில் நடந்தேறிய இருநாள் பயிற்சிப்பட்டறைகள்!
- நிறைஞ்சனா சுரேஷ்குமார் இங்கிலாந்து
மோகினி ஆட்டம் உலகளாவிய ரீதியில் மிகப்பிரபல்யமாக கலைஞர்களால் நேரடியாக பார்க்கப்படுவதோ கற்கப்படுவதோ இல்லை. ஆனால் சமூக வலைத்தளங்கள் மூலம் அறியப்பட்டு வருகின்றது. அந்த வகையில் உலக இலங்கை பரத நாட்டியக் கலைஞர்கள் சங்கத்தின் ஸ்தாபகரும் அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி இயக்குனருமாகிய “கலாசூரி” திவ்யா சுஜேன் அவர்கள் லண்டனில் இயங்கி வரும் ருpயாயயச ளுஉhழழட ழக னுயnஉந இயக்குனரும் குருவுமாகிய ஸ்ரீPமதி.சாலினி சிவசங்கர் அவர்களை அணுகி மோகினி ஆட்ட நடனக்கலையின் அடிப்படைத் தத்துவங்களை இலங்கைக் கலைஞர்களுக்கு தெரியப்படுத்துமுகமாக நிகழ்வுகளை ஒழுங்கிபடுத்தி வழங்கியிருந்தார். சாலினி சிவசங்கர் அவர்களின் மோகினி ஆட்டம் மாணவியாகிய திருமதி.நிறைஞ்சனா சுரேஷ்குமார் அவர்களின் நீண்ட நாள் கனவாக அமைந்த அவர் தனது இல்லத்தில் ஓர் கலைக்கூடத்தை உருவாக்க வேண்டும் என்பது. தனது குருவின் ஆசிகளுடன் அவர்களின் கைகளினால் “பாரதி அன்பகம்” தெல்லிப்பழை, யாழ்ப்பாணத்தில் 10ஃ08ஃ2025 அன்று கலைக்கூடம் ஆரம்பிக்கப்பட்டது. அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் பரத நாட்டியத்தினை கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மோகினி ஆட்டத்தின் அடவுகளின் அசைவுகளின் நுணுக்கங்களையும் கண் அசைவுகளையும் அபிநயங்களின் நுணுக்கங்களையும் முத்திரைகளும் மறைந்த குரு கலாமண்டலம் கல்யாணிக்குட்டி அம்மாவின் பாணியில் அமைந்த மோகினி ஆட்ட நுணுக்கங்களையும் பரத நாட்டியத்தில் இருந்து மோகினி ஆட்டம் எவ்வாறு வேறுபாடுகளை கொண்டுள்ளது என்பதையும் பயிற்சிப்பட்டறையில் குரு சாலினி சிவசங்கர் அவர்களால் மிக அழகாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து 11ஃ08ஃ2025 அன்று யாழ் பல்கலைக்கழக சேர் பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய அரங்காற்று கலைகள் பீடம் நடனத்துறையில் திருமதி.மைதிலி அருளைய்யா தலைமையில் நடனத்துறையில் தற்பொழுது விரிவுரையாளர்களாக பணியாற்றும் ஆசிரியர்கள், நாட்டியம் கற்றுக்கொண்டிருக்கும் நாட்டியத்துறை மாணவர்கள், பழைய மாணவர்கள் நிறைந்த மண்டபத்தில் ஸ்ரீமதி.சாலினி சிவசங்கர் அவர்கள் முதலில் மோகினி ஆட்டம் பற்றிய விளக்கங்களைக் கூறினார். தொடர்ந்து மோகினி ஆட்டத்தின் அடவுகளை மாணவி திருமதி நிறைஞ்சனா சுரேஷ்குமார் அவர்களுடன் இணைந்து அற்புதமாக அறிமுகப்படுத்தப்பட்டு அதனை தொடர்ந்து ஆற்றுகைகளாக கணபதி ஸ்துதி மற்றும் ராம சப்தம் இரண்டையும் சிறந்த முறையில் அபிநயங்களுடனும் வழங்கி தொடர்ந்து மோகினி ஆட்டத்தில் நவரஸங்களை உள்ளடக்கிய ஸ்ரீசங்கராச்சாரியாரது ஸ்லோகம் சாலினி சிவசங்கர் ஆற்றுகை செய்தார். மிகவும் அழகாகவும் தெய்வீகபூர்வமாக அமைந்தது. இறுதியில் ஸ்ரீமதி.சாலினி சிவசங்கரும் மாணவி திருமதி.நிறைஞ்சனா சுரேஷ்குமார் அவர்களும் இணைந்து ஆபோகி இராகத்த்தில் அமைந்த தில்லானா உருப்படி மோகினி ஆட்டத்தில் ஆற்றுகை வழங்கி நிகழ்ச்சியினை மிகவும் அழகாகவும் சிறப்பாகவும் வழங்கினர்.
இடையில் ஸ்ரீPமதி. சாலினி சிவசங்கர் அவர்களின் மகளும் மாணவியுமான செல்வி. அமியா குமார் முருகன் மேல் பாடப்பட்ட காபி இராகத்தில் அமைந்த பதத்தினை அழகான பாவத்துடன் நிகழ்த்தினார். யாழ் பல்கலைக்கழக சேர் பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய அரங்காற்று கலைகள் பீடம் நடனத்துறை நிர்வாகத்தினர் எதிர் வரும் காலங்களில் ருpயாயயச ளுஉhழழட ழக னுயnஉந குரு சாலினி சிவசங்கர் அவர்களையும் மாணவர்களையும் அழைத்து மோகினி ஆட்டத்தின் உருப்படி ஆற்றுகை ஒன்றினை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து 17ஃ08ஃ2025 அன்று கொழும்பு மாநகரில் அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி இயக்குனர் “கலாசூரி” திவ்யா சுஜன் அவர்களின் ஒருங்கிணைப்பில் ஊரடவரசயட ர்யசஅழலெ ஊயஅp இல் இணைந்து மோகினி ஆட்டம், பரத நாட்டியம் ஆற்றுகை வழங்கினார் ருpயாயயச ளுஉhழழட ழக னுயnஉந குரு சாலினி சிவசங்கர், மாணவி நிறைஞ்சனா சுரேஷ்குமார், அமியா குமார். அன்றைய தினம் பரத நாட்டியம், மோகினி ஆட்டம், கூத்து, கண்டிய நடனம், ஒடிசி நடனம் ஆகியவற்றினை கண்டுகளிக்க முடிந்தது. திவ்யா சுஜேன் அவர்களுக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்து மகிழ்ந்தனர். தொடர்பு :- திவ்யா சுஜேன் ூ94 77 571 1273இ யடிடையலய;லயாழழ.உழஅ சாலினி சிவசங்கர் – ூ44 7811 823684 ரியாயயசளஉhழழட;பஅயடை.உழஅஇ hவவிள:ஃஃறறற.ரியாயயச.உழ.ரம
![]()
