கை தட்டினால், இரத்தம் பாயும் தெரியுமா?

0
vm321

  • மங்கை அரசி யேர்மனி

உள்ளங்கைகளில், இரத்த நாடி, நாளங்கள், நரம்பு நுனிகள் என்பன அமைந்துள்ளன. 30க்கு மேற்பட்ட வர்ம புள்ளிகள் உள்ளன. அவற்றை தூண்டுவதன் மூலம் நமது முழு உடலையும் புத்துணர்வுடன் வைத்திருப்பதற்கான இரத்த ஓட்டத்தை விரிவுபடுத்திக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல், மன ஓட்டம் சீராக அமையவும், பதற்றம் அழிந்து போகவும், நேர்மறை சிந்தனைகள் புதிதாக ஏற்படவும், மனச்சோர்வு இல்லாமல் போவதற்கும், இரத்த அழுத்த சிக்கல் இல்லாமல், இதய நோய், சுவாசக் கோளாறு போன்ற நோய்கள் வராமல், நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிப்பதற்கும் மற்றும் நோய் தொற்றிலிருந்து தப்புவதற்கும், அறிவு ஆற்றலை கூட்டுவதற்கும், கவனச் சிதறல்கள் மற்றும் கட்டுப்பாடு இல்லாத பழக்கவழக்கங்கள் மற்றும் முதுகு வலி என்பவற்றை அகற்றுவதற்கும், உற்சாகமாக செயற்படவும், கல்வியில் முன்னேறுவதற்கும், எலும்புகளை சீராக்கி உறுதியாக்கி மற்றும் உரோமக்கலன்களை புத்துணர்ச்சி செய்ய வைத்து உடலில் புதிய உரோமங்களை உருவாக்குவதற்கும், முடி உதிர்வதை போக்குவதற்கும் இந்த உள்ளங்கை மிக மிக ஒரு முக்கியமான செயற்பாட்டை செய்து கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்களா?

ஆம், எம் இரண்டு கைகளையும் மேலே தூக்கி வானத்தைப் பார்க்கும் வகையில், உள்ளங்கையை மேல் நோக்கி மடித்து வைத்து பார்த்தீர்கள் என்றால், எமது உடலின் நான்கு பகுதிகள் வெளியே நீட்டிக்கொண்டு இருப்பது தெரியும். அதாவது இரண்டு உள்ளங்கைகளும், இரண்டு உள்ளங்கால்களுமே ஆகும். இதில் உள்ளங்கையில் அழுத்தங்கள் கொடுப்பதன் மூலமாக, நமது உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும், ஒவ்வொரு பகுதிகளையும் எம்மால் சீராக்கிக் கொள்ள முடியும் என்பதும், உள்ளங் காலில் அழுத்தங்கள் கொடுப்பதனால், பயிற்சிகள் கொடுப்பதனால், நமது உடலின் ஒவ்வொரு பகுதிகளையும் சீராக்கிக் கொள்ளலாம், என்பதும் அறிவியல் உண்மை.

உள்ளங்காலை பற்றி தெரிந்துகொள்ள விரும்பினீர்கள் என்றால், அறியத்தாருங்கள், அடுத்த கட்டுரையில் பார்ப்போம். உள்ளங்கையில் எவ்வாறு அழுத்தங்கள் கொடுக்க முடியும் என்றால், தினமும் சில நிமிடங்கள் கைகளை தட்டுவதன் மூலமாக, கைகளை ஒன்றோடு ஒன்று உரசுவதன் மூலமாக, கைகளில் ஒவ்வொரு பகுதிகளையும் அழுத்துவதன் மூலமாக, நமது சிந்தனையை முழுமையாக உள்ளங்கையில், விரல்களில் ஒவ்வொரு பகுதிகளிலும் செலுத்தி, ஒவ்வொரு பகுதிகளையும் நன்றாக மசாஜ் செய்து விடுவதன் மூலமாக, ஆரம்பப்பந்தியில் குறிப்பிட்ட எல்லா நன்மைகளையும் பெறலாம். உள்ளங்கையில் உள்ள இரத்த நாளங்களை, நாடிகளை உற்சாகப்படுத்துவதன் மூலமாக, உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, பலனடைந்து கொள்ளுங்கள். ஒரு வாரம் பயிற்சி செய்து பார்த்து, உங்கள் பலனை எங்களுக்கு அறிய தாருங்கள். தெரிந்து கொள்வதற்கு ஆவலாக காத்துள்ளோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *