முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ!இல்லா ஒருவனை, ஒருத்தியை வேண்டியேங்கும் உசுரோ!!!
பின்னணியை மாற்றி பிறர் தலையெழுத்தையும் அலறவைக்கும்! ஒரு அப்ஸ்!!!
-மாதவி. யேர்மனி
கனவு அது கெட்ட கனவோ நல்ல கனவோ! அதனை காலையில் மறந்துவிடுவோம். ஆனால் இப்பபோ அதனை மின் திரையில் காணலாம்.
உங்கள் வாழ்நாளில் இழந்தவற்றின்மீதே காதல் அதிகம். உங்கள் காதலி அல்லது காதலன் உங்களை விட்டு வேறு ஒரு வரை மணந்தால், கணமும் புழுங்கிச் சாவீர்கள்.இன்று காதல் சாதாரணம் என்று வைத்துக் கொண்டாலும், கனவில் அவளை கட்டி அணைப்பதுபோலவோ இல்லை கடற்கரையில் சந்திப்பதுபோலவோ கனவு வரலாம். கனவு காண்பதற்கு பழையபடங்கள் பார்த்தாலே போதும். வகை வகையாக கனவுகாணலாம். எதுவரை போகுமோ அதுவரை கனவுலகம் போகலாம்.
அழகான மனைவி, அல்லது அன்பான கணவன் இருந்தாலும், அடுத்தவன் பெண்டாட்டியை, அடுத்தவள்; புருஷனை மேயத்துடிப்பவர்கள் தான் இன்று எத்தனை பேர். இதற்கு தொலைக்காட்சி நாடகங்கள் இதுவரை வழிசமைத்தன. இல்லா ஒருவனை, ஒருத்தியை வேண்டியெங்கும் உசுரோ!!! இப்படியானவர்களை இலக்கு வைத்து ஒரு அப்ஸ் இப்ப உலாவருகிறது.
பக்கம் பக்கம் நின்று ஒரு படம் எடுத்தால் போதும். ஏன் ஒரு படம் இருந்தாலே போதும். நீங்கள் விரும்பியபடி அவர்களை அணைக்கலாம் முத்தமிடலாம். ஆடைகூட மாற்றலாம்.
ஒருவரது படத்திற்கு தவம் இருந்த காலம் மலையேறிவிட்டது. அப்போது எல்லாம் காதலிக்கும் போது ஒரு படத்திற்கு அலையோ அலை என்று அலைந்து பெறவேண்டும்.
பெற்ற படத்தை பாதுகாப்பாக மற்றவர்கள் கண்ணில் படாமல் வைத்திருக்க படும் பாடு அப்பப்பா. இப்ப சொல்லத்தேவையில்லை. சுண்டுவிரலால் சுண்டிவிட சட்டென்று படம் வரும்.
யாரோடு யாரோடு படம் எடுக்க மனம் விரும்பியதோ! அவர்களுடன் இணைந்து படம் எடுக்க இடம் கொடுக்கும் ஒரு அப்ஸ் அது. உங்கள் பின்னணியை மாற்றும், பலகுடும்ப உறவுகளின் தலையெழுத்தையே மாற்றிவிடும் அப்ஸ் அது. எதனையும் முறையாக கவனமாக தேவைக்கும் மட்டும்,பாவித்தால் பயன்தான். கஞ்சாவைக்கூட மருந்தாக பாவித்தால் பயன்தான்.
ஒரு தந்தை இப்படியா மகளுக்கு முத்தம் கொடுப்பது, கொஞ்சுவது என்று கொஞ்ச மாதத்திற்கு முன்பு கமலகாசன் தன் மகள் சுருதிகாஷனை முத்தமிடுவது போல் ஒரு படம் உலாவந்தது. ஐயோ கமல் திரைப்படங்களில் முத்த மன்னன், மகளையும் விடவில்லை என பலரும் புலம்பினர். அது ஏ. ஐ. விளையாட்டு என்பதை பின் உணர்ந்தனர்.
இப்போ இருப்பது இந்த செயற்கை தொழில் நுட்பம் மனித அறிவுக்கும் குறைவானது. எனவே அது 2ூ2ஸ்ரீ என்றால் 4. சரி என்போம் 3 என்றால் பிழை என்போம். இதே ஏ. ஜ. எம்மை விட சுப்பர் பவர் நுட்பமாக வரும்போது நீங்கள் அது சொல்வது சரியா, பிழையா என அறியும் ஆற்றலை அது உங்களிடம் முடக்கிவிடும். எனவே அது சொன்னால் சரி அவனுக்கு எம்மைவிட அதிகம் தெரியும் என ஒத்துக்கொண்டு யாரோ ஒருவர் சொல்ல நாம் அதன்படி நடக்கும் காலம் வரும்.
நாம் விரும்பியதை எல்லாம் இப்ப செய்யும், நாளை அது விரும்பியதுபோல் நம்மை வச்சு செய்யும். ஒவ்வொரு தனிமனிதனின் மனங்களை எல்லாம் கணக்கு வைத்து, பதிவு செய்யும்.
தனிப்பட்ட மனிதரின் குண நலன்கள், என பலவற்றை அறிந்து ஒருவரது அந்தரங்கங்களை பதிவிட்டு தேவை ஏற்படும்போது, தேவைப்படுபவர்களுக்கு கொடுத்தும் உதவும். அல்லது தானே பயன்படுத்தும்.
வீட்டில் என்னை என்விருப்பபடி வாழவிடவில்லை என்று சண்டை போடுபவர்களையும், அவர்களையும் இனி யாரோ ஒருவரே தன்னை இயக்குகின்றார் என்ற உண்மை தெரியும் போது பெரும் அதிர்ச்சியே மிஞ்சும்.
யுஐ-யால் உருவாக்கப்பட்ட படங்கள் தனிநபர்களின் வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். அவற்றில் சில:
ஒரு நபரைப் பற்றி தவறான தகவலைப் பரப்ப அல்லது அவர்களுக்கு அவதூறு செய்ய யுஐ படங்களைப் பயன்படுத்தலாம். ஒரு நபர் செய்யாத ஒன்றைச் செய்வது போன்ற படத்தை உருவாக்கலாம்.
தனியுரிமை மீறல்: ஒருவரின் அனுமதியின்றி, அவர்களின் உருவத்தைப் பயன்படுத்தி யுஐ படங்களை உருவாக்கலாம். இது அவர்களின் தனியுரிமையை மீறுவதாகும்.
மன உளைச்சல்: ஒருவரின் படங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும்போது, அது அவர்களுக்கு மன உளைச்சல், பதட்டம் மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தலாம்.
அவமானம்: தவறான படங்களால் ஒருவரின் சமூக மதிப்பு பாதிக்கப்படலாம்.
சைபர் மிரட்டல்: யுஐ படங்களைப் பயன்படுத்தி ஒருவரை மிரட்டவோ அல்லது கேலி செய்யவோ பயன்படுத்தலாம்.
நம்பகத்தன்மை இழப்பு: யுஐ படங்களின் அதிகரித்த பயன்பாடு, உண்மையான படங்களுக்கும் போலி படங்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டறிவது கடினமாக்கும். இது தகவல்களின் நம்பகத்தன்மையை குறைக்கும்.
இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க, யுஐ படங்களை உருவாக்கும் மற்றும் பயன்படுத்தும் போது பொறுப்புணர்வுடனும், நெறிமுறையுடனும் செயல்படுவது மிகவும் முக்கியம். ஒரு பொருளை முறையாகவும், அளவாகவும் பயன்படுத்தினால் நன்மை பயக்கும்.
யுஐ ஒரு சக்திவாய்ந்த கருவி, அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து அது நன்மையையும் தீமையையும் தரக்கூடியது. குடும்ப உறவுகளைப் பிரிப்பது போன்ற எதிர்மறை விளைவுகளும் ஏற்படலாம், அதே நேரத்தில் பல நன்மைகளையும் வழங்குகிறது. எனவே, எந்த ஒரு பொருளையும் அல்லது செயலையும் அதன் விளைவுகளைப் பற்றி நன்கு ஆராய்ந்து முறையாகப் பயன்படுத்தினால் மட்டுமே அது நன்மை பயக்கும் என்பதை உணருங்கள். போகிற போக்கில் பார்த்தால் பல குற்றச்செயல்கள் அவை குற்றம் இல்லை என்று குற்றப்பட்டியலில் இருந்து நீக்கப்படுவதுபோல், நாம் குற்றம் என இன்று நினைப்பவை நாளை நீக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை.
(மாதவி.விமானத்தில் இருந்து. 12.10.2025)
![]()
