ஜெர்மனி ஹாமெலின் நகரத்தின் குழல் வாசிப்பவன்The Pied Piper of Hamelin

0
371

ஒரு காலத்தில் ஜெர்மனி நாட்டில் ஹாமெலின் என்ற அழகான நகரம் இருந்தது. xU fhyj;jpy; n[u;kdp ehl;by; `hnkypd; vd;w mofhd efuk; ,Ue;jJ. Hamelin (Hameln –Niedersachsen  – Germany . Region: Northern ermany  River: Located on the Weser Riverme அந்த நகரத்தில் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் ஒரு பெரிய பிரச்சனை இருந்தது. அந்த நகரம் முழுவதும் எலிகள் நிறைந்து விட்டன. வீடுகளிலும், தெருக்களிலும், உணவுக் கிடங்குகளிலும் எலிகள் தொந்தரவு செய்தன. மக்கள் எவ்வளவோ முயற்சி செய்தார்கள்; ஆனால் எலிகளை விரட்ட முடியவில்லை.

ஒரு நாள், நகரத்திற்கு ஒரு விசித்திரமான மனிதன் வந்தான். அவன் பல நிறங்களால் அலங்கரிக்கப்பட்ட உடை அணிந்திருந்தான். கையில் ஒரு புல்லாங்குழல் வைத்திருந்தான்.அவன் நகரத் தலைவர்களிடம் சென்று,“நான் என் குழல் இசையால் எல்லா எலிகளையும் நகரத்திலிருந்து விரட்டிவிடுவேன். அதற்குப் பதிலாக நீங்கள் எனக்கு பரிசு கொடுக்க வேண்டும்,” என்று சொன்னான்.

நகர மக்கள் மகிழ்ச்சியடைந்து,“நீ எலிகளை நகரத்திலிருந்து விரட்டினால், உனக்கு பெரிய பரிசு தருகிறோம்,” என்று வாக்குறுதி அளித்தார்கள்.அந்த மனிதன் தனது புல்லாங்குழலை வாசிக்க ஆரம்பித்தான்.
அழகான இசை நகரமெங்கும் ஒலித்தது. அந்த இசையை கேட்டதும், எல்லா எலிகளும் அவனைத் தொடர்ந்து வந்தன. அவன் எலிகளை நகரத்துக்கு வெளியே உள்ள ஒரு நதிக்குள் அழைத்துச் சென்றான்.எல்லா எலிகளும் நதியில் விழுந்து மறைந்தன.நகரம் எலிகளிலிருந்து விடுபட்டது. மக்கள் மிகவும் மகிழ்ந்தார்கள்.ஆனால், அந்த குழல் வாசிப்பவன் தனது பரிசைக் கேட்க வந்தபோது, நகரத் தலைவர்கள் பேராசையுடன் பேசினார்கள்.“எலிகள் தானாகவே ஓடிப் போயிருக்கும். உனக்கு பரிசு தர முடியாது,” என்று சொல்லி அவனை விரட்டிவிட்டார்கள்.அந்த மனிதன் மிகவும் கோபமடைந்தான். ஆனால் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.

சில நாட்கள் கழித்து, ஒரு நாள், அவன் மீண்டும் நகரத்துக்கு வந்தான். இப்போது அவன் வேறொரு இனிய இசையை வாசித்தான்.இந்த இசையை கேட்டதும், நகரத்தின் குழந்தைகள் அவனைத் தொடர்ந்து வந்தார்கள்.அவன் குழந்தைகளை நகரத்திற்கு வெளியே உள்ள ஒரு மலையின் அருகே அழைத்துச் சென்றான். அந்த மலை திறந்து, அவனும் குழந்தைகளும் அதற்குள் மறைந்தார்கள். குழந்தைகள் திரும்பவே வரவில்லை.அப்போது தான் நகர மக்கள் தங்கள் தவறை உணர்ந்தார்கள். வாக்குறுதியை காப்பாற்றாததன் விளைவாக, அவர்கள் பெரிய தண்டனை அனுபவித்தார்கள்.கதையின் போதனை:வாக்குறுதியை எப்போதும் காப்பாற்ற வேண்டும்.பேராசையும் பொய்யும் தீய விளைவுகளை தரும். (7ம் பக்கதில் வரும் எதிர்ப்பரசியல் கட்டுரையில் வரும் ‘வுhந Pநைன Pipநச ழக ர்யஅநடin’ மேற்கோள் கதை இதுதான்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *