சிவபெருமானை வணங்கும் சூரியபகவான்..!

0
vm388

சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக கருவறையில் உள்ள இறைவன் மீது படர்ந்தெழும்..”

கட்டுரை-படங்கள் மதுரை ஆர்.கணேசன்

மதுரை – இராமேஸ்வரம் செல்லும் பிரதான சாலையில் “..அருள்மிகு ஸ்ரீம ரகதவல்லி சமேத முக்தீஸ்வரர் திருக்கோயில்..” அமைந்துள்ளது.

சிவபெருமான் நிகழ்தியருளிய அறுபத்து நான்கு திருவிளையாடல் புராண த்தில் “..ஐராதவதம் சாபம் தீர்த்த படலம் மற்றும் இந்திரன் சாபம் தீர்ந்த ப டலம்..” ஆகிய நிகழ்வினால் உருவான திருக்கோயில் என்பது குறிப்பிடத்த க்கது..!
இந்நகரில் உள்ள பஞ்சபூதத் திருத்தலங்களில் இக்கோயில் “..வாயுத்தல மாகும் அத்துடன் அரிய சக்தி வாய்ந்த தலவிருட்சமாக இரண்டு வில்வ மரங்கள்..” அமைந்துள்ளன.
இறைவனை நோக்கி நாலு கால் மண்டபத்தில் அமர்ந்திருக்கும் நந்தி பக வான் நம்மனதை பெரிதும் கொள்ளை கொள்கிறார்..!

ஒவ்வொரு வியாழக்கிழமை மற்றும் பிரதோஷ நாட்களில் நந்திபெருமா னுக்கு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறுவது மிகவும் சிறப்பாகும்..!

நந்திபகவான் எதிராக கருவறையில் மூலவர் “..முக்தீஸ்வரர்..” வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
சுவாமி சன்னதிக்கு செல்லும் முன்னரே வலது பக்கம் “..மரகதவல்லி அ ம்மன்..” தனிசன்னதியில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.

பாரத நாட்டில் எண்ணிலடங்கா திருக்கோயில்களில் சில கோயில்களில் மட்டுமே “..சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக கருவறையில் உள்ள இறைவன் மீது படர்ந்தெழும்..” வகையில் கட்டப்பட்டிருந்தாலும் ஆண்டிற்கு ஓரிரு அல்லது நாலைந்து நாட்கள் மட்டும் அந்தந்த திருக்கோயில்களில் அக்காட்சியை காணமுடியும்..!

இக்கோயிலில் “..சூரிய ஒளிக்கதிர்கள் இறைவனின் திருமேனியில் மாலையாக சூடி வழிபடுவது போல நடக்கும் பேரதிசயம் ஆண்டிற்கு 24 நாட்கள் நடைபெறுகிறது..” என்பது ஆன்மிகத்தின் பரவச நிலையாகும்..!
ஒவ்வொரு வருடமும் உத்தராயணத்தில் 12 நாட்கள் அதாவது மார்ச் மாத ம் 10ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை காலை 6.35 மணி முதல் 6.45 மணி வரையிலிலும் மீண்டும் 7.00 மணி முதல் 7.10 மணி வரையிலிலும் காணமுடியும்..!

தட்சிணயாணத்தில் 12 நாட்கள் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி முதல் 30ஆ ம் தேதி வரை காலை 6.15 மணி முதல் 6.25 மணி வரை அடுத்து 6.40 மணி முதல் 6.50 மணி வரையிலிலும் காணமுடியும்..!
இக்காலங்களில் “..முதல் பத்து நிமிடம் செங்கதிராகவும், அடுத்த பத்து நி மிடம் கண்ணைக்கூசும் வெண்கதிராகவும் படரும்..” இதற்கான வழிவகை கோயில் கருவறை முன்புள்ள மகாமண்டபத்தின் உள்ளே மூன்று துவார ங்கள் ஆதிகாலத்திலே அமைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..!

ஒளியாகவும் நானே என்று உணர்த்துவதுப் போல காட்சித் தருகின்ற அந்தத் தருணத்தில் சன்னதியில் குழுமியிருக்கும் “..பக்தர்களின் ஒருமித்த குரலில் நமச்சிவாயம் கோஷம்..” எழுப்படுகிறது..!
முக்தீஸ்வரனை மனமுருகி வேண்டுபவர்களுக்கு “..நவக்கிரக தோஷம் விலகும், திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐ தீகம்..!
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் மாதத் திருவிழாக்களில் தைமாதம் நடைபெறும் பனிரெண்டு நாட்கள் திருவிழாவின் இறுதியில் “..தைப்பூசம் நாளன்று தெப்பத்திருவிழாவிற்காக மீனாட்சியும் சுந்த ரேஸ்வரரும்..” இக்கோயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.

ஸ்ரீமரகதவல்லி சமேத முக்தீஸ்வரரை அவனருளாலே அவன் தாள் வணங்குவோம் இறையருள் பெறுவோமாக..!!!
இக்கோயிலில் தினமும் மூன்று கால பூஜை நடைபெறுகிறது, காலை 6. 00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் 9.00 ம ணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.

எங்கு உள்ளது..?
பெரியார் பேருந்து நிலையம் – (4 ஆம் நம்பர் வழித்தட பேருந்து) அனுப்பானடி செல்லும் வழியில் மற்றும் மாரியம்மன் தெப்பக்குளம் எதிரே இவ்வாலயம் அமைந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *