நற்பண்புகள் எப்பொழுதெல்லாம் சமூகத்தில் அருகி வருகின்றதோஅப்பொழுதெல்லாம் அதர்மம் தலைவிரித்தாடுகின்றது.

0
vm432

  • கலாநிதி.ஆறு.திருமுருகன்;.

போதைப் பழக்கமும் தவறான சேர்க்;கையும் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்,என்பதை எங்கள் சமூகத்தில் நாள்தோறும் நடைபெறும் நிகழ்வுகள் எமக்கு தெளிவாக செய்தி சொல்கின்றது.

மகிழ்ச்சியை தருகின்றது

மிகத் தாரளமாக எங்கள் சமூகத்தில் தினமும் அரங்கேறுகின்ற இழிவான சம்பவங்களை அறிந்து கொண்ட பெற்றோர்கள் பலர், தங்கள் பிள்ளைகளை அறநெறிப் பாடசாலையில் இணைத்துக் கொள்வதற்காக ஆர்வம் காட்டுவது எமக்கு மிகுந்த மகிழ்சியை தருகின்றது.

பல பெற்றோர்கள் எங்கள் தேவஸ்தானத்துடன் தொடர்பு கொண்டு தங்கள் பிள்ளைகளை எங்கள் தேவஸ்தானத்தில் இயங்குகின்ற, அறநெறிப் பாடசாலையில் மாணவராக இணைத்துக் கொள்வதற்குரிய தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளமை எமக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது. சகல பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை தங்கள் ஊரில் அல்லது அயல் ஊர்களில் உள்ள அறநெறிப் பாடலையில் இணைத்துக் கொள்ளுமாறு நான் அன்பாக வேண்டி நிற்கின்றோம்.

எங்கள் தேவஸ்தானத்தில் தற்போது இயங்கி வருகின்ற அறநெறிப் பாடசாலையினை மேலும் விஸ்தரித்து நமது சமூகத்தின் நன்மைக்காக சிறப்பாக இயக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக,எங்கள் தேவஸ்தானம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

அதன் ஓர் அங்கமாக சகல வசதிகளும் கொண்ட புதிய கட்டிடத்தில் எங்கள் அறநெறிப் பாடசாலையினை இயக்குவதற்காக நாங்கள் பல்வேறு பணிகளை ஆற்றி வருகின்றோம். இன்னும் ஒரு சில வாரங்களில் இந்தப் பணிகள் யாவும் நிறைவு பெற்று புதுப் பொலிவுடன் எங்கள் அறநெறிப் பாடசாலை இயங்க ஆரம்பிக்கும்.

தர்ம சிந்தனைக்கு எங்கள் சமுதாயத்தில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இது ஆரோக்கியமானதல்ல. எங்கள் இளைய தலைமுறையினரை நல்ல முறையில் ஆற்றுப்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டிய எங்கள் கடமையை நாங்கள் உணர்ந்தவர்களாக பணியாற்ற முன்வருமாறு சகல பெற்றோர்களையும் அன்பாக வேண்டி நிற்கின்றேன்.அன்பான பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் நல்ல எதிர்காலத்திற்காக தெய்வ நம்பிக்கை நிறைந்த நல்ல பிள்ளைகளாக வளர்த்தெடுக்க பாடுபடுங்கள்.

உங்கள் பிள்ளைகளின் நல்ல எதிர்காலத்திற்காக எங்கள் தேவஸ்தானம் தேவையான சகல உதவிகளையும் வழங்கும் என நான் உறுதியாக கூறுகின்றேன்.அன்பு, அறம், கருணை, உண்மை பேசுதல், செய்ந்நன்றி மறவாமை, கீழ்படிதல், பணிவு, பொய் உரைக்காமை,போன்ற நற்பண்புகள் எப்பொழுதெல்லாம் சமூகத்தில் அருகி வருகின்றதோ எப்பொழுதெல்லாம் அதர்மம் தலைவிரித்தாடுகின்றது.

தனிமனித வாழ்வில் அறத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த நமது சமயமும் முன்னோர்களும் ஆலய வழிபாட்டினையும் ஆன்மீகத்தையும் காலங்காலமாக வலியுறுத்தி வந்துள்ளார்கள்.எங்கள் தேவஸ்தானம் அறச் சிந்தனை உடைய மனிதர்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு,அறநெறிப் பாடசாலையினை ஆரம்பித்து தகுதி வாய்ந்த மூன்று ஆசிரியர்களை நியமித்து கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

எங்கள் அறநெறிப் பாடசாலையில் கல்வி கற்ற ஏராளமான பிள்ளைகள் இன்றும் நல்ல சமயப் பற்றோடும் அறத்தோடும் வாழ்ந்து வருவது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அறநெறிக் கல்வியின் அவசியத்தை உணர்ந்தவர்களாக எங்கள் இளைய தலைமுறையினரை நல்வழிப்படுத்தி வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு எங்கள் எல்லோர்க்கும் உண்டு.

நீர் தமிழோடு இசை கேட்கும்
இச்சையால் காசு நித்தம் நல்கினீர்

என்பது சிவபெருமான் தமிழ்ப் பாடல்களின் இசையில் மிகுந்த விருப்பம் கொண்டவர் என்பதை உணர்த்துகின்றது. தமிழை நித்தம் நித்தம் கேட்க வேண்டும் என்பதற்காக சிவபெருமான் சம்பந்தர் பெருமானும் அப்பர் பெருமானும் நித்தமும் படிக்காசு வழங்கினார். சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, வீழிமிழலை என்னும் தலத்தில் தமிழ் இசையுடன் பாடியதற்காக சிவபெருமான் தினமும் நித்தியப் படியாகக் காசு வழங்கியதை நாங்கள் எல்லோரும் நன்கறிவோம்.

இப்படிப்பட்ட இறைவனே விரும்பிய அழகு மொழியான எங்கள் தமிழ் மொழியில் அறத்தையும் ஆன்மீகத்தையும் போதிக்கும் எங்கள் தேவஸ்தானத்தின் அறநெறிப் பாடசாலையில் உங்கள் பிள்ளைகளையும் இணைத்துக் கொண்டு,

ஆவர்களின் நல்வாழ்விற்காக பெற்றோர்கள் பாடுபட வேண்டும் என அன்பாக வேண்டி நிற்கின்றேன்.இறை மொழியாம் எங்கள் தமிழ் மொழியில் அறத்தை வளர்க்க பாடுபடுமாறு பெற்றோர்கள் அனைவரையும் நான் அன்பாக வேண்டி நிற்கின்றேன்.அறநறெக் கல்வி என்பது மனித சமுதாயத்தை சீர்கேட்டிலிருந்து காக்கும் உன்னத மருந்து ஆகும் என்பதை என்றும் மறவாமல் நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்காக பாடுபடுவோம். எல்லாம் வல்ல ஈஸ்வரி எங்கள் துர்க்கை அம்பாளே என்றும் நமக்கு துணை…

நன்றி
கலாநிதி.ஆறு.திருமுருகன்,
தலைவர்,நிர்வாக சபை,துர்க்கா தேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பழை.
hவவிள:ஃஃறறற.வநடடனைரசபய.உழஅஃ

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *