பிக் பாஸ் 2 ஒரு பார்வை

1
57

விஜய் தொலைக்காட்சி நடத்திய தமிழ் பிக்பொஸ் 2, போட்டியாளர் ரித்விகாவின் வெற்றியுடன் நிறைவு பெற்றுள்ளது. பிக்பொஸ் 1 பற்றியும், பிக்பொஸ் 2 பற்றியும் கலவையான விமர்சனங்கள் உண்டு.
தமிழ் நாட்டின் பண்புக்கு பிக்பொஸ் நிகழ்ச்சி கேடு விளைவிப்பது, எவ்விதத்திலும் தமிழர்களுக்கு இது பொருத்தமற்றது என்ற கண்டனங்களும் எழவே செய்தது. இதில் என்ன வேடிக்கை என்றால் கண்டித்தவர்கள் நிகழ்ச்சியைப் பார்த்தவர்களாகவும் தொடர்ந்து அவலுடன் பார்த்துக் கொண்டிருந்தவர்களாகவும் இருந்தார்கள்.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவை வணிகநிலை கொண்டவையே.அதில் தவறு எதுவுமில்லை யென்பது எனது அபிப்பராயம்.

ஆனால் இந்த நிகழ்ச்சிபற்றி ஏன் வேறுவிதமாக சிந்திக்கக்கூடாது என்ற ஊற்றின் வழி எனது கருத்தை இங்கே பதிவு செய்கின்றேன்.
இந்நிகழ்ச்சியானது மனிதமனங்களை ஆய்வு செய்த நிகழ்ச்சி என்றுகூடச் சொல்லலாம்.
போட்டியாளராகப் பங்கு கொண்டவர்களில் பெரும்பாலானோர் நடிப்புத்துறை சார்ந்தவர்களாக இருந்த போதும், அவர்களில் வானொலித்துறை, இசைத் துறை சார்ந்தவர்களும் இவரகளுள் எத்துறையும் சாரத ஓரிருவர் இருக்கவெ செய்தனர்.பொதுவாக நடிகர்கள் என்றவுடனோ அவர்கள் ஊடகங்களில் கொடுக்கும் பேட்டிகளை அவரின் அழகினை பார்த்து அவர்கள் வானத்தில் இருந்து இறங்கியவர்கள் என்ற கற்பனையை இந்த பிக்பொஸ் நிகழ்ச்சிகள் தவிடுபொடியாக்கியிருக்கின்றன.
பிக்பொஸ்ஸில் பங்குபற்றியவர்கள் தாம் எக்குடும்ப பண்பியலுக்குரியவர்கள் என்பதை அவர்களே வெளிப்படுத்தி நின்றார்கள்.
அனைத்து நவரச உணர்ச்சிகளும், உணர்வுகளும் அங்கு பங்கு கொண்ட வர்கள் வாயிலாக களமாடியதைக் காண முடிந்தது. அதே வேளை தொலைக்காட்சி இரசிகர்கள் தொடர்ந்து இந்நிகழ்ச்சியை பார்க்க வைப்பதற் காக சில சிண்டுமுடிதலையும் பிக்பொஸ் நிர்வாகம் கனகச்சிதமாக செய்தது.
மனிதர்கள் என்றால் அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை வெளிப்படுத்திய இந்நிகழ்ச்சி நெகிழ்ச்சியான தருணங்களையும், வெவ்வேறு குணாம்சங்களைக் கொண்டவர்களை ஒன்றாக குடியிருந்த நாட்களின் தன்மையால் அவர்கள் ஒரே குடும்பமாகி நின்ற போதும் ஒரு சிலர் தாமரைத் தண்ணீர் போல ஒட்டியும் ஒட்டாமலும் இருந்ததையும் பார்த்தோம்.

வீடு என்பது பற்றும் பாசமும் கொள்ளக்கூடிய இடந்தான்.இந்நிகழ்ச்சியில் பங்குபற்றியவர்கள் ஒவ்வொருவராக வெளியேறிய போது பிக்பொஸ் வீட்டினை பிரிய முடியாமல் பிரிந்ததைக் காண முடிந்தது.இங்கே மனிதமனங்களின் போராட்டமும் மகிழ்ச்சி, கவலை, விரக்தி, பொறாமை,கண்ணீர், கோபம் என எல்லாமே இருந்தன.அதனால் இதனை மனிதர்களின் மனங்களைப் பரீட்சித்துப் பார்த்த ஆய்வாகக்கூட இருக்கலாம் என்பது எனது அபிப்பராயம்.
எமது அன்றாட வாழ்வில் உதாரணமாக ஒரு மரத்தை தினம் தினம் பார்ப்பதும் வெயில் காலங்களில் அதன் நிழலில் ஒதுங்கியிருப்பதன் நிகழ்வு அம்மரத்தோடு ஒன்றித்த பாசமாக மாறுவதும் பிறகு அம்மரம் அந்த இடத்தில் இல்லாத பொது ஏங்குவது இயல்பானது.அது போன்றுதான் பிக்பொஸ்ஸில் பங்குபற்றியவர்கள் அங்குள்ள அனைத்தோடும் ஒன்றித்துப் போய் அப்பொருட்களை தமது தோழர்களாக கொள்வதும் இயல்பானதே.

அதற்கு உதாரணமாக ரித்விகா தான் அணிந்திருந்த மைக்கின் மீது பாசம் வைத்திருந்ததையும் அதை பிரிய முடியாமலிருப்பதையும் பிகபொஸ்ஸிடம் கூறியதிலிருந்து அறிய முடிகின்றது.
எனவே பிக்பொஸ் நிகழ்ச்சி என்பது வெறும் வணிகம் மட்டுமல்ல குணங்களை ஆய்வு செய்த களமாகக்கூட கருதலாம்.

– ஏலையா முருகதாசன்

Loading

1 thought on “பிக் பாஸ் 2 ஒரு பார்வை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *