இங்கிலாந்து கொரோனோ ஆபத்தை எதிர்கொள்ள 4000 கட்டில் வசதிகளுடன்; வைத்தியசாலை!!!

0
b25lY21zOjc2ZmZmOWQ2LTRlZWItNDc5Zi1hYTY4LTdiODUxYTY3NjNhMzo3ZDc1ZGU3OC1lZGVhLTRjYTctYTJmMy0zZjk2OWExYTY4YTE=

இளவரசர் சாள்ஸ் உலகில் மிகப்பெரும் வைத்தியசாலையை திறந்து வைத்தார்.

4000 ஆயிரம் கட்டில் போடக்கூடிய உலகில் மிகப்பெரும் வைத்தியசாலை ஒன்று கொரோனோ நோய்யாளர்களுக்காக லண்டனில் அமைநத் துள்ளார்கள் The ExCel Centre in London (Nightingale) மண்டபமே இன்று புதிய வைத்தியசாலையாக NHS Nightingale Hospital ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் ஒரு கி.மீ ஆகும்.

03.04.2020 இந்த வைத்திசாலையை இளவரசர் சாள்ஸ் தனது இல்லத்தில் இருந்தபடியே ஸ்கைப்பில் திறந்து வைத்தார். அவரும் கடந்த சில வாரங்களுக்கு முன் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மீண்டுவந்தவர் என்பது யாவரும் அறிந்ததே.

தற்போது இந்த வைத்தியசாலையில் 80 வாட்டுகளில், 500 கட்டில்கள் இடப்பட்டுள்ளது. மேலும் 3,500 கட்டில் போடுவதற்கு வசதியாக இன்னும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வைத்தியசாலையை இரு வாரங்களுக்கும் குறைவான காலத்தில்; விரைவாக அமைத்து முடித்துள்ளனர்.

இந்தப் பெரு மண்டபமே கடந்த காலங்களில் ஈழத்தமிழர்களால் மாவீரர் தினம், இடம்பெற உபயோகிக்கப்படது, என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த மண்டபம் பெரும் தொழில் பேட்டைகளின் ஒன்று கூடல், மண்டபமாகவும், பெரும் கண்கண்காட்சிகள் இடம்பெறும், இடமாகவும் இது வரை காலமும் இருந்து வந்துள்ளது.

இப் பெரு மண்பத்தில் தற்காலிகமாக கொரோனோ வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகும் நோயாளிகள்; பராபரிக்க பட உள்ளனர். முதல் கட்டமாக. St Bartholomew’s Hospital இன் ஒரு விரிவாக்கமாக அங்கிருந்து நோயர்களை இந்த வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளார்கள் என பேச்சாளர் Mr Hancock. தெரிவித்துள்ளார்.

இந்த பெரும் வைத்தியசாலையில் 4000 கட்டில்கள் போடும் நேரம் வந்தால் 16,000 சேவையாளர்கள் தேவைப்படுவார்கள். அவர்கள் தங்குவதற்கு அமைவாக மண்டபத்திற்கு அருகில் இருக்கும் விடுதிகள் உபயோகத்திற்குவரும் என்றும் சொல்லப்படுகிறது.

இங்கிலாந்தில் நோய்யாளர்களின் இறப்புவீதம் யேர்மனியை விட அதிகம். புதிய வைத்தியசாலைகள் அமைக்கும் இந்த முன்னேற்பாடுகள் வருங்காலத்தில் இறப்பு வீதத்தை தடுக்க உதவும் என எதிர்பாக்கலாம்.

யேர்மனியில் தற்போது டோட்மூண்ட் நகரில் அமைந்துள்ள மிகப்பெரும் உதைபந்தாட்ட மைதானம் Dortmund stadium தற்போது கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளானவர்களை கவனிக்கும் அவசப்பிரிவு வைத்தியசாலையாக மாற்றப்பட்டு உள்ளது.

தற்போது மிகப்பெரும் அரங்கங்கள், விளையாட்டு மைதானங்கள், விமான நிலையங்கள் எனப் பல வைத்தியசாலையாக மாற்றப்பட்டுவருவதை உலகில் அவதானிக்க முடிகிறது. கோவில் இல்லா ஊரில் குடி இருக்கவேண்டாம் என்றார்கள். ஏன் என்றால் அன்று ஆபத்தான நேரங்களில் பெரு மண்டபங்களுடன் இருந்தவை இந்தக் கோவில்களே. இன்று அந்தப் பணியை இந்தப் பெரு மண்டபங்கள் புரிகின்றன.

எவ்வளவு வசதிகளை அரசு செய்தாலும்,மனிதன் தன் சுய அறிவின்படி,வருமுன் காப்பதே சிறந்த வழி. முடிந்தவரை உங்கள் உடம்பின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளுங்கள். அம்மா,அப்பா,பாட்டன்,பாட்டி உண்ட உணவு முறைகளை பார்த்து,கேட்டு நடவுங்கள்.
வட்சப் முகப்புத்தகம் மற்றும் சில ஊடகங்களில் வரும் ஊகங்களுக்கு பலியாகிவிடாதீர்கள். அச்சத்தை தருவிக்கும் ஊடகங்கள்கூட சில நேரங்களில் உங்கள் மனவலிமையை குறைக்கும். பேய்படம் பார்க்கும் நேரம் இது வல்ல. பொழுதுபோக்காக மனதை மகிழ்விக்கும் படங்களைப் பாருங்கள்.

நாலுவார்ததை தொலைபேசியில் நண்பர்களுடன் கதைத்தால், செய்தி வாசிக்காதீர்கள். பொதுவான நல்ல விடையங்களை பகிருங்கள். இன்னும் போனால் தீபாவளி சிறப்பிதழ்,பொங்கல் சிறப்பிதழ்போல் கொரோனா சிறப்பிதழ்கள் தயாரானாலும் ஆச்சரியமில்லை. யாவும் கடந்து போகும் என நம்பிக்கையுடன் வாழுங்கள்.

— வெற்றிமணி மு.க.சு.சிவகுமாரன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *