சமூக இடைவேளியும் இளையவர் மனநிலையும்…
Young millennials couple wearing protective face masks and kissing each other, virus spread prevention and people concept
சுதந்திரமாக இருந்தவர்கள் நம் இளையவர்கள். அவர்களின் வாழ்க்கை முறையே மாறிவிட்டது. கொரோனா என்ற நோயின் விளைவே இந்த மாற்றம். எதிர்பாராத விதமாக பல விடயங்களைக் கற்றுக்கொள்கின்றோம்.
பாடசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் கட்டுப்பாடு இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது 1,5 மீற்றர் இடைவெளியும், தெரிந்தவர்களுடன் தெரியாதவர்கள் போல் பழகுவதும் மிகவும் கடினமாக உள்ளது.
நண்பர்களுடனும் உறவினர்களுடனும் தொலைபேசி மற்றும் இணையத்தளம் ஊடாக மாத்திரமே உரையாட முடிகிறது. நேரில் சந்தித்து மனம் விட்டு பேச முடியாத ஒரு நிலை.
கூடுதலானவர்கள் வெளியே சென்று நண்பர்களுடன் கூடி உணவு உண்பது வழக்கம். ஆனால் ஆரம்பத்தில் உணவகங்களும் கடைகளும் பூட்டி இருந்த நேரம் அவர்களுக்கு வீட்டில் இருப்பதற்கு இலகுவாக இருக்க
கவில்லை. கல்வி படிப்பு என்று இருப்பவர்களுக்கு விடுமுறைக்கு வேறு நாடுகளுக்குச் சென்று அனைத்து பிரச்சினைகளை மறந்து மகிழ்ச்சியாக இருப்பதும் தற்போது செய்ய முடியாதது ஒன்று.
காதலிப்பவர்களும் சந்திப்பதும் சந்தேகம் தான்.
ஆனால் வெளியில் சென்று காற்று வாங்கி நடப்பதை நிறைய இளையவர்கள் செய்து வருகிறார்கள். வீட்டுக்குள்ளே முடங்கி இருக்காமல் வெளியில் செல்வது நன்மை தரும். நிறைய இளையவர்கள் முதியவர்களுக்கு கடைகளுக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கிறார்கள்.
விளையாட்டுகளுக்கும் உடல்பயிற்சிக்கும் சென்றவர்களுக்கு கட்டுப்பாடுடன் இருப்பது உடலுக்கும் மனதிற்கும் துன்பத்தைத் தருகிறது. இதனால் நாம் ஒன்றும் செய்யாமல் வீட்டுக்குள்ளே இருக்கக்கூடாது. வெளியே சென்று உடற்பயிற்சி செய்யலாம் அல்லது வீட்டிலும் கூட.
தற்போது இணையத்தளம் ஊடாக நிறைய இளையவர்கள் சோர்ந்து போகாமல் பல வித்தியாசமான நிகழ்ச்சிகளைச் செய்து வருகிறார்கள்.
ஆனால் யேர்மனியில் தற்போது கடைகளும் உணவகங்களும் மீண்டும் திறக்கப்பட்டதில் அனைவருக்கும் மகிழ்ச்சி.
முக்கியமாக கடினமாக இருப்பது விழாக்களின் சந்தோசம். கலை நிகழ்வுகள், பிறந்தநாள் விழாக்கள், திருமண விழாக்கள் மற்றும் இன்னும் பல. ஆட்டம் பாட்டம் என இருந்தவர்களுக்கு கடினம் ஆனால் எல்லோருடைய நலம்கருதி சில கட்டுப்பாடுடன் வாழப் பழகிக் கொள்வோம்.
சமூக இடைவெளி என்பதை இளையவர்கள் குயஉநடிழழமஇ ஐளெவயபசயஅ ஊடாக இல்லாமல் செய்கிறார்கள்.
நாம் வீட்டில் இருப்பது பெற்றோர்களுக்கு மாத்திரம் மிகவும் சந்தோசம்.
உயிர்களைக் காப்பது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்!
= றஜீனா.தர்மராஜா
![]()
