கலாசூரி திவ்யா சுஜேன் (அபிநயஷேத்ரா அதிபர் ) அவர்களின் கலைச் சேவைக்கு வெற்றிமணி வழங்கும் கௌரவம்

0
03.page.Thivya.02

2023 பங்குனி 08சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தாயகத்தில் வசிக்கும் கலாசூரி திவ்யா சுஜேன் (முதுநிலை வணிக நிர்வாகம், முதுகலைமாணி பரதநாட்டியம்) அவர்களை, வெற்றிமணிப் பத்திரிகையின் பங்குனி மாதம் சிறப்பிதழின் ஆசிரியராக கௌரவித்து மகிழ்கின்றது.
பல வருடங்களாக வெற்றிமணி பத்திரிகையில் நின்னைச் சரணடைந்தேன், எத்தனைகோடி இன்பம் வைத்தாய் என்ற பாரதியின் மகுடவரிகளை தலைப்பாகக்கொண்டு 50க்கும் மேற்பட்ட கட்டுரைகளைத்,தொடர்ந்து எழுதியவர், எழுதுதி வருபவர்.தாயகம் முழுவதும் கலைநிகழ்ச்சிகள்,நட்டுவாங்க வகுப்புகள்,பல்துறை சார்ந்த விழாக்கள் என வார இறுதியில் குவிந்து இருக்கும் பொழுதுகளிலும் குறித்தவணையில் தன் முயற்சிகளை சிறப்பாக வெளிப்படுத்தும் ஆற்றலும் அக்கறையும் வியக்கத்தக்கது.

உலகப்புகழ் பத்மா சுப்பிரமணியம் அவர்கள் இலங்கையில் உள்ள நடன ஆசிரியர்களுக்குப் பயிற்சிப்பட்டறை வழங்கி,; வர்ணத்தினைக் கற்றுக்கொடுத்து அதனை ஆற்றுகைப்படுத்தி,அதில் சிறந்த கலைஞரைத் தெரிவு செய்து “அகில உலக பத்மா சுப்பிரமணியம் விருது” வழங்கி கௌரவித்தார். அவ்விருது திவ்யா சுஜேன் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றது. அப்பொழுது திவ்யா சுஜேன் அவர்களின் நடனத்தின் மீதான புரிதலையும், வேகமாக உள்வாங்கிக் கொள்ளும் தன்மையையும் பாராட்டினார். திவ்யா சுஜேன் இந்தியாவில் மிகப் பிரசித்தி பெற்ற பத்து சிவ ஆலயங்களில் நாட்டியாஞ்சலி ஆற்றுகை வழங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது கலைச்சேவை மேலும் ஓங்கி ஒலித்திட வெற்றிமணி வாழ்த்துகின்றது. இவரது ஆளுமைகள் பற்றி கலாவித்தகர்கள் சொல்வதை 24ம் பக்கத்தில் பார்க்கலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *