யேர்மனியில் ஏறுவரிசையில் தமிழர்; தெருவிழா!

0
304

ஒரு விவசாயி இயற்கைமீது கொண்ட நம்பிக்கைக்கு ஈடாக செயற்பாட்டாளர்கள்!

வெள்ளி,சனி,ஞாயி;று (01,02,03.புரட்டாதி.2023) முன்று தினங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.
தமிழர் கலையான பறை முழக்கத்துடன் விழா ஆரம்பமானது. பல்லின மக்களையும் உள்வாங்கி கலை நிகழ்வுகள் இடம் பெற்றது சிறப்பு, அதனால் பார்வையாளர்களாக, பல்லின மக்களையும் உள்வாங்க முடிந்தது.
நல்ல கால நிலை, நல்ல உணவுகள், கடைகள் என சிறப்பாக இருந்தது, Dortmund நகரபிதா, மற்றும் தமிழ் ஆர்வலர்கள் குதிரையாட்டம், காவடியாட்டம், புடைசூழ மேடைக்கு அழைத்து வரப்பட்டனர். விழா ஒருங்கிணைப்பாளர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

உள்ளரங்க நிகழ்ச்சிகளை திட்டமிட்டு,நன்கு விளம்பரம் செய்து,நல்லகலைஞர்களை வரவழைத்தும்,உள்நாட்டு கலைஞர்களின் அர்ப்பணிப்பான உழைப்பிலும் ஒரு சிறந்த நிகழ்ச்சியைத் தந்துவிட முடியும்.

ஆனால்! ஆனால்!! ஆனால்!!! இப்படி எத்தனை ஆனால்கள் வெளியரங்க நிகழ்சிகளுக்கு சொல்லலாம். அதில் ஒன்றைச் சொல்வது என்றால், ஒரு விவசாயிக்கும் வெளியரங்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், கைகொடுப்பது இயற்கையே. எந்த நம்பிக்கையில் ஒரு விவசாயி விதைக்கின்றான், அறுவடைசெய்கின்றான், அதே நம்பிக்கைதான் இங்கும் வெளியரங்க ஏற்பாட்டாளர்களுக்கும் உண்டு.

ஆனால் எந்த பதட்டமும் இன்றி, நம்பிக்கையுடன் செயலாற்றி தெருவிழாவை வெற்றிவிழாவாக்கிய ஒவ்வொரு உழைப்பாளிக்கும் வெற்றிமணியின் வாழ்த்துகள். மேலும் அடுத்த வருடம் பல புதியவை புகுவனவாக மேலும் மெருகுறும் என எதிர்பாக்கலாம். காரணம் ஏறுவரிசையில் தமிழர்; தெருவிழா ஏற்றமுற வளர்கின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *