அன்று ஒரு பாயில் படுத்து, ஒரு தட்டில் உண்டு மகிழ்ந்த காலம்..

0
vm12

-மாதவி – யேர்மனி

சிறுவயதில் நாம் ஒரு பாயில் படுத்து உறங்கினோம். அம்மாவின் சமையலை எந்த 5 ளவயச hழவநட உம் அடிக்காது.
இடியப்பமும், சம்பலும் ஆகட்டும் ஆட்டுக்கறியும், இடியப்பமும் ஆகட்டும், எல்லாம் அம்மாவின் கைப்பக்குவம்தான்.
உடுப்பு மெல்லிய நீலம், மெல்லிய மஞ்சள், மெல்லிய பச்சை, இப்படி எல்லாமே மெல்லியது பிடித்துப் போகும்.

வீட்டில் ஐந்து பேர் என்றால் என்ன, ஆறு பேர் என்றால் என்ன, எல்லாருக்கும் ஒரே அலுமாரிதான், அம்மாதான் பிள்ளைக்கு என்ன விருப்பம் என்பதை அறிந்து சமைப்பா.

பாதி அக்காமார், தங்கைமார், வீட்டில் சட்டைக்கு மேலே தம்பிமாரின், அண்ணாமாரின் சறம் தான் கட்டுவார்கள்.

உடுப்பு வாங்கவா. ஏன் நல்ல படம் ஒன்று ஓடுது, இவங்களை ஒருக்கா கார் பிடித்து கூட்டிப் போவோமே என நினைப்பதும், மெல்ல அப்பாவிடம் இரவு சாப்பிடும் நேரம் பார்த்து, சம்பல், இடியப்பம் அத்தோடு கலந்து, அப்பா! கூட்டிப் போங்களேன் என்பதையும் சேர்த்து மசிப்பா.

அடுத்த நாளே கோரிக்கை அமுலுக்கு வந்துவிடும். படம் பார்த்தா ஒரு வாரத்திற்கு படுத்துக் கொண்டு, படம் ஓடும். எதிர் மறை ஓட்டம் குறைவு. ஒரே இரத்தம், ஒரே குணம், ஒரே பார்வை என்று கழிந்த காலம் இப்போது நினைத்தால் நம்ப முடியாது இருக்கிறது. அப்போது எமது விருப்பு, வெறுப்பை அம்மா அப்பா தீர்மானித்தார்கள் என்று குறைப்பட ஒரு மனவோட்டம் இருக்கலாம், ஆனால், எம்மை அணுவணுவாகத் தெரிந்தவர்கள், முடிவெடுத்தார்கள்.

ஆனால் இன்று யார் என்று தெரியாத, ஏன் உருவமே இல்லாத, உண்மை முகம் காட்டாத ஊடகங்கள், எமக்கான முடிவுகளை எடுக்கின்றன, எடுக்க வைக்கின்றன.

ஒரு குழந்தை விக்கி விக்கி அழுதால், பக்கத்தில் தாயோ பாட்டியோ நின்றாலும், ஓடிப்போய் கூகுள் பண்ணிப் பார்ப்பார்கள். ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு மாதிரி, சிறுவயதில் உன்னுடைய அம்மாவுக்கும் இப்படித்தான் என்று பாட்டி சொல்லத் தொடங்க, பேரப்பிள்ளை, காதுக்குள் இயபோனை மாட்டியபடி ஓம் என்று தலையாட்டும்.

சரி அவர்கள் இரண்டாம் மூன்றாம் சந்ததிகள், அவர்களை விடுங்கள். நாம் ஒரு பாயில், ஒன்றாகப் படுத்து உறங்கி எழுந்தவர்கள், இப்போது நாற்பது, ஐம்பதைக் கடந்துவிட்டால், பாருங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இரகம்.

குடும்பமான பின் விரைவாக, அவர் அவர் வாழ்க்கை முறை காலம் சூழலுக்கு ஏற்ப மாற்றி எழுதப்படும்.

வெளிநாடுகளில் வசிக்கும் நாம், முன்பு சகோதரர்கள் வீட்டுக்கு போனால், 5 பேர் என்றாலும், பெரிய அறை என்றால் ஓரு அறையில் படுத்து உறங்குவோம். இரவிரவாக அரட்டை அடிப்போம், இருக்கிறதைப் போட்டு குழைத்து அடிப்போம். பேச்சுக்கள் எமது சொந்த அனுபவ பகிர்வாக இருக்கும், பார்வைகள், பேச்சுக் கோணங்கள், உணவு முறைகள் எல்லாம் ஒரு அளவேனும் ஒத்து இருக்கும். இன்று எவர் வீடுகளிலும் எவரும் தங்க விரும்புவதில்லை, ஹோட்டல் எடுத்து நிற்கிறார்கள். காலம் மாறிப் போச்சு என்பதைவிட உண்மை இதுதான்.

ஒருவர் வீட்டுக்குப் போனால் முதல் முகம் காட்டுவது தொலைக்காட்சி. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பிடிக்கும், ஒரு பாயில், ஒன்றாய்ப் படுத்து எழும்பினம் என்ற கதையை சுருட்டி மூலைக்குள் வையுங்கோ.

நாடகம், பார்க்க விரும்பாதவர் போனால், தலையைப் பிச்சுக்கும், யூப்ரீப் சேனலில் தங்களுடைய பிரச்சினைகள், மற்றவர்கள் பிரச்சினைகள் பேசுவதைப் பார்த்துக்கொண்டு இருந்தால், முகத்தில் ஈயும் ஆடாது.

படம் பார்த்தால், பாட்டு வந்தால் ஒருவர் ஓட விடுவார், ஒருவருக்கு படத்திலேயே பாட்டுத்தான் பிடித்திருக்கும். அது ஒரு புறம் இருக்க கமலஹாசனைப் பிடித்தவர் எல்லோருக்கும் பிக்பாஸ் பிடிக்குமா? ஏதோ உறவுக்காரர் போல் அவர்கள் பிரச்சினையில் இவர்கள் மூழ்குவார்கள். அதில் நடப்பது எல்லாம் சொல்லிவைத்து, செய்பவையே, (ளுநவரி பயஅந) அது சரி இப்படி பல ஒவ்வாமைகள் ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொருவருக்கும் இருக்கும்.

அது மட்டுமல்ல, மணியடித்தால் உணவு, மணி அடித்தால் தொலைக்காட்சி, மணி அடித்தால் படுக்கை, இப்படி சந்திரனுக்கு செல்லும் நாய் போல், வாழ்க்கை. வயோதிபம், நோய், தனிமை, போன்ற காரணங்களால் மணியடித்து வாழ்வது 100 வீதம் சரியானதே.

ஆனால் இவை இல்லாமலே மணியடித்து வாழ்வது என்பது எல்லோருக்கும் ஒத்து வராது. உணவு வகைகளை எடுத்துக் கொண்டாலே, ஒன்றாய்ப் படுத்து ஒன்றாய் எழும்பியவர்கள் கூட இங்கே ஒவ்வொரு வகை.

எனக்கு சீனி தேத்தண்ணிக்கு போட வேண்டாம். ஏன் அப்பா சுகரே? என்றால், இல்லை. இல்லை வந்திடும் என்று இப்ப பத்து வருடமாகப் போடுவதில்லை.

இன்னொன்று அட இது என்னப்பா உப்பு எனக்கு சத்தி வரும்போல கிடக்கு, என்ர அவருக்கும் உப்பு பிடிக்காது,
எங்க உப்பா என்று நாக்கில் வைத்து பார்த்தால் உப்பு என்ற நாமமே இருக்காது, யாரோ சொன்னவையாம் உப்புப் போட்டுச் சமைச்சுப் பழகவேண்டாம் என்று. அவர் கத்துவார். நான் போடுவதில்லை.

அக்கா நாங்கள் ஒன்றாய் ஒரு பாயில் படுத்து எழும்பினோம், இப்ப இப்படியாக கிடக்கு, என்று மனதுக்குள் பேசும் ஒலி கேட்காமலில்லை.

அது சரி வீட்டிலே செற்றியிலே கால் மடித்து, போற இடங்களில் இருக்க முடியுமா? ஒரு பாயில் படுத்து… சரி அதை விடுங்க, தொலைபேசி வந்தால், ஒவ்வொருவரும், மணிக்கணக்கில், கதைப்பதைப் பார்த்தால் ஒருவருக்கு ஒருவர் வேறுபாடான வாழ்க்கையின் தன்மைகள்; தெரியும். இதை எல்லாம் தவிர்க்கவே இப்போது எல்லோரும் வீடுகளில் தங்கி கும்மாளம் அடிக்க விரும்புவதில்லை.

அப்படி கும்மாளம் இப்பவும் அடிக்க முடியும் என்றால், இன்றும் அந்த ஒரு பாயில் படுத்து எழும்பிய மகிழ்ச்சி தங்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *