மனதை வேடிக்கை மட்டும் பார்க்கவிட்டு விட்டு நட
–தீபா ஸ்ரீதரன் – தைவான்
உறக்கம் இல்லாத இரவுகள் சிற்பக் கூடத்தின் பயிற்சி காலத்தைப் போன்றது. மனமும் மூளையும் பல முகங்களை உருக்கிக் குழைத்து வார்த்துக்கொண்டே இருக்கும். மெழுகு அல்லது மண் சிலைகளைப் போல. அப்படி ஓர் இரவாக நேற்று அமைந்து விட்டது. பல முகங்கள், பல நினைவுகள் வடிய வடிய விடிய விடிய. இவற்றிற்கு நடுவே ஒரு பெயரும், நினைவில் தேங்கிப் போன அலைபேசியிலும் கணினித் திரையிலும் பொறிக்கப்பட்ட சில ஆங்கில வரிகளும் என்னை ஆக்கிரமித்துக்கொண்டன. ஆம் அந்த மனிதனின் முகத்தை நான் பார்த்ததில்லை. எங்களுக்குள் முகங்களின் பரிட்சியமில்லை. பெயரும், உரையாடலும் மட்டுமே.
எனக்கு வாழ்வில் ஏற்படும் தோல்விகளையும், துயரங்களையும் கட்டித் தழுவி (சில நேரங்களில் மனம் உவந்து. சில நேரங்களில் வேண்டா வெறுப்பாக) டாட்டா சொல்லி வழியனுப்பி வைக்கப் பிடிக்கும். ஆனால் அவை என் கழுத்தை நெரிக்க முற்படுவது எனக்குப் பிடிக்கவே பிடிக்காது, அதற்கு நான் அனுமதிப்பதும் கிடையாது. அப்படி 2001லிருந்து என் வாழ்வில் தொடர்ச்சியாகத் துயரங்களும் தோல்விகளும் என்னை நெறிக்க முயன்று கொண்டிருந்தன. ஒரு வயதே நிரம்பிய என் மகளுடன் மஸ்கட்டில் (Oman) வாழ்ந்துகொண்டிருந்தேன்.எனக்கு அப்பொழுது 21 வயது. எனக்கு முன் பல கேள்விகள், பல சவால்கள். நான் மனிதர்களிடம் எப்பொழுதெல்லாம் நம்பிக்கையை இழக்கிறேனோ அப்பொழுதெல்லாம் புதிய மனிதர்களிடம் நிறையப் பேச முயற்சி செய்வேன். ஆனால் அந்த நேரத்தில் எனக்கு நண்பர்கள் என்று அங்கு யாரும் இருக்கவில்லை. அப்போதுதான் Yahoo chat என்று ஒன்றைப் பற்றி அறிந்து அந்த உலகத்திற்குள் நுழைந்தேன். அதில் பயாலஜி உhயவ ரூம் என்று ஒன்று இருந்தது. B.Sc முடித்து M.Sc தொடரமுடியாமல் போன வருத்தம் எனக்கு அப்போது கொஞ்சம் இருந்தது. எனவே அந்த ஆர்வத்தில் பயாலஜி பற்றி நிறையப் பேசலாம், தெரிந்துகொள்ளலாம் என்று அந்த ரூமுக்குள் நுழைந்தேன். (அந்த Chat மொழிகளை எல்லாம் கற்றுக்கொள்வதற்குள் நிறையத் தர்மசங்கடமான தருணங்களைச் சந்தித்திருக்கிறேன், அசிங்கப்பட்டிருக்கிறேன்) அங்கு மூன்று, நான்கு நாட்கள் சிலரிடம் பேசியபோதுதான் தெரிந்தது, அங்கு பயாலஜி பற்றியெல்லாம் யாரும் பேச வரவில்லை என்று. சரி அவர்கள் நோக்கம் என்னவாக இருந்தால் நமக்கென்ன? எனக்கு என் நோக்கம் தெளிவாகத் தெரிந்திருந்தது. ‘புதிய நண்பர்களைத் தேடிக்கொள்வது’. அவர்கள் மற்றவர்களிடம் என்ன பேசவேண்டும் என்பதை நான் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியாது, ஆனால் அவர்கள் என்னிடம் என்ன பேசவேண்டும் என்பதை என்னால் கட்டுப்படுத்த வரையறுக்க முடியும், அதை அவர்களுக்குத் தெளிவாகப் புரிய வைக்கவும் முடியும். அதைத்தான் நான் அங்குச் செய்தேன். எனக்குப் பல நண்பர்கள் கிடைத்தார்கள்.
அப்படி 2002ல் அறிமுகமான ஒரு நட்பு, ஆனந்த். அவன் டெல்லியைச் சேர்ந்தவன். நாங்கள் பல நாட்கள் பல விஷயங்களைப் பற்றி உரையாடியிருக்கிறோம். நிறையச் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறோம். அரசியல் கொள்கைகள் பற்றிய சண்டைதான் பெரும்பாலான நாட்கள். எனக்குப் புத்தகம் வாசிக்க அவ்ளவாக பிடிக்காது ஆனால் வாசிப்பவர்களை அவ்வ்வ்வ்வளவு பிடிக்கும். அவன் ஒரு புத்தகப் பிரியன், வெறியன். அவனிடம் உhயவ பண்ணும்போது Dictionary இல்லாமல் சமாளிக்கவே முடியாது. Big Bang Theory யை என் சிறு மூளைக்குள், அவனுக்குப் புரிந்த அளவு எனக்கும் புரிய வைக்க முயற்சி செய்தவன். அவன் என்னிடம் அடிக்கடி சொல்லுவான் “வாழ்க்கையைப் பற்றிய உனது புரிதல் ஆழமானது. என்னை விந்தையில் ஆழ்த்துகிறது. ஆனால் ஏதேதோ காரணங்களைச் சொல்லிக்கொண்டு நீ உன் உலகத்தைக் குறுக்கிக்கொண்டிருக்கிறாய்” என்று. அதைச் சற்று முரட்டுத்தனமாகவே எனக்கு உணர்த்தியவன் அவன். இப்படிப் பல வருடங்கள் பல உரையாடல்கள். ஊhயவல் மட்டுமே நாங்கள் தொடர்பிலிருந்தோம். ஏனோ புகைப்படங்களைப் பரிமாறிக்கொள்ளவோ, Voice chat பண்ணவோ நாங்கள் ஆர்வம் காட்டவில்லை. அது எங்களுக்குத் தேவையில்லாமலே இருந்தது.
பிறகு 2012லிருந்து அவனிடமிருந்து எந்த செய்தியும் இல்லை. ஆனால் நான் அவனுக்குத் தொடர்ந்துmessage/mail அனுப்பிக்கொண்டிருந்தேன். என்னால் அவ்வளவு சீக்கிரம் நட்புகளையும் நம்பிக்கைகளையும் கைவிட முடியாது. ஏழு வருடத்திற்கு முன் 2015ல் அவனிடமிருந்து கடைசியாக ஒரு செய்தி வந்திருந்தது. ஆம் இன்று அவன் உயிரோடு இல்லை. Pயnஉசநயவiஉ உயநெச ல் இறந்து விட்டான்.
அவன் அனுப்பிய குறுஞ்செய்தியில் இவ்வாறு இருந்தது.(ஆங்கிலத்தில் இருந்தது)
“தீபா, ளுழசசல, கொஞ்ச நாளாக நான் உன்னோடு தொடர்பு கொள்ள முடியவில்லை. எனக்கு Pயnஉசநயவiஉ ஊயnஉநசஇ டயளவ ளவயபந நான் வசநயவஅநவெல் இருக்கிறேன். அன்பு என்பது தொடர் முயற்சியல்லவா, அதனால் என் பெற்றோர்கள் என்னைப் பிழைக்க வைக்கத் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். நான் அவர்கள் அன்பை மதிக்கிறேன் ஆகையால் வசநயவஅநவெ எடுத்துக்கொள்கிறேன். கம்ப்யூட்டர், மொபைல் எல்லாம் அதிகம் உபயோகிப்பதில்லை. நீ அனுப்பப்போகும் பதிலுக்குஃகண்ணீருக்கு சநிடல வரவில்லை என்றால் நான் இறந்துவிட்டேன் என்று புரிந்துகொள். நான் இன்டர்நெட்டில் நிறையப் பெண்களுடன் பேசியிருக்கிறேன். ஆனால் உன்னைத் தவிர வேறு யாரிடமும் நட்பு பகிர்ந்து கொண்டதில்லை. நேர்மை தைரியமானது என்று எனக்குத் தெரியும். அது அழகானதும் கூட என்பதை உன்னிடம் தெரிந்துகொண்டேன். நீ தைவானில் தனியாக வாழ்வது குறித்து மகிழ்ச்சி. உனக்கும் உன் மகளுக்கும் என் அன்பும் வாழ்த்துக்களும். இன்று இந்த சாவுப் படுக்கையில் நான் செய்ய முடியாமல் அல்லது நடக்கமுடியாமல் போன பல விஷயங்களைப்பற்றி வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறேன். அவற்றில் ஒன்று உன்னை ஒரு முறை கூட நேரில் சந்திக்கமுடியாமல் போனது. Take care”
அன்று என் கண்களில் மல்கிய அதே கண்ணீர் இன்று இதை எழுதும்போதும்… (ஆனந்தை பற்றிப் பல மாதங்களுக்கு முன்பும் இங்கே பதிவு செய்திருக்கிறேன். அப்போதும் இக்கண்ணீர்)
‘நீ தைவானில் தனியாக வாழ்வது குறித்து மகிழ்ச்சி’ இந்த வாக்கியத்தில் எங்கள் நட்பின் ஆழத்தை என்னால் உணர முடிந்தது. அதுவரை என் பத்து வருடத் தனிமை வாழ்க்கையில் பலரின் வருத்தங்களையும், பரிதாபங்களையும், ஆலோசனைகளையும் மட்டுமே நான் கேட்டிருக்கிறேன். யாரும் மகிழ்ச்சியைத் தெரிவித்ததில்லை. என்னை ஆழத்தில் புரிந்து கொண்ட ஒரு மனதால் மட்டுமே அதைச் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன்.
பலர் வாழ்க்கையைஃஇந்த உலகத்தை நியாயமற்றது என்று கூறுவதைப் பலமுறை கேட்டிருக்கிறேன். ஆனால் நான் இந்த பிரபஞ்சத்தை, வாழ்க்கையை நியாயமுள்ளதாகவே பார்க்கிறேன். இந்த பிரபஞ்சம் எந்த ஒரு தனி மனிதனுக்காகவோ, உயிரினத்திற்காகவோ, வஸ்துவிற்காகவோ பிரத்தியேகமாகத் தனிப்பயனாக்கப்பட்ட வடிவமைப்பு அல்ல. மாறாக அது ஒரு பொதுவுடைமைச் சுரங்கம். ஆனால் அதிலிருக்கும் மிகப்பெரிய நியாயம், எல்லாவற்றிற்கும் வடிவமைக்கப்பட்ட அறிவு.ஆம் அதற்கு, அவரவர்க்குத் தேவையானவற்றை மட்டும் தேடி எடுத்துக்கொள்ளும், இணைத்துக்கொள்ளும் அறிவு. இந்த வடிவமைப்பை எப்படி நியாயமற்றது என்று சொல்ல முடியும்?அது போல அன்பு என்பது தொடர் முயற்சி நான் அதற்காக முயன்று கொண்டே இருப்பேன்!
இன்றும் நட்பு என்று எண்ணி ஏமாற்றத்தைத் தழுவிக்கொள்ளும்போதெல்லாம் ஆனந்தை நினைத்துக்கொள்கிறேன். இன்று அவன் இருந்தால் என்ன சொல்லியிருப்பான்? என்ற கேள்விக்குள் மூழ்கிப் போகிறேன். ஒருவேளை, “மனதை வேடிக்கை மட்டும் பார்க்கவிட்டு விட்டு நட. நாளை வேறு காட்சி, வேறு புரிதல், வேறு கேள்வி, வேறு ஏமாற்றம்” என்று சொல்லியிருப்பானோ? இப்பதிவுடன் அவன் புகைப்படத்தையும் பகிர ஆசைதான். ஆனால் இல்லை. அவன் முகம் எப்படியிருக்கும் என்று கூட எனக்குத் தெரியாது. ஆனாலும் ‘தனி மனிதன்’ என்ற சொல்லில் எனக்கு நம்பிக்கையில்லை. எந்த ஒரு மனிதனும் பல மனிதர்களின் சிந்தனையின், உணர்வுகளின், ஞாபகங்களின் தொகுப்பு என்றே நம்புகிறேன். எனவே கீழேயுள்ள என் புகைப்படத்தில் எனக்குள் இருக்கும் ஆனந்தையே நான் இக்கணம் பார்க்கிறேன். நட்பென்னும் நாடாச் சிறப்பு!!
ஆனந்தின் நினைவுகளுடன்,
-தீபா ஸ்ரீதரன்
![]()
