ஐந்து விரல் பணப்பெட்டகம்

0
money02

-மாதவி (யேர்மனி)

பஸ் ஏறும் போதே கணக்காக காசை எடுத்து பயணத்திற்கு அளவானதாக கைவிரலுக்குள்ளோ, அல்லது கைப்பைக்குள், எடுத்து வைத்துக்கொள்வோம்.

விரலுக்குள் இடையில் வைத்தகாசு வைத்திருந்தால்! இருக்கோ, இருக்கோ என்று நூறுதடவை பார்ப்போம். நடத்துநர் இடம் கொடுக்கும் வரை அந்த நோட்டு கையை விட்டு நழுவாமல் இருக்க பெரும் போராட்டம் நடக்கும்.

இஞ்சை பார்த்தால் ஐந்து விரல் பணப்பெட்டகமாக ஒருமனிதன்.

நடத்துநர் கை விரல்களில் ஒவ்வொரு இடைக்குள்ளும் ரூபாய் நோட்டுக்கள். அதுவும் தரம்பிரித்து, 20,50,100,500,1000, எனத் தாள் காசுகள். ஒழுங்கு வரிசையில். சீனாக்காரரின் விறிபோல் இருக்கும்.

பஸ் குலுக்கம் என்ன. பயணிகள் குடைச்சல் என்ன எதுக்கும் நழுவாத நோட்டுக்கள்.
மிச்சக்காசு எப்ப வேண்டுமானாலும், பயணிகளுக்கு சட்டென கொடுக்கும் வண்ணம் அவை விரல் நடுவே இருக்கும்.

என்னதான் ஓட்டுநர் மிச்சம் கொடுக்க தயார் நிலையில் இருந்தாலும், மிச்சம் தரவில்லை என்று ஞாபகமூட்ட வில்லை என்றால் சில ஓட்டுநர் மிச்சம் தரவே மாட்டார்கள். 10,20,ஏன் 50 கூட மிச்சம் தரவேண்டும் என்றாலும் நம்மவர் பலர் கூச்சத்தில் கேட்காமல் இறங்கிவிடுவார்கள்.

பஸ் இருந்து இறங்கி சந்தையில் கத்தரிக்காய் 350 ரூபாய் சொன்னால். அட 350 ரூபாவா!
இந்தாபிடி 300 ரூபாய் என ஆச்சியிடம் கூச்சம் மறந்து பேரம் பேசுவார்கள்.

கூச்சம் மறக்க்கவேண்டிய இடத்தில் கோட்டை விடுவார்கள்.

என்னதான் இருந்தாலும் கைவிரல் நடுவே விசிறிபோல் இருந்த தாள்காசின் அழகே அழகுதான். அந்த அழகுக்கு நானும் விசிறிதான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *