பல தேசங்களில் இருந்தும் பல்லாயிரம் மக்கள் கூடும் பெருவிழாடோட்மூண்ட் தமிழர் தெருவிழா

0
vm312


-கவிதா லட்சுமி நோர்வே.

ஐரோப்பிய நாட்டில் மிக முக்கியமான முன்னெடுப்பு ஜெர்மன்- டோட்முன் நகரில் நடத்தப்படும் தெருவிழா என்பது மிகையல்ல. இம்மூன்று (05இ06இ07 – 09.2025) நாட்களில்இ பல தேசங்களில் இருந்தும் பல்லாயிரம் மக்கள் கூடும் பெருவிழா இது. தமிழ்ப் பாரம்பரியக் கலைஇ உணவுப் பண்பாடுஇஉடைகள்இ ஆவணப்படுத்தல்கள்இ நூல்கள்இ தாவரங்கள் என அனைவரையும் இணைக்கும் விழா இத்தெருவிழா.

தத்தமது கொள்கைகள்இ நிலைப்பாடுகள்இ அரசியல் பிரிவுகள்இ முரண்பாடுகள் கடந்து தமிழர் நாம் சங்கமிப்பது என்பது அத்தனை சுலபமான விடயமாக இருப்பதில்லை. இங்கே எந்த குழுவும் எந்த நபரும் முதன்மை படுத்தப்படுவதில்லை. கலை கற்றுக் கொண்டிருக்கும் மழலைகளில் இருந்து சிறந்த கலைஞர்கள் வரை மேடையைச் சிறப்பு செய்கின்றன. எம் சிறுவயதில் பெரும் உவப்பாக இருந்த திருவிழாக்களின் சிறப்பையும்இ மதம் தாண்டி ஒன்றினையும் சிறப்பையும் ஒருமித்துக்கொண்ட விழாஇ இத் திருவிழா! இப்பெரும் கூடலைப் பல வருடங்களாக நிகழ்த்தி காட்டிக்கொண்டிருக்கும் சபேசன் வி. அவர்களுடைய பணி எமது சமூகத்தில் பெரும் எடுத்துக்காட்டு என்பதில் ஐயமில்லை. மேலும்இ திருவிழா தொடங்கிய நாளன்று பொறுப்பாளரான சபேசன் தனது காலை முறித்துக் கொண்டுஇ நடமாட முடியாத நிலையிலும்இ இவ்விழா மாபெரும் விழாவாக நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போதுஇ தலைமை முன்நிற்க முடியாத சந்தர்ப்பத்திலும்இ எடுத்துக் கொண்ட விடயம் திறம்பட நடந்து கொண்டிருப்பது இதன் தனிச்சிறப்பைக் காட்டுகிறது. இவையணைத்தும் தகுந்தஇ தலைமைப் பண்பையே சுட்டி நிற்கின்றது.

தமிழ் மக்களும்இ பிற நாட்டு மக்களும்இ குடும்பமாக் கூடிஇ நின்று பேசிஇ கண்டுஇ கேட்டுஇ உண்டுஇ மகிழ்ந்துஇ களித்துஇ நட்புக் கொண்டாடிஇ ஆடி மகிழும் பெரும் திருவிழாவில் நாங்களும் பங்கு கொள்வதில் பெரு மகிழ்ச்சி. சாதாரணமாக புலம்பெயர் தேசங்களில் கிடைக்க பெறா உணவுகளான அப்பம்இ தோசைஇ பல வகை புலவுச்சோறுஇ பனங்காய் பணியாரம்இ மரவள்ளிஇ கிழங்குஇ இளநீர்இ அச்சாறுஇ மற்றும் கள்ளுக்கடை பலவித பலகாரங்கள் இங்கே கிடைப்பது கொண்டாட்டம்தான். புடவைகளுக்கும் அணிமணிகளுக்கும் பஞ்சமில்லை. சூடான தேநீர்
அன்பும் நன்றியும் சபேசன் மற்றும் ஜேர்மன் தமிழ் மக்கள்.

“வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு. ” (குறள் – 595)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *