திட்டமிட்ட தவிர்ப்பு
- ரூபன் சிவராஜா நோர்வே
பராசக்தி திரைப்படத்தின் ஆரம்பத்தில் அந்தக் கதைக்களத்திற்குரிய ஒரு அறிமுக உரைச்சித்திரம் ஒரு சில நிமிடங்களுக்கு இயக்குனர் சுதா கொங்காராவின் குரலில் இடம்பெறுகின்றது.
மொழிக்காக உயிர் கொடுப்பது தொடர்பாகவும், மொழி வெறும் ஒலியும் எழுத்தும் மட்டுமில்லை என்று தொடங்கி வரலாற்றில் உலகளாவி ஆங்காங்கே நிகழ்ந்த மொழித்திணிப்புகள், ஒடுக்குமுறைகள், புறக்கணிப்புகள் குறித்துச் சுட்டப்படுகின்றது. மொழி என்பது ஒரு இனத்தின் மூச்சுக் காற்று, அடையாளம் என்ற கூற்றுகள் இடம்பெறுகின்றன.
ஸ்கொட்லான்ட் மக்களின் ‘கேலிக் – Gaelic’ மொழி ஆங்கிலேய ஆதிக்கத்தால் அழிக்கப்பட்டது. Mikhail Gorbachev ஆட்சியில் சோவியத் முழுவதும் ரஷ்ய மொழி உத்தியோகபூர்வமாக அமுல்படுத்தப்பட்டது. கிழக்கு – மேற்கு பாகிஸ்தான் முழுவதற்கும் பொதுவான மொழியாக ஜின்னாவினால் உருது அமுலாக்கம் நிகழ்ந்தது. இவ்வாறான மொழி ஆதிக்கத் திணிப்புகள் தேசிய இனங்களிடையே உரிமைப் போராட்டங்களுக்கு வழிகோலியுள்ளன எனப்படுகிறது. இத்தகு ஆதிக்க வெறி இந்தியாவில் 1918இல் இந்தித் திணிப்பின் ஆரம்பமாக அமைந்தது எனும் கூற்றுடன் படம் கதைக்குள் நுழைகிறது.
உலகளாவிய மொழித்திணிப்பு அதிகாரங்கள் குறித்த பிரக்ஞை வெளிப்படுகிறது. நல்லது. ஆனால் இந்தியாவின் (தமிழகத்தின்) தெருக்கோடிக்குள் இலங்கைத் தீவு என்ற ஒரு நாட்டில் 1956 இல் கொண்டு வரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் தான் அங்கு தேசிய இன முரண்பாட்டுக்கான தொடக்கப்புள்ளிகளில் ஒன்று என்ற வரலாறு இவர்கள் அறியாததா? வன்முறைகள், உள்நாட்டுப்போர் எனவான 30 ஆண்டுகளுக்கு மேலான ஆயுத விடுதலைப் போராட்டத்திற்கும், இன்றுவரை தொடர்கின்ற சுயநிர்ணய உரிமை மறுப்பிற்கும் கால்கோலான நிகழ்வு அது.
திரைப்படத்தில் பேசப் படுகின்ற ஒரு கதைக்களத்திற்குரிய அறிமுக உரையாக வரக்கூடிய ‘மொழி ஒடுக்குதல்’ வரலாற்றில் ‘தனிச்சிங்களச் சட்டம்’ இலங்கையின் இன முரண்பாட்டுக்குரிய முதன்மைக் காரணிகளில் ஒன்று. தொடக்கப்புள்ளி என்பதை ஏதோவொரு வகையில் சொல்லியிருக்க வேண்டாமா? ஒற்றைவரியிற் தொட்டாவது சென்றிருக்கலாமே. அடிப்படையில் இந்தத் தவிர்ப்பு அல்லது விலக்கல் அரசியல் நேர்மையற்றது, வரலாற்று இருட்டடிப்பு, படைப்பு அறம் அற்றதும்கூட.
ஒரு வேளை திரைப்படத்தில் அந்தக்குறிப்பு இடம்பெற்று தணிக்கையில் நீக்கப்பட்டிருக்குமா? அல்லது இதனைச் சொல்வதற்குரிய மனமும் நேர்மையும் படைப்பாளியிடம் இல்லையா?
இந்தி எதிர்ப்பிற்கு எதிரான ஒரு படம் இந்தியத் தேசியத்திற்கு எதிரான படமாகவே ஆளும் தரப்பால் பார்க்கப்படுகின்றது. அத்தகைய பேசுபொருளை எடுத்துக்கொண்டவர்கள் இலங்கை – இந்திய உறவுக்கு அது பாதகமானது என்று தவிர்த்திருக்கிறார்களா.?
இந்தத் திரைப்படம் இந்தித் திணிப்பு வரலாற்று நிகழ்வின் பின்னணியில் புனைவு கலந்து உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம். சமகால இந்திய அரசியலையும் அதன் மொழித்திணிப்பு முனைப்புகளையும் பிரதிபலிக்கின்ற படம். மொழி உரிமை சார்ந்த பிரக்ஞையை (political consciousnes) ஏற்படுத்தக்கூடிய படம். குறிப்பாக இன்றைய சமூக ஊடக நுனிப்புல் இளைய சமூகத்திற்கு மொழிக்காக நிகழ்ந்த தியாகங்களைக் கடத்தக்கூடிய படம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தமிழ் மீது அயல் நாட்டில் நடந்த ஒரு ஒடுக்குமுறை வரலாற்றை ஒற்றை வரியிலேனும் சொல்ல முடியவில்லை என்பது படைப்பு நேர்மை மீதும் அரசியல் அறம் மீதும் கேள்வியெழுப்புகின்றது.
ஆரம்ப உரைச்சித்திரத்தில் மொழித் திணிப்பு தொடர்பாக பெரிய அரசியல், மனித உரிமை சார் பேசுபொருள் திறக்கப்படுகிறது. அப்படிப் பேசும்போது, தெற்காசிய வரலாற்றிலேயே மிகப் பெரிய மொழி ஒடுக்குமுறைக்கான எடுத்துக்காட்டு (ஈழத் தமிழ் மொழி ஒடுக்குமுறை) முற்றிலும் தவிர்க்கப்படுவது அரசியல் நோக்கம் கொண்டது.
மொழித் திணிப்பு, இன முரண்பாடு சார்ந்த அரசியல் நிகழ்வுகளுக்கான வுநஒவடிழழம என்ற முறையில் பெரிய எடுத்துக்காட்டு இலங்கை. அதைக் கண்டுகொள்ளால் விட்டமை அறியாமையிலும் சேர்க்க முடியாதது.
கலைச்சுதந்திரமா? இல்லை அரசியல் தேர்வா?
உலகம் முழுவதும் மொழி ஒடுக்குமுறை நடந்திருக்கிறது எனும் கூற்று ஒரு உலகளாவிய சட்டகத்தை (புடழடியட கசயஅiபெ) வரைகிறது. தமிழ் மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்ட இலங்கை மட்டும் தவிர்க்கப்படுகிறது. இது ஒரு திட்டமிட்ட (உழளெஉழைரள ழஅளைளழைn) தவிர்ப்பு என்றே கருத முடிகிறது.
![]()
