கிருபாதார பலி
- வாமினி – யேர்மனி
தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16
சிலுவை என்பது சாபத்தின் அடையாளம். பாவத்தினால் வந்தது சாபம். பாவத்தின் சம்பளம் மரணம். மரணத்தில் ஒன்று நரக அக்கினி கடல், மற்றையது நித்திய ஜீவன் (பரலோகம்) இரத்தம் சிந்துதலினால் தான் பாவம் கழுவப்படும். இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக தம்மை தாமே ஒப்புக்கொடுத்தார். இன்று பாவமென்றால் விபசாரம், களவு, பொய், இவை மட்டும் என்று நினைக்கின்றோம். இவற்றை விட பெரிய பாவங்கள் பெற்ற தாயையும் தகப்பனையும் அசட்டை பண்ணுவது. உன்னை போல் பிறரை நேசியாதிருப்பது, மேட்டிமையான கண், பொய் நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்தும் கை, துராலோசனையை பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடும் கால், அபத்தம் பேசும் பொய்சாட்சி, சகோதரர்களுக்குள்ளே விரோதத்தை உண்டு பண்ணுதல், விபச்சாரம், வேசித்தனம், அசுத்தம் காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லி சூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்க பேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் இப்படிப்பட்டவைகளை செய்கிறவர்கள் நித்திய ஜீவனை சுதந்தரிக்க முடியாது. நம்முடைய பாவங்களை இயேசு கிறிஸ்துவிடம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்க நம்மைச் சுதந்தரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் என்று பரிசுத்த கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தில் விசம் நிறைந்த முட்களினால் இயேசு கிறிஸ்துவின் தலையில் அழுத்தி அறைந்தார்கள். அப்போது சீறிய இரத்தம், ஆணிகள் அறைந்த சவுக்கினால் அடித்தார்கள். சரீரம் உழப்பட்ட நிலம் போல இயேசு கிறிஸ்துவின் சரீரத்தை கிழித்தார்கள். அப்போது சிறிப்பாய்ந்த இரத்தம் தரையில் மட்டுமல்ல அருகில் இருந்தவர்கள் மேலும் தெளித்தது. இவை மட்டுமா அற்புதங்களை அதிசயங்களை செய்த அவருடைய கைகள் கால்களில் வழிந்தோடிய இரத்தம் தரையில் சிந்துவது. கடலின் மேல் நடந்த இயேசு கிறிஸ்துவின் கால்கள் தரையில் நடக்க முடியாதபடிக்கு அவரை அடித்து சித்திரவதை சொல்லாலும் செயலாலும் கொடுமைப்படுத்தினர்.
பாரச்சிலுவையை தூக்கும்படி அடித்தனர். பாவம் செய்தவரை மன்னிக்கும் படி தரையில் எழுதினார், என் தரையில் விழுந்தார். நம்முடைய அக்கிரமங்களுக்காக பாவங்களுக்காக சர்வலோகத்தின் பாவங்களை நிவர்த்தி செய்யும்படி தானே தாகத்திற்கு ஜீவத்தண்ணீர் கொடுத்த இயேசுவுக்கு கசப்பு காடியை கொடுத்தனர் கொடூரர். தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியவர் கசப்புக் காடியை குடிப்பாரோ? மனதுருக்கத்தின் ஐஸ்வரியவான் தேவன் கொடூரர்களின் அறியாப் பிழைகளை மன்னியும் என்று மன்னித்தாரே. மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவர், சீஷர்களுக்கும் ஐந்நூறு பேருக்கு அதிகமானவர்களுக்கும் சமாதானத்தை கூறி காட்சியளித்து பரலோகம் ஏறிச் சென்றார். உலகத்தை இரட்சிக்க வந்தவரை வாழ்த்துகிறோம், வணங்குகிறோம், போற்றுகிறோம்.
![]()
