அறிவு: ஆற்றலின் நுட்பமான பயணம் -07

0
vm405

தீபா.ஸ்ரீதரன் தைவான்

அடுத்து, நவீன தொழில்நுட்ப வளர்ச்சியையும் நாம் இதே கோணத்தில் பார்க்கலாம். இயற்கையிலிருந்து ஆற்றலை அதிகத் திறனுடன் பிடித்து, மாற்றி, பயன்படுத்தும் திறன் தொடர்ந்து மேம்படுவது. உயிரியல் பரிணாமம் படிப்படியாக அதிகமான மற்றும் சிக்கலான ஆற்றல் ஓட்டங்களை நிர்வகிக்கக்கூடிய உயிரினங்களை உருவாக்கியிருந்தால், தொழில்நுட்ப பரிணாமம் அந்தச் செயல்முறையின் ஒரு நீட்டிப்பாகவே இருக்கிறது. அறிவியல் மற்றும் பொறியியல் மூலம் வடிவமைக்கப்பட்ட மனித அறிவு, இயற்கையில் கிடைக்கும் ஆற்றலை உயிரியல் அமைப்புகள் மட்டுமே செய்யக்கூடியதை விட மிகப் பெரிய அளவில், துல்லியமாகவும் நிலைத்தன்மையுடனும் பிடிக்கக்கூடிய கருவிகளை உருவாக்க உதவுகிறது.

இதற்கான தெளிவான உதாரணமாகப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்களின் வேகமான முன்னேற்றத்தை குறிப்பிடலாம். சூரிய ஒளியை நேரடியாக மின்சாரமாக மாற்றும் சூரிய பலகைகள் (ளழடயச pயநெடள) இயற்கையில் பரவலாக இருக்கும் ஒளி ஆற்றலை பயன்பாட்டுக்குரிய மின்சாரமாக மாற்றுகின்றன. காற்றாலை இயந்திரங்கள் (றiனெ வரசடிiநௌ) நகரும் காற்றின் இயக்க ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரத்தை உருவாக்குகின்றன. அதேபோல், நீர்மின் அணைகள் ஓடும் நீரின் ஈர்ப்பு விசை ஆற்றலை டர்பைன்கள் மூலம் மின்சாரமாக மாற்றுகின்றன. இந்த எல்லாத் தொழில்நுட்பங்களும் இயற்கையில் எப்போதும் இருந்த ஆற்றலை மனித சமூகங்கள் ஒழுங்குபடுத்திப் பயன்படுத்தக் கற்றுக்கொண்ட முறைகளாகும். இங்கு அறிவு என்பது இயற்கையின் ஆற்றல் ஓட்டங்களுக்கும் மனித செயல்பாடுகளுக்கும் இடையிலான ஒரு பாலமாகச் செயல்படுகிறது.

ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பங்களும் இந்தத் திறனை மேலும் விரிவுபடுத்துகின்றன. பேட்டரிகள், ஹைட்ரஜன் எரிபொருள் அமைப்புகள், மற்றும் மேம்பட்ட மின்வினியோக வலையமைப்புகள் (பசனை ளலளவநஅள) ஆகியவை ஓர் இடத்தில் அல்லது ஒரு நேரத்தில் பிடிக்கப்பட்ட ஆற்றலை மற்றொரு இடத்தில் அல்லது பின்னர்ப் பயன்படுத்த அனுமதிக்கின்றன. இத்தகைய சேமிப்பு முறைகள் இல்லையெனில், பிடிக்கப்பட்ட ஆற்றலின் ஒரு பெரிய பகுதி பயனின்றிச் சிதறி விடும். இந்த ஆற்றல் ஓட்டங்களை நிலைப்படுத்துவதன் மூலம், போக்குவரத்து வலையமைப்புகள், உலகளாவிய தொடர்பு அமைப்புகள், மற்றும் கணினி அடிப்படையிலான கட்டமைப்புகள் போன்ற சிக்கலான சமூக அமைப்புகளை நவீன தொழில்நுட்பம் தாங்கி நிற்கச் செய்கிறது. தரவுக்கூடங்கள் (னயவய உநவெநசள), செயற்கைக்கோள்கள், மற்றும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் கூடப் பெரும் அளவிலான மற்றும் நுணுக்கமாக நிர்வகிக்கப்படும் ஆற்றல் வழங்கல்களைச் சார்ந்தே இயங்குகின்றன.

இதே நேரத்தில், இந்த அனைத்து தொழில்நுட்ப செயல்முறைகளும் வெப்பவியலின் அடிப்படை விதிகளை குறிப்பாக என்ட்ரோபி விதியை கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். வெப்பவியலின் இரண்டாவது விதி, எந்த ஆற்றல் மாற்றத்திலும் பிரபஞ்சத்தின் மொத்த ஒழுங்கின்மை அல்லது என்ட்ரோபி அதிகரிக்கின்றது என்பதைக் கூறுகிறது. எந்த இயந்திரமும் ஆற்றலை முழுமையாகத் திறம்பட மாற்ற முடியாது; அதன் ஒரு பகுதி எப்போதும் வெப்பமாக வீணாகிறது. மிக முன்னேற்றமான சூரிய பலகைகளோ அல்லது காற்றாலை அமைப்புகளோ கூடக் கிடைக்கும் அனைத்து ஆற்றலையும் முழுமையாகப் பிடிக்க முடியாது. தொழில்நுட்பம் செய்யக்கூடியது என்னவென்றால், வீணாவதை குறைத்து ஆற்றல் ஓட்டங்களை ஒழுங்குபடுத்தித் தற்காலிகமான ஒழுங்கை உருவாக்குவது.

உயிரும் இதே விதத்தில் செயல்படுகிறது. உயிரினங்கள் தங்களின் உட்புற அமைப்பை மிகவும் ஒழுங்காக வைத்திருக்க, தொடர்ந்து ஆற்றலை உட்கொண்டு அதைச் சுற்றுப்புறத்திற்கு வெப்பமாக வெளியேற்றுகின்றன. மனித தொழில்நுட்பமும் இதே முறையைப் பெரிய அளவில் பின்பற்றுகிறது. நகரங்கள், தொழிற்துறைகள், மற்றும் டிஜிட்டல் வலையமைப்புகள் மிகவும் ஒழுங்கான அமைப்புகளாகத் தோன்றினாலும், அவை வெளிப்புற ஆற்றல் மூலங்களிலிருந்து தொடர்ந்து ஆற்றலைப் பெறுவதாலும் சுற்றுச்சூழலுக்குள் என்ட்ரோபியை வெளியிடுவதாலும் மட்டுமே நிலைத்து நிற்கின்றன. எனவே தொழில்நுட்ப முன்னேற்றம் என்ட்ரோபி விதியை மீறுவதில்லை. மாறாக, அதற்குள் செயல்பட்டு ஆற்றல் ஓட்டங்களைப் புத்திசாலித்தனமாக வழிநடத்துகிறது.

இந்தப் பார்வையில், நவீன தொழில்நுட்பம் அதிகமான ஆற்றலை நிர்வகிக்கும் திறன் நோக்கி நகரும் பரிணாமப் பாதையின் தொடர்ச்சியாகத் தெரிகிறது. அறிவியல் அறிவு மனிதர்களுக்குப் புதிய ஆற்றல் மூலங்களைக் கண்டறியவும், அவற்றைப் பிடிக்கக் கூடிய அமைப்புகளை வடிவமைக்கவும், அந்த ஆற்றலை அதிகச் சிக்கலான சமூக அமைப்புகளைத் தாங்கப் பயன்படுத்தவும் உதவுகிறது. பிரபஞ்சம் முழுவதும் என்ட்ரோபி அதிகரிக்கும் போதிலும், நுண்ணறிவு கொண்ட அமைப்புகள் சிறிய அளவில் ஒழுங்கை உருவாக்கி தற்காலிகமாக அந்தப் போக்கை எதிர்த்து நிற்கின்றன. அந்த வகையில், தொழில்நுட்பம் வெறும் வசதிக்கான கருவி மட்டுமல்ல. அது பிரபஞ்சத்தின் வரலாற்றில் உயிரும் பரிணாமமும் உருவாக்கிய அடிப்படை செயல்முறைகளின் தொடர்ச்சியான வெளிப்பாடாகும்.

இந்த நிலையில் பார்க்கும்போது, உயிரினங்களின் பரிணாமமும் மனித தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் ஒரே நேரத்தில் நகரும் இரண்டு இணைச் செயல்முறைகளாகக் கருதலாம். உயிரினங்கள் தங்களின் உடல் அமைப்புகள், உணர்வுகள் மற்றும் சமூக ஒத்துழைப்பின் மூலம் இயற்கையிலிருந்து ஆற்றலைப் பெறும் திறனை மெதுவாக மேம்படுத்திக் கொண்டிருக்கின்றன் அதே நேரத்தில் மனித சமூகம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் அந்த ஆற்றலைப் பிடித்துப் பயன்படுத்தும் புதிய வழிகளை உருவாக்குகிறது. இவ்விரண்டும் வெவ்வேறு துறைகளில் தோன்றினாலும், உண்மையில் அவை ஒன்றுக்கொன்று தாக்கத்தை ஏற்படுத்தும் பரிணாம இயக்கங்களாகவே செயல்படுகின்றன. உயிரியல் அமைப்புகளும் தொழில்நுட்ப அமைப்புகளும் சேர்ந்து, இயற்கையின் ஆற்றல் ஓட்டங்களை மேலும் ஆழமாகப் புரிந்து கொண்டு அவற்றை ஒழுங்குபடுத்தும் ஒரு பரந்த பரிணாம செயல்முறையின் பகுதிகளாகத் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றன.
…….தொடரும்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *