கரைந்தே போகிறதா!
- மாதவி யேர்மனி
வெளிநாட்டவர்களின் குடும்ப பாசப்பிணைப்பு எம்மை விடக் குறைவு என்று ஒருகாலத்தில் நினைத் திருந்தேன்.
காதலர்கள் தினத்திற்கு (“கரைந்தே போகிறதா!”) க்கு பூக்கொடுப்பதும், “Mother’s Day”இல் “குயவாநச’ள னுயல”-இல் வாழ்த்து தெரிவிப்பதும், நத்தார் பண்டிகைக்கு பிள்ளைகள் எங்கிருந்தாலும் ஓருமுறை வந்து அன்று மட்டும் பரிசு கொடுத்து, ஒரு நிமிடம் கட்டியணைத்து ஓடிப்போவதையும் பார்த்துப் பார்த்து, நம்மவர்கள் பாசத்தோடு ஒப்பிட்டு மனம் நெகிழ்ந்த காலம் அது.அப்போது அது மகிழ்ச்சியாகவே இருந்தது.
வெளிநாட்டவர்களின் நடைமுறை வாழ்க்கையைப் பார்த்து நக்கல் அடித்த இளமைக்காலம், மெல்ல மெல்ல எனக்குள்ளேயே கரைந்து போனது. எமது பிள்ளைகள் சிறுவயதாக இருந்தபோது, நானும் என் மனைவியும் குடுபமாக, மதம் கடந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடிய ஒரே பண்டிகை என்றால் அது நத்தார் பண்டிகைதான்.
துருக்கி, மொரோக்கோ போன்ற நாடுகளைச் சேர்ந்த, கிறிஸ்தவர்கள் அல்லாத பலர் என்னோடு வேலை செய்தார்கள். அவர்களில் சிலர் என்னைக் கிண்டலடிப்பார்கள்.
“Christmas பண்டிகை கிறிஸ்தவ மக்களுக்கு தானே? நாம் ஏன் கொண்டாட வேண்டும்? அது எமது மதத்திற்கு துரோகம் இல்லையா?” என்று கேட்பார்கள்.
அப்போது நான் சிரித்தபடியே கேட்டிருப்பேன்:
“அப்படியானால், வேலை இடத்தில் தந்த ‘Christmas’ காசு 1000€-ஐ ஏன் வாங்கினீர்கள்? அது துரோகம் இல்லையா?”
மெதுவாகச் சொன்னாலும், அது குத்தலாகச் சொல்லப்பட்ட காலம் அது. இன்று எமது இரு பிள்ளைகளும் திருமணம் செய்து, திக்குதிக்காக வாழ்கிறார்கள்.
ஆனால் அவர்கள் படித்த காலத்து “புநசஅயலெ” நண்பர்கள் இன்னும் எமது பிள்ளைகளோடு தொடர்பில் இருக்கிறார்கள். அந்த நண்பர்களின் குடும்ப பாசமும், கலாச்சாரமும் இன்றுவரை மாறவில்லை.
“Christmas” பண்டிகைக்கு மட்டும் பெற்றோரைச் சந்தித்து, பரிசுகளைப் பரிமாறிச் செல்வது தொடர்கிறது.
என் வீட்டின் முன் உள்ள கார் பார்க்கிங்கில், ஒவ்வொரு இல்லத்திற்கும் தனித்தனி இலக்கங்கள் உள்ளன. வழக்கமாக அனைவரும் தத்தமது இடங்களில் வாகனங்களை நிறுத்துவார்கள்.ஆனால் இன்று “பண்டிகை நாள்”ஒரு இலக்கத்திலும் ஒரு வாகனம்கூட இல்லை.
பிள்ளைகள் வருவார்கள் என்ற நம்பிக்கையில், பெற்றோர்கள் தங்கள் வாகனங்களைத் தெருவின் தூரத்தில் நிறுத்திவிட்டிருந்தார்கள். அடுப்பில் பாலை வைத்திட்டு பால் பொங்குகிறதா என்று அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கும் என் மனைவியைப் போல, எல்லா வீடுகளிலும் ஜன்னல்கள் அடிக்கடி திறக்கப்பட்டன.
இடையிடையே அயல் வீட்டுக்கு அவர்கள் பிள்ளைகள் வரும் வேளை, பால் உண்மையிலேயே அங்கு பொங்கியது.
ஒரு நாளும் கேளாத சிரிப்பொலிகள் அயல்வீட்டு வாசல்களில் ஒலித்தன. பிள்ளைகளை கட்டியணைத்து வீடுகளுக்குள் அழைத்துச் சென்றார்கள். வருடம் முழுவதும் காத்திருந்த பெற்றோரின் முகங்களில் பூரிப்பு பூத்துக் குலுங்கியது.
“Father’s day, Mother’s Day” என்று மட்டும் ஒரு நாள் வருபவர்கள் அது அவர்களுக்கும் பழகிப்போன வாழ்க்கை.
இன்று எமது பிள்ளைகள் வருவார்கள் என்று நம்பினோம். நத்தார் பண்டிகைக்காக அலல் அவர்களுக்கு “நேற லுநயச” வரை நீண்ட விடுமுறை.
நீண்ட நாட்களாக வராதவர்கள், இன்றாவது வருவார்கள் என்று ஆழ்மனம் சொல்ல, அகமகிழ்ந்து காத்திருந்தோம்.
மாலை ஐந்து மணி ஆனது.
பிள்ளைகள் வரவில்லை.
ஒரு தொடர்பும் இல்லை.
மனம் சோர்ந்திருந்த வேளையில் மணி ஒலித்தது.
வீட்டு மணி அல்ல, தொலைபேசி மணி.
இரு பிள்ளைகளும் வீடியோ கோலில் வந்தார்கள்.
“அப்பா, இந்த வருடமும் வர முடியல. உங்கடை மருமகள் வீட்டுக்காரர் பக்கம் ‘Christmas’ பாட்டி செய்தினம் போயிட்டோம்,” என்று மகன் சொன்னான்.
“அப்பா, அம்மாவைக் கூப்பிடுங்க,” என்றாள் மகள்.
நான் போனைச் சற்றே திருப்பி, அம்மாவின் முகத்தை காட்டினேன்.
“அம்மா கோவிக்காதீங்க. பிள்ளைகளுக்கு படிப்பு, ‘revision, end term’… நேரமே இல்லை. அவங்களை வகுப்புக்கும், ஜிம்முக்கும் அழைத்துச் செல்லவே நாள் போகுது.
நான்தானே கிழமைக்கு ஒருக்கா வீடியோக் கோலில் வாறேனே,” என்றாள்.
அண்ணன் கைகாட்டினான்.
“அம்மா, நானும் உரவ பண்றேன்.”
ஒரு செக்கன் நேரம்.மகன், மகள், பேரப்பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து, “Happy Christmas!” என்று உரத்த குரலில் சொல்லி வைத்தார்கள்.
அதே நேரம், அயல்வீட்டில் இன்னொரு மகன், மருமகள், பேரப்பிள்ளைகள் வந்து இறங்கியிருக்க வேண்டும்.
மீண்டும் சிரிப்பொலி
என் வீட்டு கதவிலும் எதிரொலித்தது.
ஆண்டுக்கு ஒருமுறை என்றாலும் வந்து போகும் அவர்கள் பிள்ளைகளும், அவர்களின் காத்திருப்பும், இப்போது எங்களுக்கு பெறுமதியாகவே தெரிந்தது.
என் பக்கத்து வீட்டாரைப் போல“Father’s day, Mother’s Day, “Christmas”
என்று ஏதோ ஒரு நாளுக்காவது பிள்ளைகள் வந்தாலே போதும் என்று மனம் ஏங்கியது.
பல நேரங்களில்,எமது பண்பாடும் கலாச்சாரமும்,நாம் வாழும் சூழலோடுமௌனமாகக் கரைந்துபோகவே செய்கின்றன.
![]()
