தாயக வீதிப் பாதுகாப்புத் திட்டத்தில் நோர்வேத் தமிழ் நிபுணர்ரூபன் சிவராஜா – நோர்வே

0
vm456

ஐரோப்பிய நாடுகளில் வீதிவிபத்துகளில் உயிரிழப்போர்
எண்ணிக்கை குறைந்த நாடாக நோர்வே விளங்குகின்றது.

தாயகத்தில் வீதிவிபத்துகளால் பெரும் உயிரிழப்புகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றன. இது பற்றிய செய்திகளை நாளாந்தம் கடக்கிறோம். போக்குவரத்துப் பாதுகாப்பு அக்கறைக்குறைவு, பாதுகாப்பு நடிவடிக்கைகளில் குறைபாடு, சீரான பயிற்சியும் அனுபவமும் அற்ற, சாலை விதிகளை மதிக்காத வாகன ஓட்டுனர்கள், சாலைகளின் கட்டுமானக் குறைபாடு எனவாக வீதிவிபத்துகளுக்கான பல்வேறு காரணிகள் உள்ளன.

உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்குரிய நோக்கோடு நோர்வேயில் உள்ளது போன்று தாயகத்தில் வீதிப் போக்குவரத்து பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் முன்னெடுப்பொன்று மேற்கொள்ளப்படுகிறது. நோர்வே அரச வீதித்திணைக்களத்தில் (வுhந ழேசறநபயைn Pரடிடiஉ சுழயனள யுனஅinளைவசயவழைnஃளுவயவநளெ எநபஎநளநn) வீதி விபத்து ஆய்வுப் பொறியியலராக 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற, பேர்கன் நகரில் வாழ்ந்துவரும் அலோசியஸ் சந்தியாப்பிள்ளை இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இத்திட்டம் பற்றி 03.05.2027 அன்று ஒஸ்லோவில் ஆர்வலர்களுடன் அலோசியஸ் உரையாடல் ஒன்றினை நடாத்தினார். அக்கூட்டத்தில் தாயகத்தில் தான் முன்னெடுக்கும் வீதிப்போக்குவரத்து பாதுகாப்புத் திட்டம் குறித்தும் அதன் தேவை மற்றும் செயற்திட்டத்தின் இன்றைய நகர்வு குறித்த தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

2025ஆம் ஆண்டில் இலங்கையில் 1870 உயிர்கள் வீதிவிபத்துகளால் பலியாகியுள்ளன. இது ஒரு நாளைக்கு சராசரியாக 7 முதல் 8 இறப்புகள் நிகழ்வதைக் காட்டுகிறது. கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை அலட்சியப்படுத்துவது, தவிர்க்கக்கூடிய இத்தகைய பேரழிவுகளுக்குக் காரணமாக அமைந்துள்ளன.

ஆசிய போக்குவரத்து கண்காணிப்பகத்தின் (யுளயைn வுசயnளிழசவ ழுடிளநசஎயவழசல) தகவற்படி, இலங்கையின் சாலைப் பாதுகாப்பு நிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வீதிவிபத்து மரணங்களில் அரைவாசிக்கு மேல் சிறுவர்கள் மற்றும் முதியவர்களே பலியாகின்றனர். இது வாகனங்களைப் பயன்படுத்தாத மற்றும் பிறரைச் சார்ந்திருக்கும் பாதசாரிகளின் பாதுகாப்பற்ற நிலையைக் காட்டுகிறது.

வீதிவிபத்துகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு ஆண்டுக்கு ஏறத்தாழ 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (புனுP) மூன்று வீதமாகும்.

முறையாகப் பராமரிக்கப்படாத வாகனங்கள் மற்றும் அபாயகரமான வீதிக்கட்டமைப்பு, சாரதிகள் அதிவேகமாகவும் கவனச்சிதறல்களுடனும் வாகனங்களை ஓட்டுதல், போக்குவரத்துச் சட்டங்களை அமுல்படுத்துவதில் உள்ள பலவீனம் மற்றும் போதிய விழிப்புணர்வு இன்மை போன்ற காரணங்களும் முன்வைக்கப்படுகின்றன.

ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து பல ஆண்டுகளாக வீதிவிபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்த நாடாக நோர்வே விளங்குகின்றது. நோர்வே எடுத்த வீதிப் போக்குவரத்து பாதுகாப்பு முயற்சிகளுக்கான அங்கீகாரமாக, நுரசழிநயn வுசயnளிழசவ ளுயகநவல ஊழரnஉடை (நுவுளுஊ) அமைப்பு நோர்வேக்கு ‘PஐN யுறயசன 2025’ விருதை வழங்கியுள்ளது. இந்த விருது, ஐரோப்பாவில் சாலை விபத்துகளையும் உயிரிழப்புகளையும் குறைப்பதில் மிகுந்த சாதனை செய்த நாட்டிற்கு வழங்கப்படுகிறது.

நோர்வே சிறந்து விளங்குவது தானாய் விளைந்த சாதாரணமாக நிகழவில்லை. வீதிவிபத்துகளைத் தவிர்ப்பதற்குரிய தெளிவான இலக்குகள்,தேசிய மட்டத்திலான நீண்டகால செயற் திட்டங்களின் விளைவாகும்.

நோர்வேயின் வீதிப் போக்குவரத்து பாதுகாப்பு,வாகன ஓட்டுனர் பயிற்சி, விபத்து ஆய்வுப் பொறிமுறைகளை முன்னுதாரணமாக் கொண்டு இச்செயற்திட்டத்தினை சந்தியாப்பிள்ளை முன்னெடுக்கிறார். தாயகத்தில் வடபகுதியில் வாகன ஓட்டுனர் பயிற்சி, ஒத்திகை ஓடுதளம், வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறார்.

முதற்கட்டமாக இவற்றுக்குரிய கட்டடத் தொகுதி உட்பட்ட வாளாகம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கான நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசின் வீதிப் போக்குவரத்து கட்டமைப்புகளுடனான ஒத்துழைப்பு பற்றிய உரையாடல்களும் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழர்கள், தாயகம் நோக்கிய பல திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் வீதிப் பாதுகாப்பு சார்ந்த இத்திட்டம் முன்னுதாரணமானது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *