யேர்மனியில் வெளிநாட்டவர்களுக்குஎதிரான கட்சியின் வளர்ச்சி!

0
vm309

  • வ.சிவராஜா யேர்மனி (ஆசிரியர் மண் சஞ்சிகை)

யேர்மனியின் மாநிலத் தேர்தல் முடிவுகள்…
யேர்மனியில் வலதுகாரிகட்சியின் பெருவெற்றி…

14.09.2025 ஞாயிற்றுக்கிழமை, ஜேர்மனியின் 16 மாநிலங்களில் ஒன்றான (NRW) நோத்றைன் வெஸ்பாளின் மாநிலத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் நடைபெற்றதில் ஆளுங்கட்சி தனது இருப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளது. என்றாலும், ஒரு குறிப்பிட்ட கட்சியான ( A&D) மக்களிடையே தொடர்ந்து ஆதரவு பெருகி வருவதையும் தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.

ஜேர்மனியின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணத்தில் North Rhine-Westphalin தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில் சேன்ஸலர் பிரெட்ரிக் மெர்ஸ் சார்ந்த Christian Democratic Union (CDU) 33.3 சதவிகித வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. விடயம் அதுவல்ல, புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதுதான் இந்த தேர்தலில் கவனிக்கத்தக்க விடயம். அதாவது, இந்த தேர்தலில் என்ன நடந்தாலும், அது ஆளும் அரசில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. அவ்வகையில், ஆளுங்கட்சி தனது இருப்பை தக்கவைத்துக்கொண்டுள்ளது உண்மைதான் என்றாலும், வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சிக்கு மக்களிடையே ஆதரவு கணிசமாக பெருகிவருகிறது என்பதையும் இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

இன்று அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ள அக்கட்சி, நடந்து முடிந்த மாகாணத் தேர்தலில் 14.5 சதவிகித வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது. ஆக, அக்கட்சிக்கு மக்களிடையே ஆதரவு பெருகிவரும் நிலையில், ஆளும் கூட்டணியிலுள்ள கட்சிகள் மக்கள் மனதில் இடம்பிடித்தாக வேண்டிய நிலையில் உள்ளதை மறுப்பதற்கில்லை.
அடுத்தது ஏனைய பிரதான கட்சிகளான SPDமற்றும் புசநநn கட்சிகளின் வாக்குவீதம் சரிவு கண்டுள்ளன இவை இரண்டும் 2ம் 3ம் நிலையிலிருந்து 3ம் 4ம் இடங்குளுக்குப் பின்தள்ளப்பட்டிருக்கின்றன. அதை ஆளுங்கட்சியினரும் நன்கு புரிந்துகொண்டுள்ளார்கள் என்பதும் தெரிகிறது. காரணம், North Rhine-Westphalia மாகாணத்தில் Minister-President பொறுப்பு வகிக்கும் Hendrik Wüst இந்த தேர்தல் முடிவுகள், நாம் இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும்கூட, ஓய்வெடுக்க முடியாது, தொடர்ந்து கடினமாக உழைத்தாகவேண்டும் என்பதையே காட்டுகின்றன என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தேர்தலில் 2ம் நிலைக்கு வந்துள்ள தீவிர வலதுசாரி A&Dகட்சியானது முற்றுமுழுதாக வெளிநாட்டவர்களுக்கு எதிரான கட்சியாகும். வெளிநாட்டவர்களின் குடியேற்றம், வேலைவாய்ப்பு, கல்வி, பொருளாதாரம் போன்ற விடயங்களில் இந்தக்கட்சியானது வெளிநாட்டவர்களுக்கு எதிரான கட்சியாகவே செயற்பட்டு வருகின்றது.

யேர்மனியில் இலங்கைத் தமிழர்கள் கூடுதலானோர் வாழும் மாநிலமும் இதுதான். ஆதலால் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல அனைந்து வெளிநாட்டவர்களின் மத்தியில் ஒரு வித வெறுப்பு தோன்றியிருக்கின்றது. எதிர்காலத்தில் எப்படிப்பட்ட மாற்றங்கள், எதிர்வினைகள் வந்துசேரும் என்று தெரியாத நிலையே இருந்து வருகின்றது. காலப்போக்கு நிலமைகளைப் பொறுத்திருந்து பார்ப்போம்..
NRW மாநிலத் தேர்தல் முடிவுகள்..
CDU: 34,6 Prozent (-0,3 Prozentpunkte im Vergleich zur Wahl 2020)

SPD: 21,9 Prozent (-2,4)

Grüne: 12,4 Prozent (-7,6)

AfD: 16 Prozent (+10,9)

Linke: 5,1 Prozent (+1,3)

FDP: 3,2 Prozent (-2,4)

Sonstige Parteien und Wählergruppen: 6,8 Prozent (-0,3)

Wahlbeteiligung: 58,5 Prozent

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *