தெளிவும் தெரிவும்
நெடுந்தீவு முகிலன்- யேர்மனி
சுயமரியாதை
தன்னம்பிக்கைக்கும் நம்பிக்கைக்கும்
மிக முக்கியமாக தேவைப்படுவது
சுயமரியாதை.
சுய புரிதல் என்பது நீங்கள் உங்களை
எப்படி நினைக்கிறீர்கள்.
அல்லது
உங்களை மற்றவர்களுக்கு எப்படி
காட்டிக் கொள்ள விரும்புகிறீர்கள்.
உங்கள் அடையாளத்தை
நீங்கள் நிலை நிறுத்த வேண்டும் என்றால்
உங்களை நீங்கள் சரியாக அளவிடவேண்டும்.
உதாரணத்துக்கு ஏதோ ஒன்று
உங்களுக்கு தேவைப்படும்
ஆனால் அதை அடைய முடியாது என்று
நீங்கள் பின்வாங்குவீர்கள்.
உங்களுக்கு பிடித்த விருப்பமானதையே
நீங்கள் இழந்து விடுகிறீர்கள் என்றால்…
இதற்கு காரணம் உங்களை நீங்கள்
தவறாக மதிப்பிடுகிறீர்கள்.
உங்களுக்கு உங்கள் மேல் சுய மரியாதை
இல்லாமல் நீங்கள் ஒதுங்கிப் போனால்
உங்கள் கவனம் திரும்பும் இலக்கு திசை மாறும்.
இந்த தோல்விக்கு முழு காரணமும்
பொறுப்பும் நீங்கள் உங்களை தரக்குறைவாக
கணக்கிட்டுவைத்திருந்ததுதான்.
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்
என்று நினைக்காமல்
நீங்கள் உங்களை மாற்றுங்கள்.
உங்கள் மாற்றம் மற்றவர்களையும்
மாற்றும்…!
ஏமாற்று ஆனால் இவர்களை அல்ல!
உனது அன்புக்காக எவர் ஏங்குகிறாரோ ..?
உன்னைப் பார்ப்பதற்காக எவர் காத்திருக்கிறாரோ ..?
உனது வார்த்தைகளை எவர் நம்புகிறாரோ ..?
உனது புன்னகையை எவர் எதிர்பார்க்கிறாரோ ..?
உன்னை எப்போதுமே யார் நேசிக்கிறாரோ ..?
உனது நினைவுகளை யார் பாதுகாக்கிறாரோ ..?
உனது பிரிவை யார் தாங்க மாட்டாரோ…?
நீ இல்லாமல் யார் வாழ மாட்டாரோ…?
இவர்களை ஒருபோதும் நீ ஏமாற்றி விடாதே..!
ஏனென்றால் இவர்களை இந்த நிலைக்கு
மாற்றி விட்டதே நீ தான் !
![]()
