யாழ்ப்பாணத்தில் தயாராகும் இறப்பர் காலணிகள்!
இவற்றை நாங்கள் பெரும் சாதனைகளாக பார்க்கவில்லை. எங்களுடைய பிரதேசத்தின் சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியாக நோக்குகிறோம் என்கின்றனர் இந்தத் தொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ள பெண்கள். இவ்வாறு சமூகத்தை மேம்படுத்தும் வேலை திட்டங்களை பிரதேசங்களுக்குள் கொண்டு வரும்போது அந்தப் பிரதேச வாசிகள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் தேவையற்ற விடயங்களில் இருந்து விலகிக் கொள்ளவும் வழிவகுக்கிறது.
நேர் கண்டவர்-ஞா.கவினி இலங்கை.
யாழ்ப்பாணத்தில் இறப்பர் பாதணிகளினை உருவாக்கி வருகின்றனர் சித்தங்கேணியில் இயங்கும் அந்திரான் ஜனசக்தி தோற்பொருள் உற்பத்தியாளர் விற்பனைக் கூட்டுறவுச் சங்கத்தினர். பெண்களுக்கான ஒரு தொழில் முயற்சியாகவே இந்த இறப்பர் பாதணிகள் உற்பத்தி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கூட்டுறவு அமைப்புகளைப் பலப்படுத்தும் திட்டங்களில் ஒன்றாக இது முன்னெடுக்கப்பட்டு,பெண்களின் வாழ்வாதாரத்தை அடிப்படை நோக்கமாகக் கொண்டு பாதணிகளின் உற்பத்திக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குதல், சந்தைப்படுத்தல் ஆலோசனைகளை வழங்குதல், மூலப்பொருட்களைக் கொள்வனவு செய்தல் போன்ற தேவைகளுக்கென ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் 3.45 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.
தென்னிலங்கையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றால் வட்டு. கிழக்கு மாதர் அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் 14 பெண்களுக்கு பாதணி உற்பத்தி தொடர்பான முழுமையான பயிற்சிகள் ஒருமாத காலமாக வழங்கப்பட்டது.
இதனையடுத்து கிராமத்து பெண்களால் ஆரம்பிக்கப்பட்ட உற்பத்திகள் இரட்டிப்பு வேகத்தில் சென்று கொண்டிருக் கின்றது என்பது மிகவும் மகிழ்ச்சியான விடயம்.
தற்போது மனதைக் கவரும் பலவித வண்ணங்களிலும்,பல அளவுகளிலும் உருவாக்கப்படும் இறப்பர்ப் பாதணிகளுக்கு ‘ஏஆர்பீ’ (யுசுP -யுவொசையn சுரடிடிநச Pசழனரஉவள) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவை மிகத்தரம் வாய்ந்த காலணிகளாக இருப்பதோடு சந்தையில் இவற்றுக்கான கேள்விகளும் அதிகமாக காணப்படுகிறது. சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை அணியக்கூடிய மிகப் பொருத்தமான காலணிகளை எமது பெண்கள் உற்பத்தி செய்து வழங்குவது என்பது நமது சமூகத்தின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் ஒரு மிகச்சிறந்த செயற்பாடாகவே காணப்படுகிறது. சந்தை வாய்ப்பு என்பது இவர்களுக்கு ஒரு சவாலான விடயமாக காணப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அரிதாகவே வடக்கில் உருவாக்கப்படுகின்ற பாதணிகளில் இவர்களுடையதும் ஒன்றாக இருக்கின்றது.
உள்ளூர் உற்பத்தியும் சமூக ஒற்றுமையும்
இவற்றை நாங்கள் பெரும் சாதனைகளாக பார்க்கவில்லை. எங்களுடைய பிரதேசத்தின் சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியாக நோக்குகிறோம் என்கின்றனர் இந்தத் தொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ள பெண்கள். இவ்வாறு சமூகத்தை மேம்படுத்தும் வேலை திட்டங்களை பிரதேசங்களுக்குள் கொண்டு வரும்போது அந்தப் பிரதேச வாசிகள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் தேவையற்ற விடயங்களில் இருந்து விலகிக் கொள்ளவும் வழிவகுக்கிறது.
எமது காலணிகளை உற்பத்தி செய்வதற்கு எமது கிராமத்தில் உள்ள சமூகமட்ட அமைப்புகள் கிராமம் மட்டுமே அமைப்புகள் என பலரும் மிகவும் உறுதுணையாக இருக்கின்றனர்.பெண்கள் ஒன்று சேர்ந்து இந்த தொழிலை செய்தாலும் எங்களுக்கு பக்க பலமாக எமது கிராமத்து மனிதர்கள் அனைவரும் இருப்பது நமக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய ஒரு விடயம் என்று உற்பத்தியாளர்கள் வட்டம் கூறுகின்றது.
இதுதான் எமது கனவு
உண்மையிலேயே எங்களுக்கு இதனை இன்னும் விருத்தி செய்து இன்னும் பலருக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற எண்ணமும், நமது உற்பத்தி பொருட்கள் நாடு எங்கிலும் விநியோகிக்கப்பட வேண்டும் என்கின்ற கனவும் இருக்கின்றது. நிச்சயமாக அது நிறைவேறும் என்று நம்புகிறோம். எங்களது கனவு மெய்ப்படும் அந்த நேரத்தில் எங்களது பாதணித் தொழில் கூடமானது மிகவும் வளர்ச்சி அடைந்திருக்கும். எமது பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு மிகவும் இலகுவான வழிகளை நாங்கள் கண்டுபிடித்திருப்போம் என்கின்றனர் பாதணி உற்பத்தியாளர்கள்.
நன்றி.தமிழர் பொருண்மியம்
![]()
