பெண்கள் தினத்தினை முன்னிட்டு ஒளிப்படக் கலைஞர்; கீதா இரவி அவர்கள்வெற்றிமணி பத்திரிகையின் கௌரவ ஆசிரியராக கௌரவிக்கப்படுகிறார்.
சர்வதேச மகளிர் தினமான பங்குனி 08 அன்று, ஆளுமை மிக்க பெண்களைக் கௌரவிக்கும் தனது நீண்டகால மரபைத் தொடர்வதில் வெற்றிமணி இதழ் பெருமிதம் கொள்கிறது. அந்த வகையில், இந்த ஆண்டு எமது பங்குனி இதழின் கௌரவ ஆசிரியராக, நோர்வேயில் வசிக்கும் ஈழத்தமிழ்ப் பெண்மணியும், சாதனைப் புகைப்படக் கலைஞருமான திருமதி. கீதா இரவி அவர்களைக் கௌரவிப்பதில் நாம் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம்.
மன உறுதியால் சிகரம் தொட்ட புகைப்படக் கலைஞர் திருமதி. கீதா இரவி அவர்கள். இளவயதிலேயே தனது நடக்கும் ஆற்றலை இழந்த போதிலும், அந்தச் சவாலைத் தனது சாதனைகளுக்குத் தடையாக அவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை. நோர்வேயின் கடும் குளிரையும், சவாலான நிலப்பரப்புகளையும் தனது மன உறுதியால் கடந்து, இயற்கையின் பேரழகைத் தனது கமராவிற்குள் சிறைப்பிடித்த அசாதாரணப் பெண்மணி இவர்.
புகைப்படக் கலை மீது கொண்ட தீராத பற்றுதலால், அவர் எடுத்த புகைப்படங்கள் வெறும் காட்சிகள் மட்டுமல்ல் அவை உயிர்ப்புள்ள கதைகள். அவரது கமராக்கண்கள் வழியாக : இயற்கை எழில்,உயிரினங்கள், மனித உணர்வுகள்: பலதரப்பட்ட கோணங்களில் மனித மனதின் ஆழமான உணர்வுகளைப் பதிவு செய்துள்ளார். நோர்வே நாட்டில் நடைபெற்ற பல்வேறு புகைப்படப் போட்டிகளில் பங்குபற்றி, பல விருதுகளையும் பரிசுகளையும் வென்று, புலம்பெயர் தேசத்தில் ஒரு தமிழ்ப் பெண்ணாகத் தனது முத்திரையைப் பதித்துள்ளார். கீதா இரவி அவர்களின் கலைப்பயணம், உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு, குறிப்பாகப் புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு ஒரு மிகப்பெரிய உந்துசக்தியாக அமையும் என்பதில் ஐயமில்லை.வாழ்த்துக்களுடன்,
மு.க.சு.சிவகுமாரன்
பிரதம ஆசிரியர் வெற்றிமணி பத்திரிகை, யேர்மனி.
![]()
