ஒளிப்படக் கலைஞர் கீதா இரவி
நிலவையும், வானத்து மீனையும், காற்றையும் நேர்ப்பட வைத்தாங்கே
– கவிதா லட்சுமி
நோர்வே, தொன்ஸ்பெர்க் (வுழளெடிநசப) நகரில் வசிப்பவரும், நம் சமூகத்தின் புகழ்பெற்ற ஒளிப்படக்கலைஞருமான கீதா ராசலிங்கம் அவர்கள், வுழளெடிநசப புகைப்பட மன்றத்தின் உறுப்பினர். நோர்வேஜியப் புகைப்பட நிறுவனங்களால் நடத்தப்பட்ட பல ஒளியோவியப் போட்டிகளில் சிறந்த ஒளிப்படக் கலைஞருக்கான பரிசுகளைத் தனதாக்கிக்கொண்டவர். பல ஒளிப்படக் கண்காட்சிகளில் கலந்துகொண்டு நோர்வே மக்களின் பாராட்டையும் பெற்றவர். ஓவியம், கவிதை போன்ற கலைகளில் ஈடுபாடு கொண்டவரெனினும், ஒளியோவியக் கலையைத் தனது வாழ்வின் மையமாக்கியவர். தன்னுலகின் அழகிய தருணங்களை ஒளியோவியங்களாக உறையச் செய்து கொண்டிருப்பவர். போலியோ நோயால் சிறுவயதிலேயே பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் கீதா ஒளிப்படக் கலை சார்ந்து தனக்கெனத் தனித்துவமானதோர் அணுகுமுறையை உருவாக்கியுள்ளார். ஒளிப்படத்திற்கான அகத் தூண்டுதலைப் பெறும்நோக்கில் பல பயணங்களை மேற்கொள்கிறார். (படக்குறிப்பு: ‘டுழஎந’ என்ற அழைக்கப்பட்ட அவ் ஒளியோவியம், போலவே ஏராளமான ஒளியோவியங்கள், கீதாவின் அர்ப்பணிப்பு மற்றும் படைப்பாற்றலுக்குச் சான்று பகர்கின்றது.)
ஒளியோவியத் துறையில் கீதாவினுடைய தொடக்கமும் ஈடுபாடும்…
இலங்கையில் ஓவிய ஆசிரியையாகப் பணியாற்றி வந்த வேளையில் நாட்டுச் சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வுகளில், நோர்வே மண்ணிற்கு வந்து சேர்ந்தவள் நான். நோர்வேயிலும் ஓவிய ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும் எனும் ஆவல் மட்டுமே என்னிடம் இருந்தது. அதற்கான முயற்சிகளும் நோர்வே மண்ணில் மேற்கொண்டேன். திருமணம், குழந்தைகள், எனது உடல்நிலை, வாழ்க்கைப் போராட்டங்கள் என்பவற்றால் ஆசிரியராக வேண்டும் என்ற விருப்பம் கைவிட்டுப் போனது. ஒரு காலத்தில் ஓவியம் வரைதலும் முற்றாகவே நின்று போனது.
மிகுந்த மனவுளைச்சல்களுடன் இருந்த காலங்கள் அவை. எனது குழந்தைகள் ஓரளவு வளர்ந்த பின், எனது 48 வயதில் ஒரு அண்ணாவின் ஊக்குவிப்பினால் ஒளியோவியக் கலைக்குள் ஈடுபடத் தொடங்கினேன். இவ் ஒளியோவியக் கலை என்னை உள்ளிழுத்துக்கொண்டது. இனி இதுதான் எனது நாட்களை கடத்திச் செல்லும் கருவி என்று புரிந்து கொண்டேன். நான் எடுக்கும் படங்களுக்கு, எதிர்பாராதவிதமாக நோர்வேஜிய சக கலைஞர்களிடமிருந்தும் சந்திக்கும் மனிதர்களிடம் இருந்தும் பாராட்டுகளும் ஊக்குவிப்புகளும் என்னை மேலும் ஊக்குவித்தன. வாழ்க்கைப் போராட்டங்களுக்கு நடுவில், நான் துடிப்புடனும், உயிர்ப்புடனும் வாழ இக்கலைதான் என்னை வழிநடத்துகிறது. இத்துறையில் சில படிகளேனும் முன்னேற்ற அதுவே வழி தந்திருக்கிறது.
நோர்வே நாட்டினராலும் அறியப்பட்ட ஒரு பெண்ணாக ஆனதன் காரணி…
ஒளிப்படத்துறை பற்றியும் அதன் அடிப்படை விடயங்கள் பற்றியும் தங்கள் அண்ணாவிடம் பல விடயங்களைக் கற்றுக்கொண்டேன். அவற்றை முயற்சி செய்து பார்க்கும் ஆர்வத்தில் அப்போது சித்தியிடம் இருந்த உயழெn ஒளிப் படக்கருவியை வாங்கிக் கொண்டு அதனோடு எனது சக்கரநாற்காலியில் சுற்றிக் கொண்டு திரிந்தேன். அப்படியான ஒரு நாள் வண்ணத்துப்பூச்சியை படம் எடுத்தபோது, ஒரு நோர்வேஜிய பெண்மணி அருகில் வந்து உங்களுக்கு புகைப்படத்துறையில் ஆர்வமா எனக் கேட்டுத் தனது கணவர் ஒரு காமிரா கிளப் அங்கத்தவர் என்று சொல்லி என்னையும் அதில் இணைத்துவிட்டார். அத்துடன் நோர்வேஜிய புகைப்படக் கலைஞர் டீதழசn துழயமiஅளழn என்பவரிடம் அடிப்படை வகுப்புகளுக்குச் சென்றேன். எனது கலைப் பயணம் இப்படியாகவே தொடங்கியது.
ஆட்டுக்குட்டிக்கு முத்தமிடும் சிறுவன், நடுகல்லில் தனித்திருக்கும் முதியவர் போன்ற படங்கள் உங்களுக்குச் சாத்தியமான தருணங்கள்…
எப்பொழுதும் பறவைகளைப் படம் பிடிப்பதற்காகவும் மேக்ரோ படங்கள் எடுப்பதற்காகவும் டெலிலென்ஸ் பொருத்தியபடியே தான் ஒளிப்படக்கருவியைக் கொண்டு திரிவேன்.
(படக்குறிப்பு: இந்தச் சிறுவனின் பெற்றோர் தொட்டியடி பிள்ளையார் கோவிலடியில் கடை வைத்திருக்கிறார்கள். சிறுவர் பாட சாலை முடிய அந்தக் கடையைச் சுற்றி விளையாடித் திரிவான். அந்தச் சிறுவனிடம் எத்தனையோ வகையான உணர்வுகளும், அசைவுகளும் இருக்கும். ஒருநாள் திடீரென ஆட்டுக் குட்டியை இழுத்தபடியே ஆலமர வேரடியில் இருந்து முத்தமிட்டான். அவன் கவனத்தை ஈர்க்காத வகையில் அவசரமாக ஒளிப்படம் எடுத்தேன்.)
(படக்குறிப்பு: நடுகல்லில் இருக்கும் முதியவர் நான் மருமகள்களுடன் உலாப்போகும் போது தளர்ந்து நடந்து சென்றவர் சற்று இளைப்பாற அமர்ந்தார். ஓரளவு தூரத்தில் இருந்து வநடந டநளெ ஆல் ஒரு க்ளிக்.)
ஒளிப்படங்களை மெருகூட்டும் கணினி தொழில் நுட்பப் பயன்பாடுகள்…
ஆரம்ப காலங்களில் கணினித் தொழில் நுட்பம் பெரிதாகப் பயன்படுத்துவதில்லை. ஒளிப்படத்துறைச் சங்கத்தில் இணைந்த பிறகு அங்கே சக கலைஞர்கள் அனைவரும் லைட் ரூம் பற்றி அறிமுகப்படுத்தினார்கள். அதன் பின் உபயோகப் படுத்துகிறேன். தேவையைப் பொறுத்துப் பாவனையின் அளவு கூடும் குறையும். கணினித் தொழில் நுட்பம் எனக்கு அவசியம் என்று சொல்ல மாட்டேன். அந்த வாய்ப்பு இல்லாத காலங்களில் கூட ஒளியோவியக் கலை சிறந்திருக்கிறது. இப்பொழுது அத்தகைய வாய்ப்புக் கிடைத்திருப்பதை தேவையைப் பொறுத்து உபயோகப்படுத்திக் கொள்கிறோம். ஒளிப்படத்துறையில் ஒரு முக்கிய பகுதியாக இப்போது கணினித் தொழில்நுட்பமும் இருக்கிறது. இங்கே எனக்குத் தெரிந்தளவில் புகழ் பெற்ற பல ஒளிப்படக்கலைஞர்கள் கணினித் தொழில்நுட்பம் பாவிக்கிறார்கள்.
ஒளிப்படங்களை மேலும் மெருகூட்ட முடியும் என்பதற்காகவே அவற்றை சுயற கடைந வடிவில் எடுக்கிறேன். தேவை ஏற்படின் சற்று வண்ணங்களின் அடர்த்தியைக் கூட்ட முடிகிறது. வெளிச்சம் குறைவான நேரங்களில் ஐளுழு கூட்டி எடுக்கும் படங்களில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க முடிகிறது. மிக அதிக ர்iபா டiபாவ குறைக்க முடிகிறது. வண்ணப் படங்களை கறுப்பு வெள்ளையாக மாற்ற நான் எதிர்பார்க்கும் வண்ணம் ஆக்க முடிகிறது. நான் ளவரனழை டiபாவ பாவித்துப் படங்கள் எடுத்தது இல்லை. சக்கர நாற்காலியில் இருந்து-கொண்டு இத்தகைய துணைக் கருவிகளை பாவிக்கும் தெம்பும் உடல்வசதியும் என்னிடம் இல்லை. அதனால் அதைப்பற்றிக் கற்றுக்கொள்ள எத்தனிக்கவில்லை. இயற்கை ஒளிதான் என் படங்களை தருகிறது. இயற்கை ஒளியோவியர் என்றே நான் என்னை நினைக்கிறேன்.
நோர்வே நாட்டில் பெற்ற விருதுகள் அது சார்ந்த எண்ணங்களும்…
நோர்வே தேசிய புகைப்படச் சங்கம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டு இருக்கிறேன். இரண்டு படங்களுக்கு மூன்றாவது இடம் கிடைத்தது. வெண்கலம் கிடைத்திருக்கிறது. மூன்று படங்களுக்கு ர்ழழெசயடிடந அநவெழைn கிடைத்து இருக்கிறது. அவை நோர்வேயில், தேசிய மட்டத்தில், வருடாந்த வெளியீடுகளில் அச்சாகியிருக்கின்றன. பல படங்களுக்கு, தேர்வுக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட சான்றிதழ்கள் கிடைத்து இருக்கின்றன. கடினமான பாதையில் பயணித்துப் பெற்றவை. ஆதலால், அங்கீகாரங்கள் வரும்போது மகிழ்ச்சியாக உணர்ந்திருக்கிறேன். அப்போதும் இதற்கு நாம் தகுதியாளா என்ற கேள்வியும், இன்னும் பெரியளவில் இந்தக் கலையை கற்றுணர வேண்டும் என்ற ஒரு உந்துதலும் மனதில் எழும்.இந்தக் கலை ஒரு பெருங்கடல். விருதுகள் மட்டும் திறமையை தீர்மானித்து விடாது. என்னைப் பொறுத்தவரை எனது கற்றலும் தேடலும் என்றுமே முற்றுப் பெறுவதில்லை.
நோர்வே நாட்டுக்கலைத்துறை எந்த வகையில் உதவுகிறது…
இந்த நாட்டில் சிறிது திறமை இருந்தாலும் பெரியளவில் ஊக்குவிப்பு கிடைக்கிறது. சக கலைஞர்கள் தமக்கு தெரிந்தவற்றைப் பகிர்ந்து கொள்கிறார்கள். தம்மாலான உதவிகளை மனமுவந்து வலிந்து செய்கிறார்கள். உடல் உபாதைகளால் சோர்ந்து போகும் போதெல்லாம் தைரியம் கொடுத்துச் செயற்பட வைக்கிறார்கள். ஒளிப்படச் சங்கத்தில் ஒவ்வொரு மாதமும் திறமை வாய்ந்த ஒளிப்படக் கலைஞர்களை கூப்பிட்டு அவர்கள் அனுபவங்கள், கலை நுட்பங்களைப் பகிரச் செய்கிறார்கள். ஆர்வத்தை மேலும் தூண்டும் வண்ணம் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. பனிக் காலத்தில் என்னால் வெளியே செல்ல முடியாது. நான்கு மாதங்கள் வீட்டு ஜன்னல் ஓரமாகவே அமர்ந்திருப்பேன். ‘நீங்கள் போகாவிட்டால் என்ன! பறவைகளை வீட்டுக்கு அழைத்தால் போகிறது’ எனக் கூறி ஒரு புகைப்பட நண்பர் அழகிய கிளைகள் சேர்த்து பறவைகளுக்கு உணவு வழங்குமிடம் ஒன்றை எனது தோட்டத்தில் வைத்துத் தந்தார். ஜன்னல் ஓரமாக சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே எடுத்த படங்களும் பல பரிசுகளைப் பெற்றிருக்கின்றன. நோர்வே அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் படம் எடுக்கும் ஆர்வத்தை மதித்துக் காடுமேடு செல்ல ஒரு பலமான மின் சக்கரவண்டி, பிறிதொரு மின் சக்கரவண்டியை ஏற்றிச் செல்ல பெரிய வாகனம் (ஏறு உயசயஎநடடந நஒவசய டழபெ) ஒன்றையும் வழங்கி இருக்கிறது. யார் தயவும் இல்லாமல் என்னை இயங்க வைத்தவை இந்த வாகனங்கள்.
நோர்வே நாட்டிலுள்ள தமிழ் சமூகத்தில் புகைப்படக் கலை துறைக்கான வரவேற்பு…
நோர்வேயில் நான் வாழும் இடத்தில் தமிழ் மக்கள் குறைவாக உள்ளனர். நாடளவில் இசை, நடனத்துக்கு உள்ள வரவேற்பு அளவுக்கு ஓவியம், புகைப்படக்கலைக்கு ஆதரவு இல்லை எனத் தோன்றுகிறது. நான் நடத்திய கண்காட்சிக்கு ஒரே ஒரு தமிழர் மட்டுமே வந்தது வருத்தமளித்தது.ஆனால் நோர்வே மக்கள் ஆர்வமாக வந்து பாராட்டியும், சிலர் என் ஒளியோவியங்களை வாங்கியும் சென்றனர். எங்கள் சமூகம் பெரும்பாலும் தமிழ்த் திரையுலகைச் சார்ந்த கலைகளையே அதிகம் கொண்டாடுகிறது என்ற உணர்வு உள்ளது.
இந்தச் சமூகத்திற்கு நீங்கள் சொல்ல விரும்பும் விடயம்…
நம்மவர்களில் பல திறமையான புகைப்படக் கலைஞர்கள் உள்ளனர்; சிலர் அறியப்பட்டவர்களாகவும், பலர் அறியப்படாதவர்களாகவும் இருக்கிறார்கள். நாமே சிறந்தவர்கள் என்ற எண்ணத்தை விடுத்து, அனைவரும் இணைந்து தரமான புகைப்படக் கண்காட்சிகளை நடத்த வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கும் இந்தக் கலையில் ஆர்வம் உருவாக்கி, உள்ளூர் ஒளிப்படச் சங்கங்களில் இணைந்து பெரியோரும் இளையோரும் சேர்ந்து கற்றுக்கொள்ளலாம்; கலைக்கு வயது வரம்பில்லை. இன்றைய ஒளிப்படக் கருவிகள் பயன்படுத்த எளிதானவை. இயற்கையை நேசிப்போருக்கு இது ஒரு வரப்பிரசாதம். நமது கண்கள் காணும் உலகம் அழகானது; ஆனால் கேமரா கண்கள் காட்டும் உலகம் இன்னும் அதிசயமானது. அதை அனுபவிக்கக் கற்றால் அதன் உண்மையான இன்பம் புரியும்.
எழுந்து நடக்க முடியாத நிலையிலும் இத்தகைய புகைப்படங்களை எடுக்கும் ஆற்றல்…
அநேகமான படங்கள் மின்சக்கரநாற்காலியின் உதவியுடன் எடுப்பேன். எப்பொழுதும் ஒரு பாய் கொண்டு திரிவேன். நிலமட்டக்கோணத்தில் எடுக்கும் வாய்ப்புக் கிடைத்தால் தரையில் படுத்துக்கொண்டும் எடுப்பேன். கீழே சமாளித்து இருந்து விடலாம் ஆனால் மீண்டும் எழுந்து நாற்காலியில் அமர்வது மிகவும் கடினம். எத்தனையோ தடவைகள் விழுந்து கை விரல்கள் மடங்கி வலிகள் அனுபவித்திருக்கிறேன். சில விரல்களில் வலிகள் அப்படியே தங்கிவிட்டன. கால்கள், கைகள் ஒத்துழைக்காவிட்டாலும் அதை சவாலாக ஏற்றுக் கிடைத்த படங்கள் மனநிறைவு தந்திருக்கின்றன.
வீட்டு ஜன்னல் ஊடாக கிளைகளை மாற்றி வைத்து மாறி வரும் காலநிலை களில் படம் எடுத்து இருக்கிறேன். வாகனத்துக்குள் இருந்தும் எடுத்திருக்கிறேன். ஓயாமல் மணிக்கணக்காக காத்திருந்து படங்கள் எடுத்திருக்கிறேன். வெளியே தங்கி வாகனத்திலேயே உறங்கி, எழும்பி மாலை காலைக் காட்சிகளை எடுத்திருக்கிறேன்.
மூன்றரைக் கிலோ பாரம் எனது சக்திக்கு மீறியது. சக்கர நாற்காலியில் இருந்து ஸ்டாண்ட் பொருத்தி எடுப்பது கடினம். அதனால் கைகளையே பாவிக்க வேண்டிய கட்டாயம். இப்பொழுது கைகள் முற்றாகப் பலமிழந்து போயின. இப்போது இலகுவான உபகரணங்கள் வாங்கித் தொடர்கிறேன். கலை மேற் காதலும் ரசனையும் விடா முயற்சியும் இருந்தால் ஓரளவு தரமான படங்களை எடுக்க முடியும். மற்றவர்கள் போல் விரும்பிய கோணங்களில் எடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைப்பதில்லை. அத்தகைய தருணத்தில் என் இயலாமை வருத்தும். ஆயினும் முடிந்தளவு நல்ல படங்களை எடுக்க முயற்சி செய்கிறேன். இந்தக் கலையானது உடல், மன உபாதைகளிலிருந்து என்னை ஆற்றுப்படுத்துகிறது. அதனால் முடியும் வரை படைப்புகள் தொடரும். நலிவடைந்து செல்லும் உடல்நிலையால் மேலும் கடினமாக உணர்கிறேன். கஷ்டங்களின் மத்தியில் எடுத்தவை ஆதலால் ஒவ்வொரு படமும் எனக்குப் பெறுமதியானவை.
புகை படத்துறை சார்ந்து மேலும் சாதிக்கும் எண்ணம்…
இனி வருங்காலங்களில் சாதித்தல் சாத்தியமா தெரியவில்லை. கொஞ்சம் கைகளின் பாவனை குறைந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். குறைந்த நேரத்தில் நிறைவான காட்சிகள் எடுக்க முயற்சிப்பேன். இயற்கையுடனான எனது பயணம் இறுதி வரை தொடரும்.
காதல்
‘யுமநசளஎயnநெவ’ நீரேரிப் பயணத்தில், காதலில் இணையவிருந்த ஒரு ஜோடி நீலத்தட்டான் பூச்சிகளை பொன்னிறப் பின்னணியைக் கொடுக்கக்கூடிய ஒரு ‘டீரவவநசஉரி ஃ ளுஅøசடிடழஅளவ’ மலர்ச்செடியினை தட்டான்பூச்சிகளின் பின் ஒரு பொன்னிற வண்ணமாகக் கொண்டு ‘டீரவவநசஉரி’ மலரை நோக்கி வளையும் தருணம்வரை கீதா பொறுமையாகக் காத்திருந்தார். தட்டான் பூச்சிகள் வளைந்த புற்கதிரின் மீது இறங்கும் தருணம் வந்ததும், தான் கற்பனை செய்ததற்கு அமைய அக் காட்சியைப் படம்பிடித்தார். நன்றி: மகாஜனா 79 ‘வளர்” சஞ்சகை-12
கீதா ராசலிங்கம் அவர்களுடைய ஒளி ஓவிய உலகைப் பார்வையிட :
hவவிள:ஃஃறறற.பழழபடந.உழஅஃளநயசஉh?ஙஸ்ரீhவவிள:ஃஃறறற.iளெவயபசயஅ.உழஅஃபநநவா67
![]()
