பொன்னும் மணியுமாக “புதினம் ராஜகோபால்”

0
vm412


– வெற்றிமணி மு.க.சு.சிவகுமாரன்

புதினம் நு.மு. ராஜகோபால் அவர்கள் தாயகத்திலும் இங்கிலாந்திலும் தமிழ்ப் பத்திரிகைகளை வெளியிட்டு வரும் முழுநேரப் பத்திரிகையாளராவார். அந்நிய நாட்டில் பல தமிழ் இதழ்களை நீண்டகாலம் தொடர்ந்து நடத்தி சாதனை புரிந்துள்ளார். அவரது இதழ்கள் மொழியின் வெளிப்பாட்டை மட்டுமன்றி இன அடையாளத்தையும் அரசியல், கலை, இலக்கிய உணர்வுகளையும் உயிர்ப்புடன் வெளிப்படுத்தியுள்ளன.

“பாமா ராஜகோபால்”, “ஈழகேசரி ராஜகோபால்”, “புதினம் ராஜகோபால்” எனப் பல பெயர்களில் அறியப்படும் இவர், யாழ்ப்பாண “ஈழநாடு” நாளிதழில் 12 ஆண்டுகள் உதவி ஆசிரியராகவும், கொழும்பு “தினகரன்” நாளிதழில் 8 ஆண்டுகள் துணை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அக்காலத்தில் பெண்கள் மீதான இராணுவ அத்துமீறல்களை எழுதியதால் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில், குடும்பத்துடன் கொழும்பு வழியாக லண்டனில் அகதியாகத் தஞ்சம் புகுந்தார்.
லண்டனில் “தமிழன்” இதழ் மூலம் ஆசிரியர் வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் “ஈழகேசரி” இதழையும் அதன் பின் “புதினம்” பத்திரிகையையும் ஆரம்பித்தார். “புதினம்” இலவச இதழாக சுமார் 30 ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்து பெரும் சாதனை படைத்துள்ளது. இது லண்டன் கலை, இலக்கிய உலகிற்கும் கலைஞர்களுக்கும் முக்கிய ஆதரவாக இருந்தது. மேலும் பல நூல்களையும் வெளியிட்டுள்ளார்.அவரது முன்னேற்றத்திற்கு துணைவியார் ராகினி ராஜகோபால் அவர்களின் பங்களிப்பு முக்கியமானது. பிரபல பரதநாட்டிய ஆசிரியை ஆன இவர், “நாட்டியாலயா” நிறுவனத்தை மகளுடன் இணைந்து நடத்தி வருகிறார். 14.03.2026 அன்று லண்டனில் நடைபெற்ற ளுசுளு தமிழ் வானொலி 7 வது ஆண்டு விழாவில் சாதனையாளர் விருது பெற்றதுடன், அதே மேடையில் நடன ஆசிரியை ராகினி ராஜகோபால் அவர்களது மாணிவிகள் இவர்களின் திருமண பொன்விழாவை இன்ப அதிர்ச்சி கொடுத்துக் கொண்டாடினர்.

திருமண வாழ்வில் பொன்விழாவையும்; ஊடக வாழ்வில் மணிவிழாவையும் கொண்டாடும் இத்தம்பதியினரை வெற்றிமணி மனமார வாழ்த்துகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *