யேர்மன் ,எசன் தமிழ் கலாச்சார மன்றம்.தமிழ் பாடசாலையின்38 வது ,வருடாந்த தமிழ்த் திறன் போட்டி நிகழ்வு.
பொன்.புத்திசிகாமணி,யேர்மனி.
யேர்மனியில் எசன் (நுளளநn) தமிழ் பாடசாலையின் மேற்படி நிகழ்வு.22.02.26 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தலைவர் திரு சிவஅருள் சின்னத்தம்பி அவர்களின் முன்னுரையோடும்,மாணவர்களின் தமிழ்மொழி வாழ்த்து,பாடசாலை கீதம் இவற்றின் இசைகளோடும் ஆரம்பமாகியது. புலம்பெயர் தேசத்தில் பிறந்த தமிழ் பிள்ளைகளுக்கு தாய்மொழிக்கல்வியை ஊட்டி வளர்ப்பதற்கு ,யேர்மனியில் பல நகரங்களில் மொழி மீது அக்கறை உள்ளவர்களால், தமிழ் பாடசாலைகள் தோற்றம் பெற்றன.
தோன்றியவை எல்லாமும் சிறப்பாக இயங்கி வருகின்றனவா என்றால் இல்லையென்றே பதில் வரும். ஆனால் எசன் தமிழ்ப் பாடசாலை ஆரம்பித்த நாளில் இருந்து இன்றுவரை சிறப்பாக இயங்கி வருகிறது. பல நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு தமிழ் கல்லவியை ஊட்டி புகழடைந்திருக்கிறது. இந்தப் பாடசாலையில் கல்விகற்ற மாணவர்களே ஆசிரியர்களாகி சேவை செய்தும் வருகிறார்கள். திரு திருமதி வேலாயுதம் ,ஈஸ்வரிதம்பதிகளால் உருவாக்கப்பட்டதே இந்தப் பாடசாலை இன்று அந்தத் தம்பதிகள் இடம் பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து வந்தாலும்,தொடர்ந்து செயலாற்றுவதற்கு அந்தப்பாடசாலையை பெற்றோர்களிடமே கையளித்திருந்தார்கள்.
தலைவர் திரு சிவஅருள் அவர்கள் பொறுப்பேற்று இருபது வருடங்கள் சிறப்பாக செயலாற்றி வருகிறார்.இவரோடு சேர்ந்த நிர்வாகத்தினர் மிகச்சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள்.கல்வி கற்பிக்கின்ற ஆசிரிய ஆசிரியர்கள்.அர்ப்பணிப்போடு செயல்படுகிறார்கள். பெற்றோர்கள் சகல விதத்திலும் ஒத்துழைப்பை வழங்குகிறார்கள்.
இந்தப் பாடசாலையில் கல்வி கற்ற மூன்றாவது தலைமுறை இப்போது தமிழ் படிக்கிறார்கள்.பார்க்கவே சந்தோசமாக இருக்கிறது.
தமிழ்த் திறன் போட்டிகளில் நடுவர்களாகக் கடமையாற்றுகிற பொதுநல நோக்குடையோர் பல வருடங்களாக பல நூறு கிலோமீற்றர் பிரயாணம் செய்து வந்து இந்திகழ்வில் கலந்து கொள்கிறார்கள். சிறப்பான அவர்களின் வாழ்த்துரைகளால் அந்தப் பாடசாலையே பூரித்து நிற்கிறது. அந்த மழலைகளோடு பழகி பிரிய மனமின்றி பிரிந்து வருகிறோம்.எனவும் அடுத்த வருடத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.எனவும் தங்கள் உரைகளில் எடுத்துரைத்தார்கள். திரு திருமதி சிவராசா,திரு அம்பலவன்புவனேந்திரன்.திரு ரவி மாஸ்ரர்,திரு சபேசன், திரு திருமதி இந்து தெய்வேந்திரன், திருமதி கலா மகேந்திரன்,திரு திருமதி அமலா கபிலன்.திரு திருமதி பொன்.புத்திசிகாமணி தம்பதிகள்.ஆகியோர் இவ்வருடத் தின் நடுவர்களாக கலந்து சிறப்பித்திருந்தார்கள். இந்தப் பாடசாலையின் வளர்ச்சி வருடாவருடம் பிரமிக்கத்தக்க வகையில் சென்று கொண்டிருக்கிறது.இது ஒரு தரமான தமிழ்பாடசாலை என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்காது.
மாணவர்களின் தெளிவான உச்சரிப்பு,பேச்சு வன்மை அருமை.ஒவ்வொரு பிரிவும் எம்மை வியக்க வைத்தன.என,நடுவர்கள் தங்கள் வாழ்த்துரையில் புகழாரம் சூட்டினார்கள்.வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.அதனை நடுவர்களே வழங்கினார்கள். நடுவர்களும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப் பட்டார்கள்.சிற்றுண்டிகளுடன்,தரமான மதிய உணவும் வழங்கப்பட்டது. என்னோடு சேர்த்து பல நடுவர்கள் முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக கலந்து கொள்கிறார்கள் என்பது சிறப்பு.
![]()
