“இப்போதே இறந்துவிடு” டயகோரஸ்!

0
2

-மாதவி, யேர்மனி

கடந்த 2026 ஏப்ரல் இரண்டாம் திகதி, கிரேக்க தேசத்தின் எழில் கொஞ்சும் தீவான ரோட்ஸ் (Rhodes) மண்ணில் எனது கால்கள் பதிந்தன. கிரீக் நாட்டில் ஒரு புதிய தீவைப் பார்க்கும் பரவசம் ஒருபுறம், அந்தத் தீவின் தொன்மைச் சிறப்புகளைத் தரிசிக்கும் ஆவல் மறுபுறம் என மனதுக்குள் ஆயிரம் எண்ண ஓட்டங்கள்.

நான் சுhழனநள விமானநிலையத்தில் வந்து இறங்கினேன். விமான நிலையத்தில் பெயர் “னுயைபழசயள”. அதன் அர்த்தம் அப்போது எனக்குப் பிடிபடவில்லை. எமது நாடாக இருந்திருந்தால், நிச்சயம் ஏதோவொரு அரசியல்வாதியின் பெயராகத்தான் இருந்திருக்கும் என மனதுக்குள் ஒரு மெல்லிய நகைப்பு ஓடியது. ஆனால், இங்கே பெயர்கள் வெறும் பெயர்களாக மட்டும் எம்மோடு தங்கிவிடுவதில்லை அவை ஒரு பெரும் சரித்திரத்தைச் சுமந்து நிற்கின்றன என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

விமான நிலையத்திலிருந்து நான் தங்கியிருக்கும் விடுதியை நோக்கிப் பேருந்து நகர்ந்தது. நேரம் மாலை ஐந்து மணி இருக்கும். ஒரு பெரிய வட்டச் சந்திப்பை (சுழரனெயடிழரவ) அடைந்தபோது, பேருந்து தனது வேகத்தைக் குறைத்து நிதானமாகத் திரும்பியது. அப்போதுதான் அந்தக் காட்சி என் கண்ணில் பட்டது – தெருவின் மத்தியில் ஒரு பிரமாண்டமான சிலை!

பேருந்து எனது விடுதியை அடைந்தபோது எனக்குள் ஒரு சின்ன மகிழ்ச்சி. காரணம், அந்தச் சிற்பம் இருந்த இடத்திலிருந்து வெறும் மூன்று நிமிடப் பயணத்திலேயே எனது விடுதி அமைந்திருந்தது. மறுநாள் காலை விடியும் வரை என்னால் காத்திருக்க முடியவில்லை. பொழுது புலர்ந்ததும் அந்தச் சிற்பத்தைத் தரிசிக்க ஓடினேன். எனது ஓட்டத்தைப் பார்த்தவர்கள், “அட, இந்த வயதிலும் இந்தக் கிழவன் தனது உடல் ஆரோக்கியத்தில் எவ்வளவு அக்கறையாகக் கடற்கரையோரம் ஓடுகிறான் பாருங்கள்!” என்று எண்ணியிருப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல ஒரு காலத்தில் நாய் துரத்தினால் மட்டுமே ஓடிய இந்த உடம்பு, இன்று அந்தச் சிலையின் பின்னே ஒளிந்திருக்கும் இரகசியத்தைத் தேடி ஓடிக்கொண்டிருந்தது.

சிலையின் பின்புறத்தை அடைந்தபோது, ஒரு முதியவரை இருவர் தோளில் சுமந்து நிற்பது போலத் தெரிந்தது. ஒரு கதைப் புத்தகத்தின் முடிவைத் தெரிந்துகொள்ளப் பக்கங்களை ஆவலோடு புரட்டும் வாசகனைப் போல, அந்தப் பெரிய வட்டச் சாலையை அரைவட்டமாக ஓடிக் கடந்து நின்று, நிமிர்ந்து பார்த்தேன். அங்கே இரண்டு இளைஞர்கள், ஆடையற்ற நிலையில் ஒரு முதியவரைத் தோளில் சுமந்து நின்றார்கள். அந்த முதியவர் மட்டும் ஆடை அணிந்திருந்தார். ஒரு தந்தைக்கும் மகன்களுக்கும் இடையிலான ஏதோ ஒரு உணர்வுப்பூர்வமான பிணைப்பை அந்தச் சிற்பம் பறைசாற்றியது.

எனக்கு அருகே இருவர் நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவர் என்னைப் பார்த்து, “உங்களுக்கு இந்தச் சிற்பத்தின் வரலாறு தெரியுமா?” என்று கேட்டார். தொடர்ந்து அவர் சொன்னார், “நான் அருகில் உள்ளவருக்கு இதன் சரித்திரத்தைச் சொன்னேன், அதைக் கேட்டுத்தான் இவர் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு நிற்கிறார்.”எனக்கு அந்தச் சிற்பத்தின் கதை தெரியுமா என்று அவர் மீண்டும் கேட்டபோது, சொல்லுங்கள்!” என்று ஆவலோடு சொன்னேன்.

அவரும் எனது ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, அந்தச் சிற்பத்தின் பின்னால் இருக்கும் வீரமிக்க, அதேவேளை நெகிழ்ச்சியான சரித்திரத்தைச் சொல்லத் தொடங்கினார். அவர் சொல்லச் சொல்ல, அந்தச் சம்பவம் ஏதோ நேற்று நடந்தது போலவும், காலங்கள் கடந்தும் அந்தச் சிலை தன்னுள் ஒரு பெரும் பாசத்தைச் சுமந்து நிற்பது போலவும் எனக்குத் தோன்றியது. அந்தச் சரித்திரத்தின் ஆழம் என் மனதை வருடியது. பண்டைய கிரீஸ் நாட்டின் ரோட்ஸ் (சுhழனநள) தீவைச் சேர்ந்த டயகோரஸ் (னுயைபழசயள), வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற ஒரு குத்துச்சண்டை வீரர் ஆவார். இவர் கி.மு. 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். டயகோரஸ் ஒரு ஒலிம்பிக் வெற்றியாளர் மட்டுமல்ல, அவர் நேர்மையான விளையாட்டு வீரராகவும் மதிக்கப்பட்டார். அவர் குத்துச்சண்டையில் எவ்வித தந்திரங்களும் செய்யாமல், நேருக்கு நேராக மோதி வெற்றி பெறுபவர் என்று புகழப்பட்டார்.

இந்தச் சிலை ஒரு குறிப்பிட்ட நெகிழ்ச்சியான சம்பவத்தைச் சித்தரிக்கிறது. கி.மு. 448-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில், டயகோரஸின் இரு மகன்களான டாமகெடோஸ் (னுயஅயபநவழள) மற்றும் அகுசிலாவோஸ் (யுமரளடையழள) ஆகிய இருவரும் வெவ்வேறு தற்காப்புக் கலைப் போட்டிகளில் வெற்றி பெற்று தங்கம் வென்றனர். வெற்றி பெற்ற உற்சாகத்தில், அந்த இரு மகன்களும் தங்கள் வயதான தந்தை டயகோரஸைத் தங்களது தோள்களில் சுமந்து மைதானத்தை வலம் வந்தனர். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் மலர்களைத் தூவி ஆரவாரம் செய்தனர்.

“இப்போதே இறந்துவிடு டயகோரஸ்!”
அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு ரசிகர் உணர்ச்சிவசப்பட்டு, “டயகோரஸ், இப்போதே இறந்துவிடு! ஏனெனில் இதைவிட மகிழ்ச்சியான ஒரு தருணம் உன் வாழ்க்கையில் இனி கிடைக்கப்போவதில்லை. நீ கடவுளாக முடியாது, ஆனால் மனிதனாக அடையும் உச்சகட்ட மகிழ்ச்சி இதுதான்!” என்று கத்தினார்.

அடுத்த சில நிமிடங்களில், தன் மகன்களின் வெற்றிக்களிப்பில்,அவர்களின் தோள்களிலேயே டயகோரஸ் அமைதியாக உயிர் துறந்தார் என்று வரலாறு கூறுகிறது. ஒரு தந்தை தன் பிள்ளைகளின் வெற்றியைக் கண்டு அடையும் உச்சகட்ட மகிழ்ச்சியின் அடையாளமாக இந்தச் சிலை இன்றும் ரோட்ஸ் தீவில் நிமிர்ந்து நிற்கிறது.சிற்பத்தில் நடுவில் இருப்பவர் தந்தை டயகோரஸ் தோளில் சுமப்பவர்கள் அவரது மகன்கள். நினைவுச் சின்னம்: கிரீஸ் நாட்டின் ரோட்ஸ் தீவில் உள்ளது, சர்வதேச விமான நிலையத்திற்கு இவருடைய நினைவாக ‘டயகோரஸ் சர்வதேச விமான நிலையம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.தற்போதான் புரிந்தது நான் வந்து இறங்கிய விமான நிலையத்தின் பெயரும், அந்தப்பெயரின் மகத்துவமும். இந்தக் கதை, “ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அடையக்கூடிய மிகப்பெரிய பெருமை, தன் பிள்ளைகள் தன்னை விடப் புகழ் பெறுவதைக் காண்பதே” என்ற உயரிய கருத்தை உலகுக்கு இன்றும் உரக்கச் சொல்கிறது.

பி. குறிப்பு.
இந்த அற்புதமான சிலையில் இரு மகன்களது சிலைகள் ஏன் நிர்வாண மாக செதுக்கப்பட்டு உள்ளது? என்ற ஒரு கேள்வி எல்லோருக்கும் எழுவது நியாயமே.அந்த நிர்வாணச் சிற்பங்கள் கிரேக்க நாட்டின் சிற்பக்கலையில் முக்கிய இடம் வகிக்கின்றன.ஆடைகள் ஒருவரின் அந்தஸ்தையும், செல்வத்தையும் குறிக்கின்றன. ஆனால் நிர்வாண நிலையில் இருக்கும்போது அனைவரும் சமம் என்ற கருத்து கிரேக்க மக்களிடையே இருந்தது. இது அவர்களின் ஆரம்பகால ஜனநாயகக் கொள்கைகளின் பிரதிபலிப்பாகவும் பார்க்கப்பட்டது. அதுமட்டுமன்றி, கிரேக்கர்களுக்கு நிர்வாணம் என்பது அவமானமாகப் பார்க்கப்படவில்லை. மாறாக, அது ஒரு வீரனின் அல்லது வெற்றியாளரின் பெருமையாகக் கருதப்பட்டது. ஒரு மனிதனின் உடல் வலிமை, கட்டுக்கோப்பு மற்றும் தைரியத்தை வெளிப்படுத்த ஆடைகள் தடையாக இருக்கும் என அவர்கள் கருதினர்.கிரேக்க நாட்டவர் மட்டுமல்ல எமது ஆலயங்களிலும் இதுபோன்ற ஆடைகள் அற்ற முறையில் கோவில் சிற்பங்கள் பல அமைந்துள்ளன. அவையும் பல ஆழமான பொருள்களை தன்னகத்தே கொண்டே உள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *