ஜேர்மனி எசன் நகர் நயினை நாகம்மாள் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா:பக்திப் பரவசத்தில் மூழ்கிய அடியார் பெருமக்கள்!
ஜஎசன், ஜேர்மனிஸ
ஈழத்துத் திருத்தலங்களில் முதன்மை பெற்ற நயினாதீவு நாகபூசணி அன்னையின் அருளாட்சி, ஜேர்மனி தேசத்தின் எசன் (நுளளநn) நகரில் நயினை நாகம்மாள் எனும் திருநாமத்தோடு பொலிந்து வருகின்றது. இத்தலத்தின் மகா கும்பாபிஷேகம் எனப்படும் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா, கடந்த 01.04.2026 அன்று மிக விமரிசையாகவும் பக்திப் பரவசத்துடனும் இடம்பெற்றது.
மூன்று நாள் வைபவங்கள்:
ஆகம விதிகளுக்கு அமைய, மூன்று நாட்களாக இடம்பெற்ற இந்தத் திருக்குடமுழுக்கு விழாவில்,அன்னை நாகம்மாளின் அருளாற்றலை விக்கிரகங்களில் நிலைநிறுத்தும் பொருட்டு விசேட பூசைகள், திரவிய அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. ஆலய முன்றலில் நாதஸ்வர மேள வாத்தியங்கள் முழங்கிட, அன்னையின் புகழ்பாடும் பக்திப் பாடல்களுடன், பெருவிழாக்கண்டது.
குருமார்களின் அருளாசி இந்த வரலாற்றுப் பெருவிழாவினை, பிரதிஷ்டா பூஷணம் சிவஸ்ரீ ஜெயந்திநாதக் குருக்கள் அவர்கள் தலைமையேற்று நடாத்தினார். அவருடன் இணைந்து சிவஸ்ரீ சாமிநாதக் குருக்கள், சிவஸ்ரீ நாகேந்திரன் குருக்கள் ஆகியோர் கிரியைகளை செவ்வனே நிறைவேற்றி, கும்பாபிஷேக நிகழ்வைச் சிறப்பித்தனர்.
அன்னையின் தரிசனம்
சூரிய கோடிப் பிரகாசமாக, முகத்துடன் கருணை மழை பொழியும் கண்களுடன் காட்சியளித்த அன்னையைத் தரிசிக்க ஜேர்மனியின் பல பாகங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான அடியார்கள் திரண்டிருந்தனர். “அன்னையைத் தரிசித்த மாத்திரத்தில் கோடி புண்ணியம் கிட்டியது” எனப் பக்தர்கள் மனமுருகத் தெரிவித்தனர்.
“பெற்றதால் அன்னை பெறும் உயிரனைத்தும்
பேணலால் அன்னை”
என்ற ஆன்றோர் வாக்கிற்கிணங்க, சகல உயிர்களையும் காத்து நிற்கும் அன்னையின் இத்திருவிழா இனிதே நிறைவுற்றது. இந்தத் தர்ம காரியம் தடையின்றி நடைபெறப் பல்வேறு வழிகளிலும் உடல், பொருள், ஆவி தந்து உதவிய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும், தொண்டர்களுக்கும் ஆலய அறங்காவலர்கள் சார்பில் நயினை விஜயன் அவர்கள் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
![]()
