வெளியே புன்னகை அரசி உள்ளே கண்ணீருக்கு அடிமை

0
42

யேர்மனியில் நெடுந்தீவு முகிலனின் ‘வெளியே புன்னகை அரசி
உள்ளே கண்ணீருக்கு அடிமை” என்னும் கவிதை நூல், வெளியீட்டுவிழா

பன்னாட்டு புலம் பெயர் தமிழ் எழுத்தாளர் ஓன்றியத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நெடுந்தீவு முகிலனின் வெளியே புன்னகை அரசி உள்ளே கண்ணீருக்கு அடிமை என்னும் கவிதை நூல், வெளியீட்டுவிழா கடந்த 10.03.2019 யேர்மனியில் டோட்மூண்ட் நகரில், அமைந்துள்ள தமிழர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு எழுத்தாளர் ஏலையா க.முருகதாசன் அவர்களின் தலைமை தாங்கினார்.


விழாவின் பிரதமவிருந்தினராக வெற்றிமணி சிவத்தமிழ் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கலாநிதி மு.க.சு சிவகுமாரன் அவர்களும், சிறப்புவிருந்தினராக கீத்தாராணி பரமானந்தன் அவர்களும், கௌரவிருந்தினரர்களாக, மண்; சஞ்சிகை ஆசிரியர். திரு.வ.சிவராஜா, அகரம் சஞ்சிகை ஆசிரியர் திரு.த. இரவீந்திரன், மற்றும் தமிழ்ரைம்ஸ் பத்திரிகை பிரதம ஆசிரியர் செ.தவா அவர்களும் கலந்து சிறப்பித்தனர். வரவேற்புரை மிதிலா (பன்னாட்டு புலம் பெயர் தமிழ் எழுத்தாளர் ஓன்றிய உறுப்பினர்) அவர்களும், ஆசியுரையை எழுத்தாளர் நகுலாசிவநாதன். அவர்களும் வழங்கினர். வெளியீட்டுரையை எழுத்தாளர் வி.சபேசனும், ஆய்வுரை யினை எழுத்தாளர் திருமதி. சந்திர கௌரி சிவபாலனும் வழங்கவுள்ளனர். நூலின் முதல் பிரதியினை ஆசியா சமுத்திரம் உரிமையாளர் இராசையா இரகுநாதன் பெற்றுக் கொண்டார்.


நூல் வெளியிட்டிற்கு பெரும்திரளாக படைப்பாளிகள் வாசகர்கள் வந்து வாழ்த்தி மகிழ்ந்தது, நெடுந்தீவு முகிலனின் இலகு தமிழ் வடிவத்திற்கு கிடைத்த வெற்றி என்று கொள்ளலாம். கலைவிளக்கு திரு சு.பாக்கியநாதன் அவர்களது நன்றி யுரையுடன் விழா இனிது நிறைவுற்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *