இரவும் பகலும் இரவல் காதல்

0
72

காதலிக்கக்கூட உன்னிடம் சொந்தச் வார்த்தைகள் இல்லையா? தமிழுக்கு அத்தனை பஞ்சமா? இந்த நிலையில் எப்படிக் காதல் சொந்தக்காலில் நிற்கும்.
யாரோ யாருக்கு சொன்னது எல்லாம் , எனக்கும் உனக்கும் என்று ஆகிவிடுமா?

ஒரு சொல் போதும். அது உன்னுடையதாக இருந்தால், உயிர் உள்ளவரை கரையாது.
தமிழை பயன்பாட்டு மொழியாகப் பாவியுங்கள். எழுத்தாளர்களும், கவிஞர்களும் மட்டும்தான் இன்று தமிழ் எழுதலாம் என்று எண்ணாதீர்கள். நமக்கு இன்று வெறும் 4 பால்பெட்டி 2 தேங்காய், வெங்காயம், என்று” வெறுமனமே கடைப் பொருட்கள் வாங்க பட்டியல் எழுதுவதோடு தமிழ் நின்றுவிட்டது. அதனையும் முழுவதுமாக தமிழில்;தான் எழுதுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

கற்றவர்கள், கல்லாதவர்கள், அனைவருக்குமான தாய் மொழி தமிழ். அன்று கல்வியறிவு குறைந்த ஒரு தாய்கூட தன் பிள்ளைக்கு எழுதும் கடிதம் எத்தனை சுகமானது. அந்தக் கையெழுத்தை வாசிக்கும்போது தாய் மடியில் படுக்கும் சுகம் வரும். எழுத்தில் வார்த்தைக்கு வார்த்தைக்கு உன்னை ராசா! ராசா! என்றும், இராசாத்தி இராசாத்தி என்றும் அரியணையில் ஏற்றிவைத்துவிட்டு தான் மட்டும் ஓலைப்பாய் ஓன்றில் படுத்துறங்கும் காட்சி கண்ணில் தெரிகிறது அல்லவா!. நீ எழுதிய ஒரு கடிதத்தை பத்துதரம் அல்ல உன்னினைவு வரும்போது எல்லாம் படித்து மகிழும். உன் எழுத்தில் நீ எழுத மறந்தவற்றையும், மறைத்தவற்றையும். உன் கையெழுத்தைவைத்தே கண்டுபிடிக்கும் ஆற்றல் அன்னைக்கு இருக்கும்.

எனவே நீங்கள் சொந்தமாக எழுதுங்கள். உங்களைப்பிடித்தவர்களுக்கும் உங்களுக்குப் பிடித்தவர்களுக்கும் அது நிச்சயம்; பிடிக்கும்.
வட்சப்பில் காலைவணக்கம் எழுதுகின்றீர்களா. முதலில் சொந்தமாக ஒருவரியாதல் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.அதனை அனுப்புங்கள்.
யாரோ அனுப்பியதை நீங்களும் வாசிக்காமல் அதனையே உடன் பிறருக்கும் அனுப்பிவிடாதீர்கள். ஆண்டவன் இத்தனைகோடி மனிதர்களைப்படைத்து எத்தனைகோடி முகங்களைவைத்தான். நல்லவேளை அவனும் ஒன்றையே எல் லோருக்கும் forward பண்ணாமல் விட்டுவிட்டான்.
உங்கள் கைத்தொலைபேசியில் தமிழ் எழுத்து இல்லையா கவலையை விடுங்கள். சாப்பிட இருந்தால் முதல் சாப்பாட்டை படம் எடுத்து கடவுளுக்கு அனுப்புவதுபோல் யாவருக்கும் அனுப்புவோம். ஆலயத்தில் அரோகரா என்று இருகரம் கூப்பிவணங் கமுடியாமல் கரத்துள் கைத்தொiபேசியைப் பொத்திவைப்போம் அல்லது. ஆண்டவனுக்கே படம் காட்டுவோம்.

எனவே முடியாது தெரியாது என்று சொல்லமுடியாது. உங்களுக்கு என்று சிலவாசகங்களை நீங்களே ஒரு காகிதத்தில் எழுதிக்கொள்ளுங்கள் அதனைப் படம் எடுங்கள் பின்பு அனுப்புங்கள். அதனை வாசிப்பவர் உங்கள் அன்iனாக இருக்கலாம் தந்தையாக இருக்கலாம் ஏன் காதலன், காதலியாகக்கூட இருக்கலாம். அவர்கள் அதில் காணும் சுகம் சும்மா டமைந போடுவதுபோல் இல்லை அது. உலகிலேயே அதிகம் good morning போடுவது இந்தியர்கள்தானாம். இந்தியாவிலேயே அதிகம் போடுவது தமிழன்தானாம். இதனை இங்கிலாந்து ஒரு ஆய்வில் சொல்லியுள்ளதாக ஒரு கருத்து உள்ளது. இங்கிலாந்து மக்கள் பெருமகிழ்வுகொண்டு இருப்பார்கள். காரணம் தமிழர்கள் எல்லோரும் தாம்பேசும் ஆங்கிலமொழியில் good morning என்று எழுதியதற்காக.

ஒரு தாய்கூட தன் வயிற்றில் பிறந்த எல்லோருக்கும் ஒரே உணவைத் தினமும் சமைத்துக் கொடுப்பதில்லை. இன்று அவனுக்குபிடிக்கும் என்று புட்டு அவித்தேன், நாளை சின்னவனுக்கு பிடிக்கும் என்று தோசை சுடுவேன், மூத்தவளுக்கு இனிப்புத் தான் விருப்பம் என்று பாலப்பம் சுடுவேன் என்று சொல்வதை நீங்கள் கேட்க வில்லையா?
தாயும் தாய்மொழியும் ஒன்றுதான். விருப்பம் இல்லை என்றால் திணிப்புக்கு இடமில்லை. தமிழுக்கா பஞ்சம் விரும்பியவர்களுக்கு விரும்பியதை சொந்தமாகக் கொடுங்கள். (அம்மா மகனுக்கு தோசை விருப்பம் என்றால் அவள்தான் சுட்டுக்கொடுப்பாள். ஏன் என்றால் மகனுக்கு அம்மா சுட்டால்தான் தோசை)

ஒவ்வொரு காலையும் சிறப்பாக விடியட்டும், முடிந்தால் சொந்தங்களுக்கு சொந்தமாக ஒரு வரி எழுதுங்கள். இன்னும் ஒருவிடையம் ஒரு 20 வயது இளைஞன் சொன்னான் இன்று ‘தன்னை எத்தனைபேருக்குத் தெரியும் என்பதைவைத்தே தன் அறிவை எடைபோட்டுக்; கொள் கிறார்கள் ” என்று. இந்ததெரியும் என்பதற்கும், அறிவுக்கும் என்ன சம்மந்தம் என்று புரியவில்லை என்றான். எவ்வளவு உண்மையான வார்த்தை. ஒரு விஞ்ஞானியோ, ஒரு ஞானியோ, முகம்காட்டுவது இல்லை. ஆனால் அவர்களை பலர் அறிந்து இருக்கிறார்கள். அந்த அறிதல் அறிவால் ஞானத்தால் அவர்கள் குணத்தால் வந்தது. உங்கள் நல்லெண்ணங்களால் உங்கள் முகங்களைக்காட்டுங்கள். முகத்திற்கு அழகு தருவதும் உங்கள் நல் எண்ணங்கள்தான். பிறருடைய எண்ணங்கள் அல்ல.

— சிவப்பரியன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *