உணர்வலை 5
துன்பத்தை வெல்லும் வழி
இடும்பைக்கு இடும்பை படுப்பர்
கௌசி.சிவபாலன் யேர்மனி
உணர்வெல்லாம் உயிர், உயிர் எனத் துடிக்கும் காலம் ஓயப் போவதில்லை. கருவில் சுமந்து, உடலை வளர்த்து பக்குவமாய் உருவாக்கிய குழந்தை மண்ணில் விழுந்து துளித் துளியாய் உலகை உள்வாங்கி, உருப்பெற்று, நடமாடத் தொடங்கிய பின், அது காணும் உலகத்தின் இன்னல்களுடன் போராடத் தொடங்குகின்றது. அன்பு எங்கே? பாசம் எங்கே? மனிதம் எங்கே? எல்லாம் போலி. தேவை கருதியே மனிதர் மனிதர்களைத் தேடுவதும் தேவையில்லை என்றால் ஒதுக்குவதும், குறை கூறுவதும், தமது தேவை நிறைவேற்றப்படவில்லையென்றால் கொன்று குவிப்பதும், தண்டிப்பதும் என்று உலக வாழ்க்கையின் கொடுமைக்குள் வாழ்ந்தே முடிக்க வேண்டும் என்னும் நியதி. பூமிப்பந்தில் உலகநாடுகளிடையே நடக்கும் போராட்டங்களை உள்வாங்க விரிகிறது உணர்வலைகளின் வரிகள்.
வாழ்க்கை என்பது பிறப்பு முதல் இறப்பு வரை நீளும் ஒரு நீண்ட நடைபாதை. அந்த நடைபாதை மலர்களால் மட்டும் நிரம்பியதல்ல. முள்ளுகளும் கற்களும் களிமண்ணும் கலந்து அமைந்தது. அதனால் தான் மனித வாழ்வு ஒரு நிரந்தரப் போராட்டம் எனப் பல தத்துவஞானிகளும் இலக்கியப் பேராசிரியர்களும் ஒருமித்த கருத்து கூறுகின்றனர்.
“இடுக்கண் வருங்கால் நகுக” என திருவள்ளுவர் மனிதனின் வாழ்வில் இடுக்கண் தவிர்க்க முடியாதது என்பதை உணர்த்துகிறார். துன்பம் வந்தபோது துவண்டு விடாமல், அதனைச் சிரித்தே எதிர்கொள்ள வேண்டும் என்கிறார். இதனையே ராஜபார்ட் இரங்கதுரை என்ற திரைப்படத்துக்கு “துன்பம் வரும் போது சிரிங்க என்று சொல்லி வச்சார் வள்ளுவரு சரிங்க“ என்று கவியரசர் கண்ணதாசன் எழுதினார். இது வெறும் ஒழுக்கவியல் கருத்தல்ல. இது வாழ்வின் நிஜ நிலையை ஒப்புக் கொள்ளும் ஒரு ஞானம்.
பிறந்த குழந்தை அழுவதிலிருந்து தொடங்குகிறது வாழ்வின் முதல் போராட்டம். நடக்க கற்றுக்கொள்வதும் ஒரு போராட்டம்;. கல்வி கற்கவும், வேலை தேடவும், குடும்பம் நடத்தவும் அனைத்தும் போராட்டங்களே.
“உழைப்பதே உயர்வு தரும்” என்ற சுப்பிரமணிய பாரதி வாழ்வை ஒரு வீரப் பயணமாகக் கண்டார்.
“நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை,நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறி…”
இந்த வரிகளில் வாழ்க்கை போராட்டமாக இருந்தாலும், மன உறுதியே மனிதனை உயர்த்தும் என்கிறார். போராடாதவன் வாழவில்லை. போராடி வென்றவன் தான் மனிதன். புத்தபிரான் கூறிய நான்கு அரிய சத்தியங்களில் முதலாம் சத்தியம் “துக்கம் உண்டு” என்பதே. வாழ்க்கை இயல்பாகவே துன்பமுடையது. ஆனால் அதற்குக் காரணம் ஆசை என்றும், அதனை வெல்ல வழி உள்ளதென்றும் அவர் உணர்த்தினார். அதேபோல் விவேகானந்தர்
“யுசளைநஇ யறயமந யனெ ளவழி ழெவ வடைட வாந பழயட ளை சநயஉhநன.” என்றார். அவரது பார்வையில், வாழ்க்கை ஒரு சோதனைத் தளம். மனிதனின் ஆற்றலை வெளிக்கொணரும் கருவியே போராட்டம்.
சோதனைகள் மனிதனை உடைக்க அல்ல உருக்கி வடிக்க தான் என்னும் மேற்கத்திய தத்துவஞானி குசநைனசiஉh Nநைவணளஉhந கூறியுள்ள “வுhயவ றாiஉh னழநள ழெவ மடைட ரள அயமநள ரள ளவசழபெநச.” என்பது வாழ்க்கைப் போராட்டத்தின் உண்மையை வெளிப்படுத்தும் தத்துவ வாக்கியமாகும். ஒரு விதை மண்ணில் புதையாமல் மரமாகாது. இருள் அனுபவிக்காமல் விடியலை உணர முடியாது. ஆறு தடைகளைச் சந்திக்காமல் கடலாக முடியாது. வாழ்க்கை என்ற ஆறு, கற்களைக் கடந்து, தடைகளைத் தாண்டி, வளைந்து நெளிந்து, இறுதியில் கடலோடு கலக்கிறது. அதனால் தான் “துன்பம் எனும் தீயிலே துயரம் எனும் தங்கம் உருகும்” அதாவது போராட்டம் மனிதனை சுத்திகரிக்கிறது என்று ஒரு கவிஞன் எழுதினான். மழையில்லா நிலம் பசுமையில்லாதது போல, சோதனையில்லா மனம் வலிமையற்றது. போராட்டமில்லா வாழ்க்கை நிலைநிறுத்தமில்லாதது.
அதனால் பிறப்பில் இருந்தே வாழ்க்கை முழுவதும் போராட்டம் என்ற உண்மையை உணர்ந்தவனுக்கு தோல்வி என்பது முடிவு அல்ல. அது ஒரு புதிய தொடக்கம். துன்பத்தின் பயணம் மட்டும் அல்ல. அது வளர்ச்சியின் நடைபாதை. அது சுய கண்டுபிடிப்பின் யாத்திரை என்று அறிந்து கொள்வான்.
எந்த ஊரும் எங்களுடையதே. எல்லோரும் எங்கள் உறவினரே. நல்லதும் கெட்டதும் பிறர் தருவது அல்ல. அவை நம்முடைய செயல்களாலும் விதியாலும் வரும். இறப்பு புதியதல்ல. வாழ்வு என்றும் நிலைத்ததல்ல. அதனால், துன்பத்தில் துவண்டு விடுவது ஞானமன்று. இந்த உலகில் யாருடன் பகை கொள்ள வேண்டும்? என்று பாடும் கணியன் பூங்குன்றனார் பாடலானது சங்க கால மனிதனின் உலக சகோதரத்துவக் கருத்தை வெளிப்படுத்துகிறது. இது மனிதநேயம், சமத்துவம், நிலையின்மை பற்றிய ஆழ்ந்த தத்துவத்தை கூறும் சிறந்த சங்கப் பாடலாகக் கருதப்படுகிறது.
சங்க இலக்கியம் வாழ்க்கையை இனிமையான கனவாக அல்ல, நிலையற்ற உண்மையாகக் காண்கிறது. பிறப்பு, இறப்பு என்ற வட்டத்தில் மனிதன் அனுபவிக்கும் சோதனைகளே அவனின் ஆளுமையை உருவாக்குகின்றன. சங்க காலப் புலவர்கள் வாழ்க்கையைப் போராட்டமாகவே கண்டனர். இயற்கையுடன் போராடு. வறுமையுடன் போராடு. பகைவருடன் போராடு. உள்ளத்தின் துன்பத்துடன் போராடு. அந்தப் போராட்டம் அழிவுக்காக அல்ல. மரியாதையுடன் வாழ்வதற்காக. போராட்டம் என்பது வாழ்க்கையின் சாபமல்ல. அது மனிதன் பெருமையை உருவாக்கும் சோதனை. வாழ்க்கை முழுவதும் போராட்டம். ஆனால் அந்தப் போராட்டம் மனிதனை நிலைத்த நற்பெயருக்கு அழைத்துச் செல்லும் ஒரு வீரப் பயணம். திருவள்ளுவர் சொல்லும் ஒழுக்கம், பாரதி சொல்லும் வீரியம், புத்தர் சொல்லும் ஞானம், விவேகானந்தர் சொல்லும் உறுதி இவை அனைத்தும் ஒரே உண்மையை உணர்த்துகின்றன. போராட்டமே மனிதனை முழுமைப்படுத்தும். அதனால் வாழ்க்கையைப் போராட்டமாக அன்றி ஒரு வாய்ப்பாகக் காண்போம். சோதனைகளைச் சவாலாக ஏற்று, நம் உள்ளத்தின் ஒளியை வெளிக்கொணர்வோம். அப்போதுதான் வாழ்க்கைப் போராட்டமானது வாழ்க்கைப் பெருமையாக மாறும். அடுத்தவர் பார்வையின் போக்கை ஒறுத்து, முன்னேற்ற நோக்கத்தை வலிமையாக்கிச் சோதனைக் களங்களைத் தாண்டி வாழ்ந்து முடிப்போம்.
![]()
